அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே
நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், 
அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவரிடத்தில் ``அபூஉமாமாவே
தொழுகையில்லாத இந்த நேரத்தில் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கிறீரே என்ன
விஷயம்? என்று கேட்டார்கள். 

அதற்கு அவர் என்னோடுள்ள கவலைகளும் என்
மீதுள்ள கடனும் தான் யா ரசூல்லாஹ் என்று கூறினார். நான் உனக்கு
சிலவார்த்தைகளைச் சொல்லித் தரட்டுமா அதை நீர் கூறிவிடுவீரானால்
அல்லாஹ் உம்முடைய கவலையைப் போக்கி, உம்முடைய கடனையும் தீர்த்து
விடுவான் என்று கூறினார்கள்" சொல்லித்தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!
என்று அவர் கூறினார். காலையிலும் மாலையிலும் இந்த துஆவை ஓதுவீராக என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

``யாஅல்லாஹ் கவலை துக்கத்தை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்புத்
தேடுகிறேன். இயாலாமை, சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். கோழைத்தனம், கஞ்சத்தனத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். கடன் தொல்லை மனிதர்களின் அடக்குமுறையை விட்டும்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்''.

இதை நான் கூறி வந்த போது அல்லாஹ் என்னுடைய கவலையைப் போக்கி,
என்னுடைய கடன் தீர வழிசெய்தான் என அபூஉமாமா(ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி[ரலி]
நூல் : அபூதாவூத்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காண்பித்து தந்த பிரகாரம்
அல்லாஹ்விடத்தில் உள்ளம் உருகி பிரார்த்திக்கும் போது அவன் எல்லாவிதமான
கஷ்டங்களையும் இலேசாக்கிவிடுகின்றான். அவனுடைய அருளை நம்மீது
சொரிந்து விடுகின்றான். அவனிடமே முற்றிலும் நம்முடைய முறையீடுகளை
வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: