அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 30 ஜூன், 2012

இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்!நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக
கூறினார்.

மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.
பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.
by ISLAMIYA pengal
http://www.facebook.com/page.islamiyapengal
 — with Mohamed Ibrahim Ahk

பெண்களை குறை கூறும் ஆண்மக்களே!?!?! இது உங்களுக்காக!அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!!!

[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.

''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.

அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

o அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.

o அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.

o அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.

o அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.

இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான 'அல் அஹ்ஸாப்' – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.

இதோ அந்த திருவசனம்;

"நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்." (33:35)

இதில் ஒன்பதாவதாக "தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்" என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.

திருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.

ஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, "யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்" என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.

ஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது "எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது" என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.


இறை உதவி ஆணுக்கும் பெண்ணுக்கும்

கற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.

அதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார். இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.

இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.


கற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்

o அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.

o அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம்.

ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை இழக்கிறார்கல் என்பதை தெளிவு படுத்துகிறார்கள்.


பார்வை

இவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான் திருமறையிலும், திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

"நபியே! முஃமினான ஆண்களுக்கு நீங்கள் கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும் (அல் குர் ஆன் 24:30)

இந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,.எத்தனை ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா?!


ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"அலீயே! யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம் பார்வையை தொடராதே! ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல." 

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.

ஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண் மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவுகிறார்கள்.

வீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர் திரும்ப வந்து "எங்களின் தந்தை உங்களை அழைத்தார்" என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். செல்லும்போது வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.

நடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றன.

ஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள். அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு "நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்" என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.

ஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

"உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்" என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

"புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது" என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

வல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

ஜஸாக்கல்லாஹு கைர் மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி.

__._,_.___
Recent Activity:
OPINIONS SHARED BY GROUP MEMBERS DO NOT REPRESENT THE VIEWS OF THE MODERATORS.

.

__,_._,___

வெள்ளி, 29 ஜூன், 2012

சிந்திக்க ஒரு செய்தி....


வண்டியை திருடியவரை கைகால் வெளங்காம ஆக்குற சக்தி வெட்டுக்காளியம்மனுக்கு இருக்குதுன்னா கோயில் உண்டியலை திருடுபவர்களை வெட்டுக் காளியம்மன் ஒன்னும் செஞ்சதாகதெரியலையே.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி 

நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ 

அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. 

தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)


அந்த மூன்று விஷயங்கள்[8] மூன்று பெறும் பாவங்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,

 1. அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று கூறினார்கள். நான், "நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன்.
 2. "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது" என்று கூறினார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள்,
 3. "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது" என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி) முஸ்லிம்)


-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....வியாழன், 28 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[7] வஹியுடன் நேர்பட்ட மூன்று விடயங்கள்:

வஹியுடன் நேர்பட்ட மூன்று விடயங்கள்:

மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப 'வஹி' அருளியுள்ளான். அவை, 

 1. 'இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!' என்று நான் கூறியபோது, 'மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!" (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது. 
 2. 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது. 
 3. நபி(ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் 'உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்' என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது" என உமர்(ரலி) அறிவித்தார்.

ஆதாரம்;புஹாரி எண் 402

 

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....


புதன், 27 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[6] இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் அறிவித்துத்தந்த மூன்று செய்திகள்.

உண்மையான இறைத்தூதர்:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்" என்று கறினார்கள். பிறகு:

 1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?"

என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்" என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), "வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!" என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,

 1. "இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும்.
 2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
 3. குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), "தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள். பிறகு, "இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்" என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), "உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்" என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!" என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்" என்று கூறினார்கள். உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்" என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....
செவ்வாய், 26 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[5] நன்மையை நாடி பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மஸ்ஜிதுகள் மூன்றாகும்:

நன்மையை நாடி பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மஸ்ஜிதுகள் மூன்றாகும்:

 1. 'மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவில் அமைந்துள்ளது).
 2. மஸ்ஜிதுன் நபவி (மதீனாவில் அமைந்துள்ளது).
 3. மஸ்ஜிதுல் அக்ஸா (பஃலஸ்தீனில் அமைந்துள்ளது) ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: புஹாரி)

--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....
திங்கள், 25 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[4]இரண்டு விதமான கூலிகளை பெறுபவர்கள்: !

மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன.

 1. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர்.
 2. மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.
 3. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புஹாரி).

--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....ஞாயிறு, 24 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[3] ''மார்க்க கல்வியின் சபைகளை தேடிச் சென்றால்....!

"நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர்:

 1. வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார்.
 2. மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான்.
 3. மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்"

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: புஹாரி).


--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....


சனி, 23 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[2] ''இவர்தான் நம்பிக்கையாளர்!

இவர்தான் நம்பிக்கையாளர்!

 1. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் அண்டை வீட்டாரை நோவிக்காமல் இருக்கட்டும்.
 2. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.
 3. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆதாரம்: புஹாரி).

--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் எழுதி இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....

வெள்ளி, 22 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[1] ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:

ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:

"எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)

 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராவது,
 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் எழுதி இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....

புதன், 20 ஜூன், 2012

ஷிர்க் மற்றும் பித்'அத்திற்கு எதிராக 1918-ல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வழங்கிய ஃபத்வா மார்க்க தீர்ப்பு!

ஷிர்க் மற்றும் பித்'அத்திற்கு எதிராக களமிறங்கியவர்கள் நாங்கள் தான் என்று நேற்று வந்த சிலர் மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1918லேயே ஷிர்க் மற்றும் பித்'அத் பற்றிய கேள்விகளுக்கு அவைகளை செய்யக்கூடாது என தாய்க் கல்லூரி என அழைக்கப்படும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா வழங்கியுள்ளது. அவற்றைப் படித்து திருந்தவேண்டியவர்கள் திருந்தட்டும்.

1918 நவம்பர் 19ஆம் தேதியிட்ட ஃபத்வா (பதிவேடு பக்கம்: 194, 195) ஒன்று, இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் பல்வேறு சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது. 

அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாக, மைசூரைச் சேர்ந்த மௌலவி, சையித் அப்துல்லாஹ் அவர்களின் மகன் சையித் அஹ்மத் அவர்கள் ஒன்பது கேள்விகளைக் கேட்டிருந்தார். அவை வருமாறு;

வினா: 

1. மய்யித்திற்கு அணிவிக்கப்படும் கஃபனில் திருக்கலிமாவையோ, திருக்குர்ஆனின் வசனங்களையோ எழுதி மய்யித்தை அடக்கம் செய்வது, இக்லாஸ் அல்லது தபாரக் சூராக்களை ஓதி மண் கட்டியில் ஊதி மய்யித்துடன் வைப்பது, பீர்களின் ஷஜராவை (வம்சப் பெயர்கள் அடங்கிய படம்) கப்றில் வைப்பது ஆகியன பற்றி தீர்ப்பு என்ன?
2. மய்யித்தை அடக்கம் செய்தபின் ஒரு தடவையும் 40 அடி நடந்தபின் ஒரு தடவையும், மய்யித்தின் வீட்டை அடைந்தவுடன் ஒரு தடவையும் ஃபாத்திஹா ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? 
3. மய்யித்தை அடக்கம் செய்த மூன்றாம் நாளில் ஜியாரத்துச் செய்து பேரீத்தம்பழம், மிட்டாய், சந்தனம், பூ ஆகியவற்றைப் பகிர்வதும் கப்றுமீது சந்தனம், பூ போடுவதும் கப்றில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து ஃபாத்திஹா ஓதுவதும், சம்பிரதாயப்படி ஏழு, பத்து, இருபது, முப்பது மற்றும் நாற்பதாம் நாள் ஃபாத்திஹா ஓதுவதும், 'நாற்பது தபாரக் கலசங்கள்' என்று சொல்லி மண் கலசங்களை கப்றுமீது சாத்துவதும் கூடுமா? 
4. மேற்கண்ட சடங்குகளை 'கட்டாயம்' எனக் கருதி செய்வதும், இச்சடங்குகளைத் தவிர்ப்போர் பழிப்புக்குரியவர்கள் எனக் கருதுவதும் சரியா? 
5. ஆண்டுதோறும் ஷைகு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களது பெயரால் 'கியார்வீன்' செய்வது, அவர்களின் பரக்கத்தைப் பெறுவதாக எண்ணி அந்த உணவை மரியாதையோடு புசிப்பது, ஹள்ரத் ஸாலார் மஸ்ஊத் ஙாஸி பெயரால் கந்தூரி நடத்துவது, இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பெயரால் பூரியான் ஃபாத்திஹாவைக் கண்ணியத்துடன் செய்வது ஆகியன பற்றி சட்டம் என்ன? 
6. முஹர்ரம் மாதத்தில் வெள்ளிப் பெட்டி, ஷர்பத் முதலான பானங்களை வைத்து ஹுசைன் (ரலி) அவர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதுதல், பஞ்சா மீது நடந்து ஜனங்களின் தலை மற்றும் முகத்தில் பூசுதல், மயில் இறக்கையை தடவுதல் ஆகியன பற்றி சட்டம் என்ன? 
7. கப்றாளிகளிடம் தேவைகளை முறையிடுவது கூடுமா? 
8. அவ்லியாக்கள் பெயரால் நேர்ந்துவிடப்பட்ட பிராணிகளை, 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' சொல்லி முறைப்படி அறுத்திருந்தால், அதன் மாமிசத்தை சாப்பிடுவது கூடுமா? 
9. 'உருஸ்'களின்போது, நிகழ்த்தப்படும் கவாலி, கவிதை, கதை ஆகியவற்றைக் கேட்பதால் நன்மை கிடைக்கும் என நம்புவது சரியா? 

இக்கேள்விகளுக்கு அஃலா ஹள்ரத் அவர்கள் அளித்த விடையைப் பார்ப்போம்.

விடை: 

நாம் அல்லாஹ், ரசூல்மீது விசுவாசங்கொண்டு கலிமாச் சொன்னவர்கள். இதிலிருந்து, வணக்கத்துக் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் தஆலாவின் ஏவல் – விலக்கல்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே வணக்கம் என்பதன் பொருளாகும். ஏவல்களும் விலக்கல்களும் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கிடைத்தவையாகும். நமது இறைவனின் ஏவல் – விலக்கலுக்கும், சுன்னத்துக்கும் மாற்றம் செய்வது, மேற்சொன்ன விசுவாச வாக்குமூலத்திற்கு எதிரானதாகும்; முஃமினுக்கு உகந்த செயலன்று. 

இந்தஅடிப்படையில், கேள்வியில் கண்டுள்ள விஷயங்கள் – காரியங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் இவை, குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்தோ, ஸஹாபா பெருமக்களின் சொல் மற்றும் செயலில் இருந்தோ, இமாம்களின் கூற்றுகள் மூலமோ உருவானவை அல்ல. இவை யாவும் பித்அத்து மற்றும் மக்ரூஹ்களாகும். அவற்றில் சில ஹராம் ஆகும். மற்ற சிலதில் குஃப்ரின் சாயல் உண்டு. இதன் முழு விபரம் மார்க்க நூல்களில் காணக்கிடைக்கிறது. இப்போது அவை ஒவ்வொன்றையும் விவரித்துக் கூற நமக்குப் போதிய சந்தர்ப்பம் இல்லை. இதனால் இறைவாக்கு ஒன்றை நினைவுபடுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறோம். 

அல்லாஹு தஆலா சொல்கிறான்: எவர் ஓர் அணுவளவு நன்மை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். எவர் ஓர் அணுவளவு தீமை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். (99:7,8) 

ஆக, முஃமின்கள் ஒவ்வொரு விஷயம் குறித்தும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதன்படி செயல்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்று, உயர் அந்தஸ்து பெற அவர்கள் முயல வேண்டும். நல்ல மனிதர் என்ற பெயரைப் பெறுவதற்கும், நல்ல எதிர்பார்ப்பை உடையவராக ஆவதற்கும் பாடுபட வேண்டும். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகம் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அங்கு குழுமியிருந்தோர் அந்த மய்யித்தைப் பற்றி 'நல்ல மனிதர்' எனப் புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். அதைச் செவியேற்ற அண்ணலார் 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். 

சற்று நேரத்தில் வேறொரு ஜனாஸா வந்தது. அந்த மய்யித்தைப் பற்றி 'கெட்ட மனிதர்' எனக் கூடியிருந்தோர் பேசிக்கொண்டனர். அப்போதும் 'உறுதியாகிவிட்டது' என நபியவர்கள் சொன்னார்கள். பின்னர், இரண்டு ஜனாஸா விஷயத்திலும் ஒரே வார்த்தையை '(உறுதியாகிவிட்டது)' அண்ணலார் சொன்னதன் நோக்கம் என்ன என்று தோழர்கள் வினவினர். 

அதற்கு "நீங்கள் அல்லாஹ்வின் நிலத்தில் அவனது சாட்சியாளர்களாக இருக்கிறீர்கள். எவரை நீங்கள் 'நல்லவர்' எனப் புகழ்ந்து கூறுகிறீர்களோ அவருக்கு 'சொர்க்கம்' உறுதியாகிவிட்டது. எவரைக் 'கெட்டவர்' எனக் குறைகூறுகிறீர்களோ அவருக்கு 'நரகம் உறுதியாகிவிட்டது' – என அண்ணலார் விளக்கினார்கள். 

இன்னொரு விஷயத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது ரங்கூனிலிருந்து ஃபத்வா கேட்டு நம் மதரஸாவுக்குச் சில கேள்விகள் வந்தன. அதற்குப் பதில் தரப்பட்டது. அந்த பத்வா நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம். அதையும் கவனத்தில் கொண்டு, சுன்னத்துக்கேற்ப அமல் செய்யுங்கள். ஆதாரமற்ற – பித்அத்தான செயல்களை விட்டொழியுங்கள். 

(இதை தம் கைப்பட எழுதி, நகல் எடுக்குமாறும் பணித்தார்கள்.) 

ஒப்பம், 

அப்துல் வஹ்ஹாப்
(கானல்லாஹு லஹூ) 

பதில் சரியானதே ஒப்பம் 

முஹம்மது அப்துல் ஜப்பார், ஷைகு ஆதம்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

அப்துர் ரஹீம் முஹம்மது யஃகூப்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

முஹம்மது அப்துல் அலி முஹம்மது ஹஸன் பாஷா
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

தேதி: 19 நவம்பர், 1918.
பத்வா பதிவேடு பக்கம், 194, 195 


--  S.A.SULTHAN


இணைவைப்பை தோற்றுவித்தவரின் மறுமை நிலை.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நபி(ஸல்) அவர்கள், 'குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு
ஆமிர் இப்னி லுஹய் என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்தான் முதன் முதலில் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி)விட்டவர்" என்று கூறினார்கள்''
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்; புகாரி., எண் 3521

ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த 
முதல் வழிகேடன் அவனே. அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா,
ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் 
பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹூல் பாரி)

இணைவைப்பை தோற்றுவித்தவரின் மறுமைநிலை கண்டு, இணைவைப்பில் இருப்பவர்கள் சிந்திப்பார்களா?

திங்கள், 18 ஜூன், 2012

குறைஷிகள் முஷ்ரிக்குகள் ஆனது யாரால்...?


அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். 

காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய், சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே, மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர்.

அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான். அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது. ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால் அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன் எண்ணினான். எனவே, அவன் மக்கா திரும்பியபோது,''ஹூபுல்'என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான். அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான். அவர்களும் அதை ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைத்தனர். மக்காவாசிகள் இறை இல்லம் கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், புனித நகரமான மக்காவில் வசிப்பவர்களாக இருப்பதாலும் அவர்களையே தங்களது முன்னோடிகளாக எடுத்துக்கொண்டு ஹிஜாஸ் பகுதியின் ஏனைய மக்களும் சிலை வழிபாட்டில் அவர்களைப் பின்பற்றினர்.

''ஹூபுல்' என்பது செந்நிறக் கல்லில் மனித உருவாகச் செதுக்கப்பட்ட ஒரு சிலை! அதன் வலது கரம் உடைந்திருந்தது. அதற்கு குறைஷிகள் தங்கத்தினால் கை செய்து அணிவித்தனர். இதுதான் மக்கா இணைவைப்பாளர்களின் முதல் சிலையாகும். இதை மிகுந்த மகத்துவமிக்கதாகவும் புனிதமிக்கதாகவும் குறைஷிகள் கருதினர். (கிதாபுல்அஸ்னாம்)

ஆதாரம்; ரஹீக் அல் மக்தூம். தமிழாக்கம். பக்கம்; 27 -28

சனி, 16 ஜூன், 2012

ஷீயா'க்களை அறிந்து கொள்வோம்; உஷாராக இருப்போம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீயாயிஷமாகும்.

ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.
 
நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீயாக்கள் தமது தவறான சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்.
'நபியவர்களுக்குப் பின்னர், அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என அல்லாஹ் குர்ஆனிலும் கூறியிருக்கின்றான். இவர்கள் அந்த ஆயத்துக்களை நீக்கிவிட்டனர். அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகிய மூவரும் அலி(ரழி) அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர். அதற்கு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் உடந்தையாக இருந்தனர். எனவே, நபித்தோழர்கள் அனைவரும் காபிராகி விட்டனர்' என்று அவர்கள் கூறினார். இவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பல கருத்துக்களைக் கொண்டவர்கள்தான் ஷீயாக்களாவர். எல்லா வகையான வழிகேடுகளும் இந்த ஷீயாக்களிடம் குடிகொண்டுள்ளன.
 
குர்ஆன் மாற்றப்பட்டு விட்டதாக நம்புகின்றனர்:
நபித்தோழர்கள் குர்ஆனை மாற்றிவிட்டனர் என்பது ஷீயாக்களின் நம்பிக்கையாகும். நம்மிடம் ஸஹீஹுல் புஹாரி பெற்றிருக்கும் அந்தஸ்தை அவர்களிடம் 'அல்காபீ' எனும் நூல் பெற்றுள்ளது. இந்த நூலில், 'நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட ஆயத்துக்களின் எண்ணிக்கை பதினேழாயிரமாகும். எனக் கூறுகின்றனர்.
உண்மையான முழுக்குர்ஆனும் தமது இமாம்களிடம் இருப்பதாகவும் நம்புகின்றனர். தம்மிடம் முஸ்ஹபு பாத்திமா உள்ளது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் குர்ஆனில் இருக்கக்கூடிய ஒரு எழுத்துக்கூட அதில் இல்லை என அவர்களின் முக்கிய இமாம் ஜஃபர் ஸாதிக்(ரழி) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது.
 
குர்ஆனில் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை விளக்கி 'பஸ்லுல் கிதாப் பி இஸ்பாதி தஹ்ரீபி ரப்பில் அர்பாப்' என்ற பெயரில் நூரி அத்தப்ரிஸீ என்பவர் தனி நூலையே எழுதியுள்ளார். ஷீயாக்களின் இஸ்னா அக்ஷரிய்யா பிரிவினரிடம் குர்ஆன் மாற்றப்பட்டு விட்டது என்ற கொள்கை பரவலாக உள்ளது.
 
ஹதீஸ் தொடர்பில் இவர்களது நம்பிக்கை:
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹதீஸ் என நம்புவதை ஷீஆக்கள் ஹதீஸ் என நம்புவதில்லை. தாம் நம்பக்கூடிய தமது இமாம்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் செய்திகளையே இவர்கள் ஹதீஸ் என்று கூறுகின்றனர். ஆரம்ப காலத்திலிருந்தே ஷீயாக்கள் போலி ஹதீஸ்களை இட்டுக் கட்டுவதில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தனர். தமக்குத் தேவையானதை ஹதீஸ் என்ற பெயரில் புனைந்து அதற்கு ஸனத் எனும் அறிவிப்பாளர் தொடர்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
 
ஸஹாபாக்கள்:
நபித்தோழர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்றவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் சுவனவாசிகள் என சுபசோபனம் சொல்லப்பட்டுள்ளனர். பைஅதுர் றிழ்வானில் பங்கு கொண்ட 1400 ஸஹாபாக்களும் நரகம் செல்லமாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
'முஹாஜிர்கள் அன்ஸார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களுக்கு சுவனம் தயார் பண்ணப்பட்டுள்ளது' என குர்ஆன் கூறுகின்றது. 'பத்ர் ஸஹாபாக்கள் சுவனவாசிகள்' என்றெல்லாம் ஹதீஸ் கூறுகின்றது.
ஆனால் ஷீயாக்களோ சுமார் 17 பேர்களைத் தவிர ஏனைய ஸஹாபாக்கள் நரகவாசிகள் என்று கூறுகின்றனர். அபூபக்கர், உமர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என தொடர்ந்து சபித்து வருகின்றனர்.
 
