அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 13 செப்டம்பர், 2010

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வுகள்[2]; போதுமென்ற மனமே..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, வளைகுடா  போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.


"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.[தினமலர்].

அன்பானவர்களே! நிறைய சம்பாதிக்கவேண்டும்; நிரப்பமான மகிழ்ச்சியாக  வாழவேண்டும் என்ற நோக்கமுடையவர்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்  மட்டுமன்றி, உள் நாட்டிலே வாழ்ந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாக்கனிதான்.

ஏனெனில், நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற  ஆவலில் ஒரு குடும்பத்தில் கணவனும்-மனைவியும் பணிக்கு செல்கின்றனர். இதனால் கணவனும் மனைவியும் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்து, அலுவலகத்தில் இருக்கும் நேரம் அதிகரிக்கிறது. வீடு வந்தாலும் பணிச்சுமை காரணமாக  அவரவர் மனம் ஓய்வைத்தன் நாடுகிறதே தவிர; கணவனும்- மனைவியும் மனம்விட்டு மகிழ்ச்சியாக பேசுவதற்கு இயலவில்லை. அப்படியே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும் அதுவும் பெரும்பாலும் இயந்திரத்தனமாகவே இருக்கும்.

மேலும், இவ்விருவரும் பணிக்கு செல்வதால் பெற்ற குழந்தைகள பெற்றோரின் பாசத்திற்கு எங்கும் நிலை.  இவ்வாறாக பல்வேறு காரணங்களை கூறலாம். எனவே, பறப்பதற்கு ஆசைப்பட்டு; இருப்பதை விட்ட கதையாக, வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இருந்ததையும் இழந்து நிற்கிறது மனித சமுதாயம்.

எனவேதான் அன்றே இஸ்லாம் இதற்கு அழகான தீர்வை சொன்னது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;


(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். நூல்; புஹாரி எண் 6446
 
இறைத்தூதரின் இந்த இனிய பொன்மொழியை இன்றைய ஆய்வுகள் ஒருபுறம் உண்மைப் படுத்திக் கொண்டிக்க, இந்த பொன்மொழியை சிரமேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய முஸ்லிம் சமுதாய மக்களில் பெரும்பாலோர் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பாலைமணலில் ஆயுளை அற்பமாக கழித்துக் கொண்டிருக்கிறோம். [நான் உட்பட]
 
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொன்ன 'போதுமென்ற' மனதை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை நமக்கு வழங்கிடுவானாக! 

சனி, 11 செப்டம்பர், 2010

அரசியல் தலைவர்களும் - அகிலத்தின் அருட்கொடையும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
'பாதுகாப்பு என்பது, கட்சித் தலைவர்களுக்கு முக்கியம் அல்ல. மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்'
இந்த அற்புதமான கருத்தை மொழிந்தவர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆவார். அவரின் கருத்திற்கேற்ப, தமிழக மற்றும் இந்திய அளவில் மக்களின்  பாதுகாப்பு  என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

ஒருவன் கலையில் தனது வீட்டைவிட்டு பணி நிமித்தமாக வெளியே சென்றால், அவன் மீண்டும் வீடு திரும்புவானா என்ற உத்திரவாதம் இல்லை. தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலும், ஏனைய பகுதிகளிலும்  நடைபெறும் தொடர்கொலைகள் இதை உறுதிப்படுத்துகிறது.

நேற்றுக் கூட சென்னையில் பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஒருவர் சில ரவுடிகளால் சினிமாவில் வருவது போன்று சர்வசாதரணமாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்படுகிறார். பெற்றவர்களின் கண்முன்னே இந்த படுபாதகம் அரங்கேறுகிறது. கொலை மட்டுமல்ல. கொள்ளைகளுக்கும் குறைவில்லை. அண்ணாதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதா கூறியது போன்று மிட்டாய்களை கூட பேங்கின் லாக்கரில் வைக்கவேண்டிய அளவுக்கு கொள்ளைகளுக்கும் குறைவில்லை.

விபச்சராம் நவீனமாகி ஆன்லைன் விபசாரம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. இதுபோக பல்வேறு போலிகள், மோசடிகள் இவ்வாறாக சட்டத்திற்கு சவால்விடும் ஏராளமான் குற்றச்செயல்கள் நாட்டில் அரங்கேறிக் கொண்டுள்ளதை நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

அவ்வாறாயின், இவ்வாறான குற்றங்களை தடுத்து நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பளித்து சுபிட்சமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டிய காவல்துறை எங்கே..? என்ற கேள்வி வருகிறதல்லவா.! ஆம்! காவல் துறை இருக்கிறது. ஆனால் மக்களை பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட காவல்துறையின் பெரும்பகுதி காவலர்கள், மக்களின் பிரதிநிதிகள் எனக் கருதப்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரமுகர்கள், சிலைகள் இவற்றைக் காப்பதற்கு பயன்படுத்தப் படுகிறார்கள்.

ஆம்! சமீபத்தில் அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு  வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்  என அவரது கட்சி முக்கிய தலைவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள். இதையொட்டி ஜெயலலிதாவுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை விவரித்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

ஜெயலலிதாவுக்கு 'இசட்பிளஸ்' பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் 'என்.எஸ் .சி' பாதுகாப்புக்கு உரியவர் என்பதால்  அவருக்கு தமிழ்நாடு காவல்துறையிலிருந்து,
 •  இரு காவல்துறை கண்காணிப்பாளர்கள்.
 • மூன்று ஆய்வாளர்கள்.
 • 12 உதவி ஆய்வாளர்கள்.
 • 58 காவலர்கள்.
ஆக 75 காவலர்கள்.
இதுபோக அவர் பயணிக்கும் போது அவரது வாகனத்திற்கு முன்னும்  பின்னும் அணிவகுக்கும் 12 காவலர்கள். மேலும், ஓட்டுனருடன் கூடிய குண்டு துளைக்காத கார். அதோடு அனைத்து காவலர்களுக்கும் நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்படுள்ளது. மேலும், அவர் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது 2000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு.

இதுமட்டுமன்றி, அவர் போயஸ்தோட்டத்தில் இருந்தாலும், கொடநாடு -சிறுதாவூர் பங்களாக்களில் இருந்தாலும் இதே அளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

என்ன சகோதரர்களே! மூச்சு  வாங்குகிறதா..?

ஜெயலலிதா என்ற எதிர்கட்சித் தலைவருக்கே இத்தனை பாதுகாப்பு; இத்தனை காவலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்  என்றால், முதல்வருக்கு இதையும் தாண்டி இருக்கலாம். கவர்னருக்கு முதல்வரையும்  தாண்டி இருக்கலாம். பிரதமருக்கு கவர்னரையும் தாண்டி இருக்கலாம். ஜனாதிபதிக்கு பிரதமரையும் தாண்டி பாதுகாப்பு இருக்கலாம்.

ஆக, மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட காவலர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இவ்வாறாக முக்கியப் பிரமுகர் பாதுகாப்பையே பிரதானமாக கொண்டு செயல்படுத்தப்படுவதால், மக்களை பாதுகாக்கும் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. காவலர்கள் எண்ணிக்கை குறையும்போது, குற்றச்செயல்கள் அதிகரிக்கவே செய்யும்.

எனவே, அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு அவரது முன்புறமும்,பின்புறமும், வலது மற்றும் இடது புறமும் அணிவகுக்கும் ஆயுதம் ஏந்திய நான்கு காவலர்கள் மட்டுமே அரசின் செலவில் வழங்கப்பட வேண்டும். அதையும் தாண்டி  ஒருவர் தனக்கு பாதுகாப்பு தேவை என அவர் கருதினால், அவர் கூடுதலாக கேட்கும் காவலர்களுக்குரிய ஊதியம் உள்ளிட்ட அத்துணை செலவினங்களையும் சம்மந்தப்பட்ட பிரமுகரே ஏற்கவேண்டும். இல்லையேல் அவர் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறாக  சட்டம் கொண்டுவந்தால்தான் மக்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்கள் கிடைப்பதோடு, மக்களின்  வரிப்பணமும் மிச்சமாகும்.

இல்லையேல், வார்டு கவுன்சிலர் கூட 'இசட்பிளஸ்' பாதுகாப்பு கேட்கும் நிலை உருவாகும். இங்கே இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமது வெளியுறவுக் கொள்கையினால் உலகமெங்கும் எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபராக உள்ள ஒபாமா கூட, பல நேரங்களில் எவ்வித பாதுகாப்பு  அதிகாரிகள் துணையின்றி, சர்ச்சுக்கும் மார்க்கெட்டிற்கும் சகஜமாக  சென்றுவருவதை பத்திரிக்கையில்  பார்க்கிறோம். ஆனால் நம்முடைய தலைவர்களுக்கோ பாத்ரூம் போனாலும் பாதுகாப்பு வேணும் என்று சொல்லும் நிலைதான்  உள்ளது.

இந்த நேரத்தில் அகிலத்தின் அருட்கொடையாக, அல்லாஹ்வின் திருத்தூதராக, அரபுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த முஹம்மத்[ஸல்] அவர்கள் வாழ்கையை நாம்  இவர்களுக்கு முன்வைக்கிறோம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;.


நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், 'என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார் ?' என்று கேட்டார். நான் 'அல்லாஹ்' என்று (மூன்று முறை) கூறினேன்" என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை. [நூல்;புஹாரி எண் 2910 ]

நபியவர்களின் இந்த செய்தியிலிருந்து கடவுளை நம்பாமல், காவலர்களையும், ஆயுதங்களையுமே தன்னுடைய பாதுகாவலர்களாக கருதும் பிரமுகர்களுக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது. அரபுலகத்தின் மன்னர் முஹம்மது[ஸல்] அவர்கள்,
 • தனக்கென ஒரு பாதுகாப்பு படையை வைத்திருக்கவில்லை.
 • போர் செய்துவிட்டு திரும்பியுள்ள நிலையில், எதிரிகள் தாக்கக்கூடும்  என்ற நிலையிலும் தனியாக ஓய்வெடுக்கும் துணிவு.
 • அப்படி ஓய்வெடுக்கும் போதும் தனது வாளை மரத்தில் தொங்கவிட்டுவிட்டு சகஜமாக உறங்கும் துணிவு.
 • எதிரி,  வாளை எடுத்துக்கொண்டு, உம்மை என்னிடமிருந்து காப்பவர் யார்..? என கர்ஜித்தபோது, பதறி தனது தோழர்களை துணைக்கு அழைக்காத வீரம்.
 • என்னுடைய இறைவன் அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று சாந்தமாக சொன்ன வார்த்தைகள்.
இவையாவும் எதை  உணர்த்துகிறது. நம்முடைய வாழ்க்கையின் நாட்கள் அல்லாஹ்வால் குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நாள்வரும்வரை நாம் படையோடு இருந்தாலும், தனியாக இருந்தாலும் எவரும் ஒன்றும் செய்யமுடியாது. அதே நேரத்தில் எத்துனை பெரிய படை பட்டாளத்தின் பாதுகாப்போடு இருந்தாலும், அந்த நேரம் வந்துவிட்டால் அதாவது நம்முடைய உயிர் போகும் நேரம் வந்துவிட்டால், எந்த படையாலும் நம்மை தடுத்திட முடியாது. இதற்கு சான்றாக கூட,

மெய்க்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களை கூறலாம். அவர் நினைத்திருப்பாரா இவ்வாறு நடக்கும் என்று. அங்குதான் இறைவனின் விதி தனது பணியை செய்கிறது. எனவே 40 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவனும் அதிசயமாக பிழைத்திருக்கிறான்; புல் தடுக்கி விழுந்தவனும் அதிசயமாக செத்திருகிறான். இதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!

வியாழன், 9 செப்டம்பர், 2010

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள்!ஒழுங்காக பல் துலக்கவேண்டும். இல்லையேல் வாயில்  துர்நாற்றம்  ஏற்படுத்தி பல் வழியை உண்டாக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒழுங்காக பல் துலக்காவிட்டால், வாயில் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு இதயநோயை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் அயர்லாந்து ராயல் அறுவைச்சிகிச்சை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சரிவர பல் துலக்காதவர்களின் வாயில் ஸ்டெப்ரோ காகங் என்ற பாக்டீரியா உருவாகிறது. அது ஈறுகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அதன் வழியாக ரத்தத்தில் கலக்கிறது.
பின்னர் ரத்தத்தை உறையவைத்து மாரடைப்பு போன்ற இதய சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர். ஆகவே இதய நோயிலிருந்து தப்பிக்க ஒழுங்காக பல் துலக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய பல் துலக்குதலை அன்றே வலியுறுத்தியுள்ளது வல்ல நாயனின் மார்க்கமான இஸ்லாம்;
ஒவ்வொரு தொழுகைக்கும்;
 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

"என் சமுதாயத்திற்குச் சிரமமாகி  விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்." [புஹாரி எண் 887 ]

ஜும்மா நாளன்று;
 • அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;.

"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [புஹாரி எண் 880 ]

உறங்கி விழித்தவுடன்;
 • ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.[புஹாரி எண் 1136 ]

இறக்கும் தருவாயிலும்;
 • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறை வரும்) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் நோயுற்றுவிடும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, '(இறைவா!) சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) தம் கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். பிறகு 'அவர்களின் கரம் விழுந்துவிட்டது' அல்லது 'அ(க்குச்சியான)து அவர்களின் கரத்திலிருந்து விழுந்துவிட்டது' இவ்விதம் நபி(ஸல்) அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் (அவர்களின்) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். [புஹாரி எண் 4451 ]

பல் தூக்குவதை தூய்மைக்காக சிலர் செய்யலாம்; ஆனால் அதையும் மார்க்கத்தின் அமலாக்கி ஊக்கப்படுத்தி செய்யச்சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் முக்காலமும் அறிவியலாலும், ஆய்வாலும் மெய்ப்படுத்தப்படுகிறது.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

திருவிடைச்சேரி படுகொலை; கடும் நடவடிக்கை தேவை!

கொல்லப்பட்ட இரு முஸ்லிம்கள்

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரபரப்பாகும் திருவாரூர் மாவட்டம், இந்த தடவை அதற்கு முன்பாகவே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.  வழக்கமாக பரபரப்பு உண்டாக்குபவர்கள் இந்துத்துவாக்கள்; ஆனால் இந்த முறையோ இஸ்லாமியர்கள்.

புனித மிகு ரமலான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு உள்ளாகவே, ரமலான்  எங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என காட்டியுள்ளனர் சில முஸ்லிம்கள். நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஒருவன் வம்புக்கு வந்தால், 'நான் நோன்பாளி' என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை புறக்கணித்து, வாக்குவாதம்; கைகலப்பு; கொலை என அனைத்தையும் அரங்கேற்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு இழுக்கை ஏற்படுத்தித் தந்ததோடு,

எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.[புஹாரி] என்ற இறைத்தூதரின் பொன்மொழியை புறக்கணித்ததன் மூலம் , இன்று முஸ்லிம்களின் ரத்தத்தை ஓட்டச்செய்ததன் மூலம்  நிராகரிப்பாளர்களாய் மாறவும் துணிந்து விட்டனரோ..!


எதிரிகள் எம்மைக் கருவறுக்க கண்ணில் எண்ணைவிட்டுத் தேடிக்கொண்டிருக்க, அவனுக்கு ஓய்வளித்து என் கண்ணை நானே குத்திக் கொள்கிறேன்; என் உடம்பைப் போன்ற சகோதரனை நானே சவமாக்குகிறேன் என்று துணிந்து கொலை செய்து, முதன் முதலில் தனது சொந்த சகோதரனைக் கொன்று  கொலையை அறிமுகப்படுத்திய ஆதமுடைய மக்களில் ஆதிக் கொலைகாரனாக அவதாரமெடுத்து விட்டனரோ..!

கொலைக்கு யார் காரணம்; என்ன காரணம் என்பதில் ஆளுக்கொரு கருத்து அவனியில் ஆளுமை கொண்டாலும், இறையில்லத்தை விட்டுவிட்டு, வெறும் இல்லத்தை தொழுகையிடமாக கொண்டதுதான் பிரச்சினைக்கு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். சில ஆண்டுகளுக்கு முன்னால்வரை, 'அவர்கள் அடித்தாலும்; நம்மை  தடுத்தாலும்; சஜ்தாவில் இருக்கும் போது நம்மை  குண்டுக் கட்டாக தூக்கி வெளியே போட்டாலும், மீண்டும் செல்வோம் அப்பள்ளிக்கு; மீட்டுவோம் நபிவழியில்; என்றல்லாம் சொன்ன நாம், இன்று அவை 'பித்அத்' அரங்கேறும் பள்ளிகள்; அவை இறையச்சத்தின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. எனவே நாம் முடிந்தால் எழுப்புவோம் தனிப் பள்ளி; இல்லையேல்  இயங்குவோம் இல்லத்தின் மாடியில் என்று கிளம்பியதன் விளைவு திருவிடைச்சேரியின் ரத்த ஓட்டம். எனவே முதலில் அறிஞர்கள் ஒன்று கூடி  அவசியமாக, அவசரமாக அலசவேண்டிய பிரச்சினை 'தனிப் பள்ளி அவசியமா என்பதே!

கொலையாளி சரணடைந்திருக்கிறார். அவர் 'தற்காப்புக்காகத்தான்'  சுட்டார் என்று கொலையாளிகளை தற்காக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்க தக்கதாகும். தற்காப்புக்காக சுட்டாரா..? அல்லது தறுதலையாகி சுட்டாரா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டும். மேலும் கொலைக்கு காரணமானவர்  'இயக்க'மானவரா.? அல்லது 'இயக்க'மற்றவரா என்பதையும் சட்டம் தீர்மானிக்கட்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமானவர் கொல்லப்பட்டதை  வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், கொல்லப்பட்டவர்களில் தனது கட்சி கிளைச் செயலாளரின் மைத்துனரும் ஒருவர் என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் இந்த படுகொலையை வன்மையாக கண்டித்திருக்கிறார். கொல்லப்பட்டவர் எந்த மதமென்று ஜெயலலிதா பார்க்கவில்லை; ஆனால் தனது கட்சிக்காரர் என்றவுடன் கண்டிக்க முன்வருகிறார். ஜெயலலிதாவின் இந்ந்த மனப்பக்குவம் கூட எமது இயக்கத் தலைவர்களுக்கு இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. நாமறிந்தவரை இக்கொலையை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது தமுமுக மட்டுமே.

மேலும் இறந்தவர்களின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! இறந்தவரின் குடும்பத்தினருக்கு பொறுமையைத் தந்தருள்வானாக!! அவர்கள் இழந்ததைவிட சிறந்தததை அவர்களுக்கு பரிசளிப்பானாக!! இன்னுமொரு 'திருவிடைச்சேரி'  பயங்கரம் திருமார்க்கத்தின் பெயரால் நடந்திடாமல் பாதுகாத்திடுவானாக!!

வியாழன், 2 செப்டம்பர், 2010

முஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....?

பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் வேடம்புனைந்து வருமாறு மாணவமணிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடும். அத்தகைய நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை  நிகழ்ச்சியில் பங்கெடுப்பதைக்  காண்கிறோம்.

இதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத் தான்  சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும்  அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு  ஒப்பிட்டு பார்ப்பதில்லை. பெற்றோரின் இத்தகைய 'கண்டுகொள்ளாமை'  பின்னாளில், நாங்கள்  இருப்பதோ  இஸ்லாம் மதம்;  ஆனால் எம்மதமும் எங்களுக்கு  சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்துவிடுகின்றது. எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.

ஒரு மண்பாண்டம் செய்பவர் தனது கையில் உள்ள மண்ணை என்ன கோணத்தில் வடிக்க நினைக்கிறாரோ அந்த கோணத்தில் வடிக்கிறார். அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலம் வரை பெற்றோர் கையில் இருக்கும் பச்சை மண் போன்றதுதான்; அதை பெற்றோர் நினைக்கும் வடிவில் உருவாக்கலாம். இதைத்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தெளிவாக கூறினார்கள்;

ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

நூல்;புஹாரி எண் 4775

இறைத்தூதரின் இந்த பொன்மொழி எந்த அளவிற்கு சத்தியமானவை என்பதை நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணன் என்பவரது ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே  உள்ள படத்தில் பார்க்கிறோம்.  இது போன்று அந்த தாய்  செய்வதற்கு அவரது மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால் தான் முழுமையான  பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதியதுதான்.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே!

எனவே,அன்பான முஸ்லிம் சமுதாயமே! நாம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும்  இஸ்லாத்தோடு உரசிப்பார்ப்போம். இறைவனின் அன்பைப் பெறுவோம்.
படம் நன்றி;தினமணி

புதன், 1 செப்டம்பர், 2010

குறைந்துவிட்ட ஆடையும் , நெருங்கிவிட்ட மறுமையும் .....!..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

பாவிகளைத் தவிர இந்த தலைப்பு "இறையச்சம்" உள்ளவர்களுக்கு மென்மேலும் இறையச்சம் உண்டாக்கி பாவங்களை விட்டு தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை .


நபி ஸல் அவர்கள், உலக அழிவு நாளின் நெருக்கத்தில் பெண்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் நிகழும் "சமூக ஒழுக்க சீர்கேடுகளை" குறித்து எச்சரிக்கை செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஆடை குறைப்பு, அன்று அவர்கள் சொன்னது இன்று பெண்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுவதை காணும்பொழுது நம்மை நெருங்கிவிட்ட மருமையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.. ஆயினும் நம்மில் பலர் இது குறித்து கவலை கொள்ளாதது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.


அறியாமைகால "யூத கிறித்துவ " அநாகரீகங்களை நாகரீகம் என்று செய்து வரும் பெண்களில், நமது பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர், என்று என்னும் பொழுது வெட்க்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. .இதுகுறித்து நமது பெண்களை அச்சமூட்டுவதும், எச்சரிக்கை செய்வதும் காலத்தின்கட்டாயம் என கருதுகிறேன்.


குறைந்துவிட்ட ஆடை:இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் "ஈவ்டீசிங்" என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்க்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும்,கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேருவதுதான் வேதனையிலும் வேதனை.பாலுனர்வைதூண்டுதல்:ஆடைகளை இறுக்கியும், குறைத்தும் அணிவதால் மறையவேண்டிய பகுதிகள் மறையாமலும், இறுக்கத்தினால் உடலுறுப்புக்கள் நெறிக்கப்பட்டு, பெண்ணிடம் பாலுணர்வை தூண்டக்கூடிய கனபரிமாணங்கள் மெருகூட்டப்பட்டு, கவர்ச்சியின் விளிம்பிற்கே சென்று, ஆண்களின் கண்களையும், சிந்தனையையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறது. சில ஆண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் வரம்பு மீறும் சூழ்நிலை ஏற்படுகிறது. .இதனால் பாதிப்பு என்னவோ இரு தரப்பினருக்கும் தான். இருந்தாலும் அனேக ஆண்கள் கூச்ச உணர்வின் காரணத்தால் தலைகுனிந்து விடுவதையும் காணமுடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் இந்த வெட்க்க உணர்வும் பெண்களிடத்தில் இல்லாமல் போனது ஏனோ?

.

திரைஅரங்குகளிலும்,தொலைக்காட்சிகளிலும்,இணையதலங்களிலுமே ஆபாசத்தை கண்டு பிஞ்சிலேயே பழுத்துவிட்ட சிறுவர்கள், திரைகளே இல்லாமல் live ல் காணும் பொழுது, மென்மேலும் கெட்டு நாசம் அடைகின்றனர். காதல் கத்திரிக்காய் என்று சிறுவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கிறது. இளைய சமுதாயமே சீரழிந்து வருகிறதுஆடை எந்த நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ,அந்த நோக்கம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு,குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டத்தையும் காணமுடிகிறது. மறையவேண்டிய மர்ம உறுப்புக்கள்,மறையாததாலும், பாலுணர்வை தூண்டுவதாலும் ,இப்படிப்பட்ட ஆடைகள் ஆடைகளே அல்ல,மாறாக இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருபப்வர்களைப் போன்றவர்கள் என்பதுதான் உண்மை.

குறைத்து அணிந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் ஆண்களே கூடுதலாக உடையணிந்து கண்ணியமாக இருக்கும்போது கூடுதல் ஆடையனியவேண்டிய பெண்கள் குறைத்து அணிவது எந்தவகையில் ஏற்புடையதாகும்.இப்படிப்பட்ட கழிசெடைகளைப்பற்றிதான் நபி ஸல் அவர்கள்,உலக அழிவு நாளின் அடையாளமாக பின்வருமாறு கூறுகிறார்கள்.ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம்]அன்று நபி ஸல் அவர்கள் சொன்ன இந்த நிகழ்வு , இன்று நாம் காணும் பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையின் நெருக்கம் உறுதியாகிறது.இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு:ஒழுக்கத்திலும்,பண்பாட்டிலும்,மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்,முதுகெலும்பாகவும் இருக்கவேண்டிய நமது பெண்கள் ஆபாச யூத,கிருத்துவ கலாச்சாரத்தில் மூழ்கி,அவர்களையே மிஞ்சிவிடும் அளவுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த அவல நிலையைக் காணலாம். நமது அரபு பெண்களின் அட்டுழியங்களும்,மார்க்கமுரனான காரியங்களையும் சொல்லிமாளாது. இறுக்கமான பேன்ட்டும்,இறுக்கமான பனியன்களும்,அணிந்துக்கொண்டு மார்புகள்மீது துணியே(கூடுதல்) இல்லாமல் இரு விரல்களுக்கு இடையில் சிகரெட் வைத்துக்கொண்டு கூத்தடிப்பதும்,கும்மாளம் அடிப்பதும் காணும் பொழுது நபி ஸல் அவர்கள் உருவாக்கிய அந்த அரபு சமூதாயம் எங்கே?என்று என்ன தோன்றுகிறது.இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்பைத்தேடி செல்லும் நமது பெண்மணிகளும் இவர்களுடைய இந்த நாகரீகத்தில்[?] தடம்புரண்டு தாவிவிடுகின்றனர்.இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று அலசுவோமேயானால் இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு அறவே எடுபட்டுபோனதுதான்.

