
இஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது!!
அவசர அறிவிப்பு!
சனி, 5 நவம்பர், 2011
இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!

வெள்ளி, 4 நவம்பர், 2011
அரஃபா நோன்பை மறந்துடாதீங்க...!
அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரபாநோன்பு. இந்த நோன்பை பற்றி இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال : " يكفر السنة الماضية والسنة القابلة " رواه مسلم
அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்.
என்ன சகோதரர்களே! ஒருநாள் நோன்புக்காக இரண்டுவருட பாவங்களை மன்னிக்க அல்லாஹ் ரெடி, நீங்க ரெடியா..?
ஞாயிறு, 30 அக்டோபர், 2011
உலக சிக்கன நாள்; சிக்கனமும்-கஞ்சத்தனமும்!


சனி, 29 அக்டோபர், 2011
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!
ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;
ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.
குர்பானி பிராணியின் வயது;
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
“முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
“முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
- கண் குறுடு
- கடுமையான நோயானவை
- மிகவும் மெலிந்தவை
- நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.
“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)
அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
இறைச்சிகளை விநியோகித்தல்;
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.
செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,
ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.
நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே!
* சரியான சொல் பிரகாரம் பைலா படி உறுப்பினர் போட்டியிடுவது கூடும்.
*மிகச் சரியான சொல் பிரகாரம் உறுப்பினரும் ஈமான் இழக்க கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு.[அதாவது ஈமானை இழக்க நேரிடும் என்பதால் போட்டியிடக் கூடாது]
*தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் உறுப்பினர்கள் போட்டியிட தடை விதிக்கும் சட்ட திருத்தம் பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வரலாம்.
* இதுல என்னுடைய [கிதாபுக்காரர் பீஜே] கருத்து என்னன்னா தனிப்பட்ட உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது என்பதுதான்.
உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?என்ற நமது கட்டுரையையொட்டி, உணர்வு வார இதழில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள பீஜே,
''ததஜ விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படும் அமைப்பாகும். அந்த பைலாவை ஏற்றுக்கொண்டு தான் உறுப்பினர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்'' என்கிறார்.
''உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு, புதிதாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல. இத்தனை ஆண்டுகளாக எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது'' என்கிறார்.
நாம் கேட்பது உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பகிரங்கமாக அனுமதி அளித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டாரே! இது போன்று கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளை பீஜே காட்டவேண்டும்.
''மதுஅருந்துதல், வட்டி வாங்கி சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுதல்,விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ள விதத்தில் அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல், இயக்கத்துக்கோ தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தல், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகிய தேர்தலில் போட்டியிட்டுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை என்ற வாசகமே அத்தகையவர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்பதை தெள்வுபடுத்துகிறது எனவே உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்கிறார் பீஜே.
நாம் கேட்பது மேற்கண்ட தீமைகளை செய்தால் இந்த ஜமாஅத்தில் சாதாரண கிளை நிர்வாகியாக கூட உனக்கு அனுமதியில்லை என்று எச்சரிப்பதற்காக மேற்கண்டவைகள் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது நிர்வாகிகள் நீங்கலாக மற்றவர்கள் மேற்கண்ட தீமைகளை செய்யலாம் என்று அனுமதிக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளதா? சரி பீஜேயின் கூற்றுப்படி, மேற்கண்ட தவறை ஒரு உறுப்பினர் தானாக செய்தாலே அவன் நிர்வாகி ஆகமுடியாது என்ற நிலை இருக்கும் போது, உறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று ஒரு பொதுச்செயலாளர் அறிவிப்பது அந்த செயலை அவனை செய்யத் தூண்டுவிட்டு பின்னர் அவனை நீ பொறுப்புக்கு தகுதியிலாதவன் எண் கூறுவது எந்த வகையில் அறிவுடமை என்று பீஜே சொல்லவேண்டும்.
அடுத்து உள்ளாட்சியில் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவித்தவர்கள் மேற்கண்ட பாரவை மேற்கோள் காட்டி சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலிலும் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவிப்பார்களா? அதுமட்டுமல்ல,
- உறுப்பினர் மது அருந்தலாம்; அவ்வாறு அருந்தும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
- உறுப்பினர் வட்டிவாங்கி சாப்பிடலாம்; அவ்வாறு சாப்பிடும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
- உறுப்பினர் விபச்சாரம் செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
- உறுப்பினர் விபசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ள வகையில் அன்னியப் பெண்ணுடன் தணித்திருக்கலாம்; அவ்வாறு இருக்கும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
- உறுப்பினர் தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ பொருளாதார மோசடி செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
''உறுப்பினர்களாக உள்ளவர்கள் செய்யும் எந்தக் காரியமும் ஜமாஅத்துடன் தொடர்பு படுத்த முடியாது. ஜமாஅத்தின் பெயரை அல்லது கொடியை, அல்லது நிர்வாக பதவியை பயன்படுத்தினால் தான் அது ஜமாஅத் செய்ததாக கருதப்படும். சாதாரண உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்ற அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக இந்த முடிவு கடைபிடிக்கப்படு வருகிறது'' என்கிறார்.
நாம் கேட்பது ஜமாஅத் என்பது நிர்வாகிகள் மட்டும் தானா? உறுப்பினர்கள் உங்கள் ஜமாஅத்தின் அங்கத்தினர் இல்லையா? உறுப்பினர் மேற்கண்ட தீமைகளை செய்தால் அது ஜமாஅத்தை ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை பாதிக்காது என்றால், உங்களால் பாலியல்-ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாக்கரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியாதே? ஏனென்றால் ஒருவர் விபசாரம் செய்தால் கூட உறுப்பினராக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் வெறும் விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை நீக்கியது எப்படி? ஜமாத்திற்கோ, தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தாலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற உங்களின் விளக்கபடி, உறுப்பினரான சைபுல்லாஹ் மோசடியே செய்திருந்தாலும் அவரை நீக்க முடியாதே! நீக்கியது எப்படி?
''கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நம்முடைய உறுப்பினர்கள் பலர் சொந்த ஊரில் சுயேட்சையாக நின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது பைலாவில் உள்ள விதிப்படி இதை தடுக்க முடியாது என்பதால் அதை ஏற்றுக்கொண்டோம்'' என்கிறார்.
பீஜேயின் மேற்கண்ட வாக்குமூலப்படி உறுப்பினர் போட்டியிடலாம் என்ற பைலா அனுமதி கடந்த உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை வரை பீஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். அதனால்தான் போட்டியிட்டவரை விசாரித்துள்ளார்கள். அதன் பின்புதான் பைலா அனுமதி, பைலா வடிவமைப்பாளரான பீஜெவுக்கே தெரிந்ததாம். இதன் மூலம் தெரிவது என்ன? தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்பது பல்லாண்டுகளாக உள்ள நிலை என்றால், கடந்த முறை போட்டியிட்ட உறுப்பினரை ஏன் விசாரணை நடத்த வேண்டும்? இதன் மூலம் கடந்த தேர்தல் வரை தேர்தலில் போட்டியிடும் சிந்தனை மாநில நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. இந்த ஆண்டு தான் புதியதாக உதயமாகியுள்ளது என்பது தெரிகிறதல்லவா?
''உள்ளாட்சித் தேர்தலில் தனது தெருவில் மட்டும் தான் ஒருவர் ஓட்டுக் கேட்பார். அவர் ஈமானை இழக்கும் செயலில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது'' என்ற அற்புதமான விளக்கமளிக்கிறார் பீஜே.
நாம் கேட்கிறோம். தேர்தலில் போட்டியிடாமல் களப்பணி ஆற்றினாலே ஈமான் போய்விடும் என்ற கொள்கையுடைய நீங்கள், ஒரு தெருவில் ஓட்டுக் கேட்டால் ஈமான் போகாது என்பதற்கு வைக்கும் அளவுகோல் என்ன? மேலும் உள்ளாட்சியின் எல்லை கூட பேரறிவாளர் என்று கருதப்படும் இவருக்கு தெரியாதது ஆச்சர்யமே! ஒரு வார்டு எல்லை கூட ஒரு தெருவோடு முடிவதில்லை. வார்டை தாண்டி ஊராட்சி மன்றத் தலைவரும் உள்ளாட்சியில் உள்ளதுதான். ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டால் ஒரு தெரு அல்ல; ஒரு ஊரைக் கூட தாண்டி ஓட்டுக் கேட்டாக வேண்டும். அப்படியானால் ஊரளவில் ஓட்டுக் கேட்பவர் ஈமான் நிலை என்ன? அடுத்து, நகராட்சி எல்லை இதையும் தாண்டியது. பேரூராட்சி எல்லை அதையும் தாண்டியது. மாநகராட்சி மேயர் எல்லை பல தொகுதிகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் உள்ளாட்சியின் அங்கம் தான். பீஜேயின் உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டால் பல சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக் கேட்கும் நிலை வருமே? அப்போது ஈமான் போகுமா? போகாதா?
''ஈமானை இழக்கும் காரியத்தில் ஈடுபட்டால் அவர் அதற்காகவே அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்'' என்கிறார்.
''ஒரு தெருவில் ஓட்டுக் கேட்பது ஈமானை பாதிக்காது' என்பது உங்களின் நிலையானால், உறுப்பினர்களும் ஈமானை இழக்க கூடாது என்ற பேச்சுக்கு இங்கு வேலை இல்லையே? என்னுடைய கருத்து என்னன்னா...? என்று சொந்த கருத்தை கொண்டு வர வேண்டியதில்லையே? பொதுக்குழுவில் திருத்தம் என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லையே?
ஆக, சகோதரர்களே! உள்ளாட்சியில் போட்டியிடுவது பைலா படி சரியென்றால், சட்டமன்றம்- நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்கள், மேலே பட்டியலிட்டுள்ள தீமைகள் அனைத்தும் உறுப்பினர்கள் செய்யலாம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா? என்பதுதான் நமது சவாலாகும்.
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!
- அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள காரணம்;
அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.
ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;
அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?
- அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்;
நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகளை நபிகள் நாயகம்[ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கும் காரணம் என்கிறார் பீஜே.
ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;
அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, பீஜே கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம் செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?
இந்தக் காரணமும் பொருந்தாக் காரணேமயாகும்.
இந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி வருமேயன்றி அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது.
சனி, 17 செப்டம்பர், 2011
வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!
தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'வணக்கம் சார்' என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் 'வாழ்க சார்' என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்;
இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 'வாழ்க சார்' என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன 'வாழ்க சார்' என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, '' நன்றாக வாழுங்கள்' என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று.
இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்;
''வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.
நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும்.
ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது'' என்கிறார் பீஜே.
படிக்க;http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும் அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் 'வாழ்க சார்' என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார்.
பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் 'வாழ்க சார்' என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு 'வாழ்க சார்' என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்?
இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் 'வாழ்க சார்' என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது.
இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
சனி, 10 செப்டம்பர், 2011
நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா?
நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான்.
என்று அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா? [நவூதுபில்லாஹ்]. எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related
சனி, 3 செப்டம்பர், 2011
முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!
ஒரு சட்டத்தில் ஒரே வசனத்தை ஆதாரமாக வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
இமாம்கள் மாற்றினார்களே என்கிறார்கள். எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில் மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள். அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
வெள்ளி, 2 செப்டம்பர், 2011
பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!
நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர்.
பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.
யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-
நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)
இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.
ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.
எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.
தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.
48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.
- தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார்.
- முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.
- இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும். எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
- முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.
சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும் உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
திருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? பீஜே அன்றும்-இன்றும்.
''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.
"(நபியே!) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.
இதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் "நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, "திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.
மொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது "முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.
திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட "இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.
ஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.
இஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன.
(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.
(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.
(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.
இவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.
(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.
இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு "குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்களில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.
மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.
எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.
பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.
அவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை "நஜாத்" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது "இன்ஷா அல்லாஹ்" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]
அன்பு சகோதரர்களே! மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.
மேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;
- திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.
- அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.
- அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.
- அவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.
- ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
மேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
நஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று "தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்" என்று எச்சரிக்கின்றது.
எனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.
மேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின் இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும் ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
இன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா? ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா?
சிந்தியுங்கள் மக்களே!
குர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள் பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா? அமர்ந்தானா? பீஜே அன்றும்-இன்றும்!
மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
சகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்!
தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.
"மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)
இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!
- நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?
K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.
இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.
(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்!
பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்!
S.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.
ஆமாம்! குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான்.
"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்" (அல்குர்ஆன் 5:44)
இந்த இறைவசனம், "மூஸா" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்" என்று தெளிவாகின்றது.
-அந்நஜாத்1986 அக்டோபர்
நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/398/
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா!
- ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389) - கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)
- உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)
- ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519) - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)
- மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?
-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.

