அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 29 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[8] மூன்று பெறும் பாவங்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,

  1. அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று கூறினார்கள். நான், "நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன்.
  2. "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது" என்று கூறினார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள்,
  3. "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது" என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி) முஸ்லிம்)


-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....கருத்துகள் இல்லை: