அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 2 டிசம்பர், 2011

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.

சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத்  குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.

வேறு சில பகுதிகளில்  ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக்  கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்." [புகாரி எண்; 1294 ]

முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி  ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!" [புகாரி எண்; 2006 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா  நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்! [புகாரி எண்; 2007 ]

ஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்
;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா  நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]

எனவே, சகோதர/சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்
இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும்  உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-முகவை எஸ்.அப்பாஸ் 


 


சனி, 5 நவம்பர், 2011

இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஏகத்துவக்  கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,  ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.

-உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவைஅப்பாஸ்., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம். 

வெள்ளி, 4 நவம்பர், 2011

அரஃபா நோன்பை மறந்துடாதீங்க...!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரபாநோன்பு. இந்த நோன்பை பற்றி இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال : " يكفر السنة الماضية والسنة القابلة " رواه مسلم
அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்.


என்ன சகோதரர்களே! ஒருநாள் நோன்புக்காக இரண்டுவருட பாவங்களை மன்னிக்க அல்லாஹ் ரெடி, நீங்க ரெடியா..?

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இன்று உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். மனிதனை படைத்த அல்லாஹ், மனிதனின் வாழ்வில் அத்துணை பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தனது மார்க்கமான இஸ்லாத்தில் குர்ஆன்-மற்றும் நபிமொழிகள் வாயிலாக இந்த விசயத்திற்கும் வழிகாட்டியுள்ளான்.பொதுவாக இஸ்லாம் வணக்கமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதில் நடுநிலை பேன சொல்லும் மார்க்கமாகும். அந்தவகையில் செலவு செய்வதை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில்;

இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.[அல்-குர்ஆன் 25:67 ]

இந்த வசனத்தில் அல்லாஹ், நாம் எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறான். நம்முடைய தேவைகளுக்காக செலவு செய்வதை மார்க்கம் தடுக்கவில்லை. ஆனால் அதில் வீண் விரையம் வந்துவிடக்கூடாது. மேலும் கஞ்சத்தனமாக இல்லாமல் நடுநிலையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்காட்டுகின்றான் . ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பாலோரின் நிலை என்ன..? 'வைச்சா குடுமி; இல்லைன்னா மொட்டைஎன்பார்களே அதுபோன்று, ஒன்று ஆடம்பரம் என்ற பெயரில் வீண் விரயம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சிக்கனம் என்ற பெயரில் வடிகட்டிய கஞ்சர்களாக இருக்கிறார்கள். வசதி படைத்த முஸ்லிம்களின் வீடுகளில் தேவைக்கதிகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை விரையமாக்கப்படுகிறது. இதுபோக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களில் தங்களின் 'பணத்திமிரை' ஊரறிய செய்ய தேவைக்கு அதிகமாக உணவுகள், ஆடம்பர செலவுகள், மார்க்கம் அனுமதிக்காத பல்வேறு அனுஷ்டானங்கள் இவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் வீன்விரையம் செய்யப்படுகிறது. இப்படி வீன்விரையம் செய்பவர்கள் பற்றி இதோ அல்லாஹ் கூறுகின்றான்;

மேலும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)[அல்-குர்ஆன் 4:38 ]

மேலும் அல்லாஹ்கூறுகின்றான்;மேலும் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.[அல்-குர்ஆன் ]

இறைவனின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு வீன்விரையம் தவிர்ப்போம். நம்முடைய தேவைகளை கணக்கிட்டு தேவையான உணவுகளை தயாரிப்போம். திடீர் என்று ஒரு விருந்தாளி வந்தாலும் அவர்களுக்கென மாற்று உணவு தயாரிக்க இப்போதுள்ள நவீன காலத்தில் உடனே சாத்தியமானதுதான். அப்படி இல்லையென்றால் கூட ஒருவர் உணவு இருவருக்கு போதுமானது என்ற நபிமொழிக்கு ஏற்ப நம்முடைய உணவை பங்கிட்டு வழங்கினால் அதில் அல்லாஹ் நிச்சயமாக பரக்கத் செய்வான். மேலும் வசதி படைத்தவர்க்ள அணியும் ஆடைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபயோகித்த ஆடைகளை தேவையுடையவர்களை தேடி வழங்கினால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக நாம் எவ்வளவு பெரிய அந்தஸ்துடையவர்; நாம் அணிந்த ஆடையை சாதரண ஒருவன் அணிவதா..? என்ற கர்வத்துடன் தூக்கி குப்பையில் வீசினால் இதுவும் வீண் விரயமாகும். இதுவும் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியதாகும்.

அடுத்து அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தும் கஞ்சத்தனம் செய்பவர்கள் பற்றி எடுத்துக்கொண்டால் இவர்கள் தங்களை மிகப்பெரிய பொருளாதார மேதை என்று நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் கூத்து சொல்லிமாளது. ஒரு சோப்பு வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு இத்துணை நாளைக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கெடு விதிப்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னால், அந்த மனைவி ஏங்க! சோப்பு காலியாயிருச்சு என்று சொன்னால் அவ்வளவுதான் இவன் அதற்காக போடும் சத்தம் அடுத்த வீடுதாண்டி கேட்கும். சோப்பு என்பது கரையக்கூடியது அது என்ன கல்லிலா தயாரிக்கப்பட்டது அப்படியே இருப்பதற்கு..? அல்லது அது என்ன சாப்பிடக்கூடிய பொருளா..? மனைவி லேசா கடிச்சிருப்பா என்று சொல்வதற்கு ..? இது உதாரணம் தான்! இவ்வாறான கஞ்சர்களை, சாப்பிட்ட கையால் காக்கா விரட்டமாட்டன் என்பார்கள்ஏனெனில் இவன் கையில் ஒட்டியிருக்கும் சோத்து பருக்கை கீழே விழுந்து அதை காக்கா தின்றுவிடக்கூடாதாம். இவ்வாறு கஞ்சத்தனம் செய்பவர்களை பற்றி அல்லாஹ்,

 
அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (47:38)

எனவே, அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை அவன் விதித்த வரம்புகளுக்குட்பட்டு அனுபவிப்போம். மேலும் அவன் வழியில் செலவும் செய்வோம். நமது சந்ததிகளுக்காக சேமிக்கவும் செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய உள்ளத்தில் கஞ்சத்தனம் வந்துவிடாமலும், நம்முடைய செயலில் வீண் விரையம் வந்துவிடாமலும் பார்த்துக் கொள்வதோடு, அதற்காக அல்லாஹ்விடத்திலும் பிரார்த்திப்போம்.

குறிப்பு; இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன நாளை ஆதரித்து இக்கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக இந்த நாளில் எழுதினால் மாற்றார்களும் சிக்கனம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளங்கிக்கொள்வார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

சனி, 29 அக்டோபர், 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.


குர்பானி பிராணியின் வயது;

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “
முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
 1. கண் குறுடு
 2. கடுமையான நோயானவை
 3. மிகவும் மெலிந்தவை
 4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி;
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)


இறைச்சிகளை விநியோகித்தல்;

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569

“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.


செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,


ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.


நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
''பத்ஹுல்முயீன்' எனும் மத்ஹப் நூலைப் பற்றி பீஜே பேசும் போது, ''எந்த ஒரு மஸாயில்  பிரச்சினையை இந்த நூலில்  பார்த்தாலும், சரியான சொல்படி கூடும்; மிகச்சரியான சொல்படி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் வெறுக்கத்தக்கது; இதில் நான் என்ன சொல்றேன்னா தவிர்ந்து கொள்வது நல்லது என்று கிதாபுக்காரர் சொல்வது. ஆக மத்ஹபுங்கிற பேருல இப்பிடி பைத்தியம் வெளையாடுராங்கம்மா என்பார்.
இப்போது சற்றேறக் குறைய உள்ளாட்சித் தேர்தலில் இதே பாணியில் பீஜே பதில் சொல்லியுள்ளார்.

* சரியான சொல் பிரகாரம் பைலா படி உறுப்பினர் போட்டியிடுவது கூடும்.

*மிகச் சரியான சொல் பிரகாரம்  உறுப்பினரும் ஈமான் இழக்க  கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு.[அதாவது ஈமானை  இழக்க நேரிடும் என்பதால் போட்டியிடக் கூடாது]

*தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் உறுப்பினர்கள் போட்டியிட தடை விதிக்கும் சட்ட திருத்தம் பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வரலாம்.

* இதுல என்னுடைய [கிதாபுக்காரர் பீஜே] கருத்து என்னன்னா தனிப்பட்ட உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது என்பதுதான்.

உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?என்ற நமது கட்டுரையையொட்டி, உணர்வு வார இதழில் கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்துள்ள பீஜே, 

''ததஜ விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படும் அமைப்பாகும். அந்த பைலாவை ஏற்றுக்கொண்டு தான் உறுப்பினர்கள் அதில்  அங்கம் வகிக்கின்றனர்'' என்கிறார்.
நாம் கேட்பது பைலாவின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில், சில ஷரத்துகள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று பைலாவில் இருந்து பீஜே காட்டவேண்டும்.

''உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு, புதிதாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல. இத்தனை ஆண்டுகளாக எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது'' என்கிறார்.

நாம் கேட்பது உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பகிரங்கமாக அனுமதி அளித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டாரே! இது போன்று கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளை பீஜே காட்டவேண்டும்.

''மதுஅருந்துதல், வட்டி வாங்கி சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுதல்,விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்க  வாய்ப்புள்ள   விதத்தில்  அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல், இயக்கத்துக்கோ தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தல், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகிய தேர்தலில் போட்டியிட்டுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை என்ற வாசகமே அத்தகையவர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்பதை தெள்வுபடுத்துகிறது எனவே உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்கிறார் பீஜே.

நாம் கேட்பது மேற்கண்ட தீமைகளை செய்தால் இந்த ஜமாஅத்தில் சாதாரண கிளை நிர்வாகியாக கூட உனக்கு அனுமதியில்லை என்று எச்சரிப்பதற்காக மேற்கண்டவைகள் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது நிர்வாகிகள் நீங்கலாக மற்றவர்கள் மேற்கண்ட  தீமைகளை செய்யலாம் என்று அனுமதிக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளதா? சரி பீஜேயின் கூற்றுப்படி, மேற்கண்ட தவறை ஒரு உறுப்பினர் தானாக செய்தாலே அவன் நிர்வாகி ஆகமுடியாது என்ற நிலை இருக்கும் போது, உறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று ஒரு பொதுச்செயலாளர் அறிவிப்பது அந்த செயலை அவனை செய்யத் தூண்டுவிட்டு பின்னர் அவனை நீ பொறுப்புக்கு தகுதியிலாதவன் எண் கூறுவது எந்த வகையில் அறிவுடமை என்று பீஜே சொல்லவேண்டும்.

அடுத்து உள்ளாட்சியில் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவித்தவர்கள் மேற்கண்ட பாரவை மேற்கோள் காட்டி சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலிலும் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவிப்பார்களா? அதுமட்டுமல்ல,
 • உறுப்பினர் மது அருந்தலாம்; அவ்வாறு அருந்தும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
 • உறுப்பினர் வட்டிவாங்கி சாப்பிடலாம்; அவ்வாறு சாப்பிடும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
 • உறுப்பினர் விபச்சாரம் செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
 • உறுப்பினர் விபசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ள வகையில்  அன்னியப் பெண்ணுடன்    தணித்திருக்கலாம்;                        அவ்வாறு இருக்கும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
 • உறுப்பினர் தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ பொருளாதார மோசடி செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
உள்ளாட்சியில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போன்று, மேற்கண்டவைகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுப்பினர்களின் சந்தேகத்தை நீக்குவார்களா?

''உறுப்பினர்களாக உள்ளவர்கள் செய்யும் எந்தக் காரியமும் ஜமாஅத்துடன் தொடர்பு படுத்த முடியாது. ஜமாஅத்தின் பெயரை அல்லது கொடியை, அல்லது நிர்வாக பதவியை பயன்படுத்தினால் தான் அது ஜமாஅத் செய்ததாக கருதப்படும். சாதாரண உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்ற அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக இந்த முடிவு கடைபிடிக்கப்படு வருகிறது'' என்கிறார்.

நாம் கேட்பது ஜமாஅத் என்பது நிர்வாகிகள் மட்டும் தானா? உறுப்பினர்கள் உங்கள் ஜமாஅத்தின் அங்கத்தினர் இல்லையா? உறுப்பினர் மேற்கண்ட தீமைகளை செய்தால் அது ஜமாஅத்தை ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை பாதிக்காது என்றால், உங்களால் பாலியல்-ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாக்கரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியாதே? ஏனென்றால் ஒருவர் விபசாரம் செய்தால் கூட உறுப்பினராக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் வெறும் விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை நீக்கியது எப்படி? ஜமாத்திற்கோ, தனி நபருக்கோ பொருளாதார  மோசடி    செய்தாலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற உங்களின் விளக்கபடி, உறுப்பினரான சைபுல்லாஹ் மோசடியே செய்திருந்தாலும் அவரை நீக்க முடியாதே! நீக்கியது எப்படி?

''கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நம்முடைய உறுப்பினர்கள் பலர் சொந்த ஊரில் சுயேட்சையாக நின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது பைலாவில் உள்ள விதிப்படி இதை தடுக்க முடியாது என்பதால் அதை   ஏற்றுக்கொண்டோம்'' என்கிறார்.

பீஜேயின் மேற்கண்ட வாக்குமூலப்படி உறுப்பினர் போட்டியிடலாம் என்ற பைலா அனுமதி கடந்த உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை  வரை பீஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். அதனால்தான் போட்டியிட்டவரை விசாரித்துள்ளார்கள். அதன் பின்புதான் பைலா அனுமதி, பைலா வடிவமைப்பாளரான பீஜெவுக்கே தெரிந்ததாம். இதன் மூலம் தெரிவது என்ன? தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்பது பல்லாண்டுகளாக உள்ள நிலை என்றால், கடந்த முறை போட்டியிட்ட உறுப்பினரை ஏன் விசாரணை நடத்த வேண்டும்? இதன் மூலம் கடந்த தேர்தல் வரை  தேர்தலில் போட்டியிடும் சிந்தனை மாநில நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. இந்த ஆண்டு தான் புதியதாக உதயமாகியுள்ளது என்பது தெரிகிறதல்லவா?

''உள்ளாட்சித் தேர்தலில் தனது தெருவில் மட்டும் தான் ஒருவர் ஓட்டுக் கேட்பார். அவர் ஈமானை இழக்கும் செயலில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது'' என்ற அற்புதமான விளக்கமளிக்கிறார் பீஜே.

நாம் கேட்கிறோம். தேர்தலில் போட்டியிடாமல் களப்பணி ஆற்றினாலே ஈமான் போய்விடும் என்ற கொள்கையுடைய நீங்கள், ஒரு தெருவில் ஓட்டுக் கேட்டால் ஈமான் போகாது என்பதற்கு வைக்கும் அளவுகோல் என்ன? மேலும் உள்ளாட்சியின் எல்லை கூட பேரறிவாளர் என்று கருதப்படும் இவருக்கு தெரியாதது ஆச்சர்யமே! ஒரு வார்டு எல்லை கூட ஒரு தெருவோடு முடிவதில்லை. வார்டை தாண்டி ஊராட்சி மன்றத் தலைவரும் உள்ளாட்சியில் உள்ளதுதான். ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டால் ஒரு தெரு அல்ல; ஒரு ஊரைக் கூட தாண்டி ஓட்டுக் கேட்டாக வேண்டும். அப்படியானால் ஊரளவில் ஓட்டுக் கேட்பவர் ஈமான் நிலை என்ன? அடுத்து, நகராட்சி எல்லை இதையும் தாண்டியது. பேரூராட்சி எல்லை அதையும் தாண்டியது. மாநகராட்சி மேயர் எல்லை பல தொகுதிகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் உள்ளாட்சியின் அங்கம் தான். பீஜேயின் உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டால் பல சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக் கேட்கும் நிலை வருமே? அப்போது ஈமான் போகுமா? போகாதா?

''ஈமானை இழக்கும் காரியத்தில் ஈடுபட்டால் அவர் அதற்காகவே அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்'' என்கிறார்.
கையெடுத்து கும்பிடுவது  மட்டும் தான் ஈமானை இழக்கும் காரியமா? ஊராட்சி அலுவலகம்- நகராட்சி- பேரூராட்சி- மாநகராட்சி அலுவலகங்களின் நடைமுறை அனைத்தும் ஈமானை பலப்படுத்தும் காரியம் என்று பீஜே சொல்வாரா? சட்டமன்றத்தில் நடக்கும் கூத்துக்களுக்கு கடுகளவும் குறைவில்லாமல் இங்கும் நடக்குமே? அப்படிப்பட்ட பதவிக்கு தனது உறுப்பினர் போட்டியிடலாம் என்று அனுமதி அளித்து விட்டு, பின்னர் அவர்களை வேறு வழியின்றி சிலகாரியங்களை  செய்யும் நிலைக்கு தள்ளி, பிறகு அதற்காக நடவடிக்கை என்றால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாகாதா?

''ஒரு தெருவில் ஓட்டுக் கேட்பது ஈமானை பாதிக்காது' என்பது உங்களின் நிலையானால், உறுப்பினர்களும் ஈமானை இழக்க கூடாது என்ற பேச்சுக்கு இங்கு வேலை இல்லையே? என்னுடைய கருத்து என்னன்னா...? என்று சொந்த கருத்தை கொண்டு வர வேண்டியதில்லையே? பொதுக்குழுவில் திருத்தம் என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லையே?

ஆக, சகோதரர்களே! உள்ளாட்சியில் போட்டியிடுவது பைலா படி சரியென்றால், சட்டமன்றம்- நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்கள், மேலே பட்டியலிட்டுள்ள தீமைகள் அனைத்தும் உறுப்பினர்கள் செய்யலாம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா? என்பதுதான் நமது சவாலாகும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்] அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளதை நாம் அறிவோம். இத்தனை திருமணங்கள் என்ன காரணத்திற்காக நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள் என்று அல்லாஹ் தனது வேதத்தில் கூறியிருக்க வேண்டும். [ஒரு திருமணம் நீங்கலாக] நபி[ஸல்] அவர்களின் வேறு திருமணங்களுக்கான காரணம் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படவில்லை. அடுத்து  சம்மந்தப்பட்ட நபி[ஸல்] அவர்களும் இத்தனை திருமணம் செய்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. ஆக குர்'ஆனிலும்-ஹதீஸிலும் இல்லாத சுய விளக்கம் தரமுயன்றால் அங்கே முரண்பாடு வரும் என்பதற்கு அறிஞர் பீஜே ஒரு அற்புத சான்றாக திகழ்கிறார். இவரது சுய விளக்கம் குர்'ஆன்- ஹதீஸோடு முரண்படுவது மட்டுமன்றி, இவருக்கு இவரே முரண்படுவதையும் நீங்கள் இப்போது படியுங்கள்;
 
நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் எழுதிய விளக்கத்தை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளார்  மவ்லவி பீஜே. பார்க்க;
அதில் நபி[ஸல்] அவர்கள்  ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்கிறார். அவரது சுய வியாக்கியானம் எந்த அளவுக்கு குர்'ஆன்- ஹதீஸோடு மோதுகிறது என்பதை முதலில் இங்கே முன்வைக்கிறோம்.
 • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள  காரணம்;

அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?

 • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்;

 நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகளை  நபிகள் நாயகம்[ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கும்  காரணம் என்கிறார் பீஜே.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]

அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, பீஜே  கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம்  செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது  ஹதீஸுக்கு முரணில்லையா..?

மேலும், மேற்கண்ட இரு திருமணங்களும்  நட்புக்காக நடந்தது என்று கூறி ஹதீஸுக்கு முரண்பட்ட பீஜே,  நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற தனது நூலில்,  ''நட்புக்காக அந்த திருமணங்கள் நடந்ததாக கூறுவது பொருந்தாத காரணம்'' என்று கூறி தனக்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
 நட்பைப்  பலப்படுத்துவதற்கா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே  இஸ்லாத்தை  ஏற்றுகொண்ட  உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த  உறவை   பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களை  செய்ய வேண்டிய  நிலைக்கு  ஆளானார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை  நபியவர்கள் திருமணம் செய்ததை  இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.
இந்தக் காரணமும் பொருந்தாக்  காரணேமயாகும். 
 
மேலும்,  திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே  இடைவெளி  எதுவுமிருக்கவில்லை.. இந்தத் திருமணங்கள்  நடந்திருந்தாலும் , நடக்காதிருந்தாலும்  அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை  எதிர்பார்க்காது தங்கள் தலைவராக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.
இந்தக் காரணம் சரியென  வைத்துக் கொண்டாலும்  ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி  வருமேயன்றி அனைத்து  திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும்  ஏற்க இயலாது
.
                                ***************************************
அன்பானவர்களே! விளக்கம் என்ற பெயரில் குர்'ஆனுக்கும்-ஹதீஸுக்கும் முரண்படுவது மட்டுமன்றி, தனக்குத் தானே முரண்படும் இவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி[ஸல்] அவர்களின் ஏனைய திருமணங்கள் பற்றிய இவரது வியாக்கியானங்களும்- முரண்பாடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

சனி, 17 செப்டம்பர், 2011

வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'வணக்கம் சார்' என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் 'வாழ்க சார்' என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்;


இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின்  வாக்குமூலத்தின் அடிப்படையில் 'வாழ்க சார்' என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன 'வாழ்க சார்' என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, '' நன்றாக வாழுங்கள்' என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று.

இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்;

''வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும்.

ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது'' என்கிறார் பீஜே.
படிக்க;http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/

பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும்  அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் 'வாழ்க சார்' என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார்.

பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் 'வாழ்க சார்' என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு 'வாழ்க சார்' என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்?

இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான  காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் 'வாழ்க சார்' என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது.

இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?

சனி, 10 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால் நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால்,
நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான்.

என்று அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா? [நவூதுபில்லாஹ்]. எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related

 

சனி, 3 செப்டம்பர், 2011

முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!

بسم الله الرحمن الرحيم
றிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன்  அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் 'அன்றும்-இன்றும்' தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த  ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த 'அன்றும்-இன்றும்' தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம்,
''பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்'. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம்.
 
இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி 'பலம்' என்றும் 'பலவீனம்' என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது,
 
ஒரு சட்டத்தில்  ஒரே வசனத்தை ஆதாரமாக  வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
 
பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில்  சத்தமில்லாமல் மாற்றியது.
 
குர்'ஆனிலும் ஹதீஸிலும்  இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா'வாக வழங்கியது. இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது.
 
இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இமாம்கள் மாற்றினார்களே  என்கிறார்கள்.  எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில்  மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட  சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை  சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள்.  அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில்  சகோதரர்கள்  கேட்பதுதான் சரியானது. 
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அன்புடன் முகவைஅப்பாஸ். 
 

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
 
பயணத்தில் 'கஸ்ர்' தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா?

நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர்.

பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.

யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-

நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)

இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.

ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.

அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.

தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.

48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.

தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன? மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி,
 
''மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
 
மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்;
 • தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். 
 • முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே  ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.
 • இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
 • முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.

சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும்  உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!

بسم الله الرحمن الرحيم
நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள்,  திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;
 
''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம்  தான் இதை  கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.
 
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில்,  ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 
இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.
 
முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,
பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.

بسم الله الرحمن الرحيم
குர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது  தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோழர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;

''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.

இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.

மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.

திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.

ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.

இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.

(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.

(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.

(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.

இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.

(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.

அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]

அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;

 1. திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.
 2. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.
 3. அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.
 4. அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.
 5. ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.

மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.

எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.

மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின்  இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும்  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா?  ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா?

சிந்தியுங்கள் மக்களே!

குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள்  பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!

அந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள்,  'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்;
 
கேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.

மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.

பதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கு P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ]
 
மேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது  அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து  வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக்  செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/
 
இந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்'  என்றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது  என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு  வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த  விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும்,  குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார்.
 
அதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார்.
 
இதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை  மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும்   மக்கள் விளங்கிக் கொள்ளத்தான்.
 
நேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த    மனோஇச்சை வாதியை  பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா?

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
முஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை  தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;
ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?
S.M. நாசர், தேங்கா பட்டிணம்.

தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.
"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)

இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.
அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்].
பீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள்  பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக  முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன?  இணைப்பை படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/sakothari_makalai_thirumanam_seythavar_islathil_sera_mutiyuma/
பீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை  உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்  என்கிறார்.  இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி  வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை  ஏற்ற  ஒருவருக்கு அவகாசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன்  உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா? இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.
இப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;
ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.
நாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை   ஏற்ற நிலையிலும், அந்த  சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன? இஸ்லாத்தை ஏற்ற ஒருவர்,  இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே?  சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா? என்று  வார்த்தை   விளையாட்டை பீஜே செய்தாலும்  ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு  ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது  நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே!

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும்  அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும்  தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே  பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;
 
நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;
 
 • நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?

K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.

இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.

எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு  எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின்  தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே  தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;
 
பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
 
அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.
 
குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார்  என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
 
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.

பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]

 
மேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில்  காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[?] படிக்க இங்கே கிளிக் செய்க; http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/kayip_janaasa_eppothu/
 
முந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில்,  தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;
 
உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
 
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
 
மேற்கண்ட செய்தியை கவனமாக  படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை  என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி  [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி]   நடந்துள்ளது.
 
மேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்;
 
கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள் எத்தனை? K.நதீம் அஹ்மது, ஆம்பூர்.
 
பதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை  கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.
-அந்நஜாத் 1986 ஆகஸ்ட்
 
மேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்;
 
ரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள்! அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டதா?

S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.

ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.

"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44)

இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது.

-அந்நஜாத்1986 அக்டோபர் 

நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/

அன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா? அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா? இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார்.
 
இவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி  குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா?
 
இதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.