அபூபக்கர்(ரழி) அவர்கள் ஷைத்தானின் கொம்பு என்றும் அவரும் அவரது தோழர் உமரும் முனாபிக்குகள், பொய்யர்கள், அநியாயக்காரர்கள். இவர்கள் இருவரின் இமாமத்தை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் ஜாஹிலிய்யத்தினதும், வழிகேட்டினதும் மரணத்தையே அடைவர் என்றும் கூறுகின்றனர். (அத்தராயிப் பீ மஃரிபதித் தவாயிப் 401)
உமர்(ரழி) அவர்கள் ஸிஹாக் எனும் விபச்சாரிக்குப் பிறந்தவர் என்றும் இதே நூல் கூறுகின்றது.
உஸ்மான்(ரழி) அவர்கள் சபிக்கப்பட்டவர். அசத்தியத்தில் இருந்தார் என 'தீகதுஷ் ஷீயா' என்ற நூல் கூறுகின்றது. ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் எழுதப்பட்ட 'தும்ம இஹ்ததைத்து' என்ற நூலும், 'அஷ்ஷீஆ ஹும் அஹ்லுஸ்ஸுன்னா' என்ற நூலும் நம்மிடம் நடைமுறையில் உள்ள ஹதீஸ்களைத் தப்பும், தவறுமாக விளக்கி முன்னைய மூன்று குலபாக்களையும் காபிர்கள் எனக் கூறும் விதத்தில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
தனி மனித வழிபாடு:
தனி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீயாயிஷம் உள்ளது. அலி(ரழி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி(ரழி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில், 'லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா' பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.
தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.
 
கப்று வழிபாடு:
முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைத்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜிற்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஹுஸைன்(ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரச்சாரம் செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்து தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.
கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தைவிட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 'யா ஹுஸைன்! யா ஹுஸைன்!' என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
 
முத்ஆ திருமணம்:
தான் விரும்பும் பெண்ணை தற்காலிகமாகத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இவர்களிடம் இருக்கின்றது. இதை ஆதரித்து இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சின்னப் பிள்ளைகளையும் இதற்காகப் பயன்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். ஒரு முறை உறவு கொள்வதற்காகக் கூட வாடகைப் பெண்களை அமர்த்திக் கொள்ளலாம் என நம்புகின்றனர்.
 
'முத்ஆ என்பது எனதும் எனது முன்னோர்களினதும் தீனாகும். யார் அதைச் செய்தாரோ அவர் எமது மார்க்கத்தின்படி செயற்பட்டவராவார். யார் அதை மறுத்தாரோ அவர் எமது மார்க்கத்தை மறுத்தவராவார், வேறு மார்க்கத்தை நம்பியவராவார்' என அவர்களது இமாம் ஒருவர் கூறியதாக 'மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்' (3:3661) என்ற ஷீயாக்களின் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த அடிப்படையில் முத்ஆ என்பது ஷீஆ மதத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. ஷீஆ மத குருக்கள் பெண்கள் மத்தியில் ஒரு முறையேனும் நீங்கள் முத்ஆவில் ஈடுபடுங்கள் என்று போதிக்கும் காட்சிகளை இன்றும் நாம் இணையத்தளங்களில் காணலாம்.
 
இந்த விபச்சாரத்தின் மீது பெண்களைத் தூண்டும் விதத்தில் ஏராளமான செய்திகளை இட்டுக்கட்டியுள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் இஸ்ரா சென்றபோது, 'முஹம்மதே உமது உம்மத்தில் உள்ள முத்ஆ திருமணம் செய்யும் பெண்களை நான் மன்னித்து விட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்' என ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். (மன்லாயஹ்லுருஹுல் பகீஹ்: 2:493) என்று ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.
 
இன்னமும் ஈரான், பஹ்ரைன் ஷீயாக்களிடம் இந்தப் பழக்கம் இருப்பதையும், பாடசாலைச் சிறுமிகளைக் கூட இதற்கு சாதகமாகத் தூண்டுவதையும் இணையத்தளங்களில் காணலாம். ஷீயாக்களை ஆதரிப்பவர்கள் இதையும் ஆதரிப்பார்களா?
 
தகிய்யா:
பொய் பேசுதல், உள்ளொன்று வைத்து வெளியில் அதற்கு மாற்றமாக வேஷம் போடுதல் என்பது இதன் அர்த்தமாகும்.
இவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களைக் காபிர் என்று கூறுவர். ஆனால் அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களை மதித்து நடந்துள்ளார்கள். உமர்(ரழி) அவர்களைக் காபிர் என்பார்கள். ஆனால் அலி(ரழி) அவர்கள் தமது மகள் உம்மு குல்தூமை உமர்(ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். இந்த முரண்பாட்டை நீக்குவதற்காக இந்தத் 'தகிய்யா' கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
 
உள்ளொன்று வைத்து அதற்குப் புறம்பாக நடப்பது மார்க்கக்கடமை. அந்த அடிப்படையில்தான் அலி(ரழி) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறுவர். இன்றும் இவர்களது எல்லா வழிகேடுகளையும் இதை வைத்தே பாமர மக்களிடம் மூடி மறைத்து வருகின்றனர்.
 