நமது தந்தை ஆதம் நபி (அலை)அவர்களிடமும்,தாய் ஹவ்வா (அலை) அவர்களிடமும் இருந்த வெட்கம் குறித்து இறைவன் கூறும்பொழுது....இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]நபி ஆதம்(அலை)அவர்களும்,அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால்,ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட குறப்பிட்ட மரத்தின் கனியை சுவைத்ததால் தங்களுக்கு வெட்கத்தலங்கள் ஏற்பட்டதை உணர்ந்தனர்.உடனே வெட்க்க உணர்வின் காரணத்தால் அங்குள்ள மரத்தின் இலைகளால் மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ள முற்ப்பட்டனர் என்று இறைவன் கூறுகிறான்.ஆபாசம் தொடர்பான சட்ட திட்டங்களை இறைவன் கூறுவதற்கு முன்பே அது தொடர்பான உணர்வு அவர்களிடத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்றுள்ள நமது பெண்கள், இறைவன் கூறிய ஆபாசம் குறித்த சட்ட திட்டங்களை தெளிவாக அறிந்தபிறகும் அதில் மேம்ப்போக்கான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.நபி ஸல் அவர்களும் வெட்க்க உணர்வின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் இறையச்சத்தோடு தொடர்புபடுத்தி பின்வருமாறு கூறுகிறார்கள்:'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்; புஹாரி,எண் 9 .'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.வெட்கத்தை இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறியுள்ளதால் வெட்கத்தில் குறை வைப்போமேயானால் அது இறை நம்பிக்கையில் குறையை ஏற்ப்படுத்தும்.எனவே இறை நம்பிக்கை முழுமையடையாமல் போய்விடும்.ஆகவே வெட்க்கவிஷயத்தில் பெண்கள் கவனமாகவும் பேணுதலாக இருக்கவேண்டும்.வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த ஆயுதம் என்றும் சொல்லலாம்.இந்த ஆயுதத்தை பெண்கள் பேணுதலாக பயன்படுத்தினாலே அவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிடலாம். எஞ்சியவைகளை வேறு வழிகளில் ஒழித்து விடலாம்.


அன்றைய பெண்களும் இறையச்சத்துடன் கூடிய வெட்க உணர்வும்:அன்றைய பெண்களிடம் இருந்த வெட்க்க உணர்வையும்,இறையச்சத்தையும்,அறிந்து கொள்வதற்கு முன் அது தொடர்பான சில உண்மைகளை அறிந்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் ,(ஏனைய சஹாபி பெண்களும்) தனது சுய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொழுது சாதாரண உடையிலேயே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.அந்நிய ஆண்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஆடைகள் போதாது என்ற காரணத்தினால்,கூடுதல் ஆடை அணிவதை வலியுறித்தி,உமர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். நபி ஸல் இதை கண்டுக்கொள்ளவில்லை.ஒரு தடவை நபி ஸல் அவர்களின் மனைவிகளில் ஒருவரான சவ்தா (ரலி) ஓர் இரவு நேரத்தில் கழிப்பிடம் நாடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இவர்களின் உயரத்தை வைத்து, இறைதூதரின் மனைவிதான்(இறைதூதர் மனைவியரிலேய அவர்தான் உயரமானவர்கள்) என்பதை அறிந்துக்கொண்ட உமர் அவர்கள், சவ்தா அவர்களே! நீங்கள் யாரென கண்டுகொண்டோம் என்று உரத்த குரலில் அழைத்துள்ளார். அப்பொழுதாவது கூடுதல் உடை அணிவது தொடர்பான சட்டம் அருளப்படாதா என்ற ஆசையில் !அப்பொழுதான் பின்வரும் இறைவசனம் இறங்கியது.وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَஇன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புஹாரியில் (பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146 ) பதிவு செய்யப்பட்டுள்ளது.இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். (4:13)


எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (4:14)ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:124)இறைவனுக்கும்,அவனது தூதருக்கும்,எவர் மாறு செய்கிறார்களோ!அவர்களின் நிலை குறித்தும்,எவர் கட்டுப்படுகிறார்களோ அவர்களின் நிலை குறித்தும் மேற்கூறிய வசனத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.எனவே ஆடை குறித்த சட்டத்தை பின்பற்றி, அவனுக்கு(இறைவனுக்கு)கட்டுப்பட்டும்,நபிஸல் அவர்கள் வலியுறுத்திய இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வை பின்பற்றி, நபிஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டும் வாழ்வதன் மூலம் நம் சமூதாய பெண்கள் மறுமை வெற்றிக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.இறையச்சமுள்ளவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.ஆக்கம்; முபாரக். துணைச்செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.