தகிய்யா என்ற நயவஞ்சகத்தனம் இல்லாதவனுக்கு தீனே இல்லை என இவர்களது உஸுலுல் காபீ (2:217, 223) கூறுகின்றது.
 
இவர்களது ஒரு அறிஞர் அல் இஃதிகாதாத் (114 – 115) என்ற நூலில் 12 ஆம் இமாம் வரும் வரை தகிய்யா (எனும் நயவஞ்சகத்தனம்) வாஜிபாகும். அதனை நீக்கிட முடியாது. 12 ஆம் இமாம் வருவதற்கு முன்னர் யார் அதனை விட்டு விடுகின்றாரோ அவன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும், இமாமிய்யத் மதத்தையும் விட்டவனாவான். அவன் அல்லாஹ்வுக்கும், இமாம்களுக்கும் மாறு செய்தவனாவான் என்று எழுதியுள்ளனர்.
 
இவர்களது 12 ஆம் இமாம் வந்து நீதியை நிலைநாட்டுவார் என்றும், அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) அவர்களை எழுப்பி சிலுவையில் அறைவார் என்றும், அவர்களை அறைவதற்கு முன்னர் பச்சை மரமாக இருந்த அந்த (சிலுவை மரம்) இவர்களை அடித்ததும் காய்ந்துவிடும் என்றெல்லாம் நம்புகின்றனர்.
 
இவ்வாறு இந்த ஷீஆக்களிடம் இல்லாத வழிகேடே இல்லை எனலாம். ஷீயாயிஸம் பரவுகின்ற பகுதிகளில் பரவலாக வன்முறைகள், குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதையும் காணலாம். இந்த சீரழிந்த சிந்தனைகளை இலங்கையில் பரப்புவதற்குப் பெருத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
இன்றைய அரசியல் உலகில் ஈரான் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்படுவதால் சிலர் ஷீயாயிஸத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் பலரும் அவர்களது பிரச்சார முயற்சிகளுக்குப் பலியாகி ஷியாயிஸத்தையும் ஒரு மத்ஹபு போன்று, சாதாரண ஒரு இயக்கம் போன்று பார்க்கின்றனர். இது தவறாகும். ஷீயாயிஸம் என்பது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒரு தனியான மதமாகும். அவர்கள் நம்பும் குர்ஆன் வேறு, அவர்கள் நம்பும் ஹதீஸ் வேறு, அவர்களது அகீதா கோட்பாடு வேறு, அவர்கள் முன்வைக்கும் ஈமானிய அம்சங்கள் வேறு. எனவே, இவர்களது பிரச்சாரம் குறித்து விழிப்பாக இருப்பது அவசியமாகும்.
இவர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது அறிஞர்களின் அடிப்படையான கடமையாகும்.
 
அல்லாஹ்வால் புகழப்பட்ட ஸஹாபாக்களைத் தூற்றுபவர்களுடன், நபியவர்களின் மனைவியர்களான ஆயிஷா(ரழி), ஹப்ஸா(ரழி) ஆகியோரைக் கேவலப்படுத்துபவர்களுடன் நட்புறவுக்கோ அல்லது சமரசத்திற்கோ அறவே இடமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஷீயாக்கள் குறித்து விழிப்புணர்வுடனும், தெளிவுடனும் இருக்குமாறு இஸ்லாமிய மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி;எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) -ஆசிரியர்உண்மை உதயம் மாதஇதழ்
 

வெள்ளி, 15 ஜூன், 2012

மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1


இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. [நூல்;புஹாரி எண் 3207 ]
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.


எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார்.[முஸ்லிம்]இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்;
 1. ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ் நியமித்துள்ளான்.
 2. அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
 3. ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
 4. அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்] வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
 5. ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]


படிப்பினைகள்; எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.


பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.


'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். [நூல்;புஹாரி எண் 304 ]


இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.


மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861படிப்பினைகள்;புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!


அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 


('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]


இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர்.


அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்] அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.


எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!


-உங்கள் சகோதரன்; முகவை எஸ்.அப்பாஸ்.