அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 31 மே, 2009

[இதஜவின் சமூகத் தீமை எதிர்ப்பு மாதம். பிப்-2011] புகை நமக்கு பகை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இந்த புகையிலை நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர்கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்துவருகிறது. ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக, சிகரெட்டாக, பான்பராக்காக, குத்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.

ஒரு புகைபிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.

புகைப்பவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.


நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி]

மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.

புகையிலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பரிசுகள்;
*காசநோய்
*நுரையீரல் நோய்கள்.
*இருதயம் மற்றும் ரத்த சம்மந்தமான நோய்கள்.
*புற்றுநோய்.
*ஆண்மைக்குறைவு.

பொருளாதார வீண் விரயங்கள்;
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]

நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா? சிந்திக்க வேண்டும்.

புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்தின் கவனத்திற்கு;
இன்று முதல் சிகரெட், பீடி பாக்கெட்களில் அபாய படம் இடம்பெறவேண்டும் என்று அறிவித்துள்ளது அரசு. இந்த சட்டத்தால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், புகைப்பதால் ஏற்படும் நோய்களை சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிட்டபின்னும் விற்பனை அதிகரித்ததே அன்றி குறையவில்லை. ஏற்கனவே, பொது இடங்களில் புகைப்பிடிக்கத்தடை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புகையிலை, சிகரெட் போன்றவை விற்கவேண்டும் என்ற சட்டம் ஆகியவை வெறும் ஏட்டளவில் உள்ளதுபோல் இந்த அபாயபடமும் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. இந்த வெட்டியான சட்டங்களையும், அதை மக்களுக்கு விளக்குகிறோம் என்றபெயரில் கோடிகளை விரையமாக்குவதை விட, 'புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களும் விற்க தடை' என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து, அரசின் வருமானத்திற்காக புகையிலையை அனுமதிப்பது; பிறகு அதை தடுக்க 'பொம்மை'யை காட்டுவது; சட்டம் போடுவது, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும்.
அரசு புரிந்து கொண்டால் சரி!

சமுதாய நலன் நாடி வெளியீடுவது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.


தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,655690

புதன், 27 மே, 2009

அர்ஷின் நிழல் பெரும் அதிர்ஷ்டசாலிகள் யார்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நாம் கோடைக்காலத்தை அடைந்திருக்கிறோம். இந்த கோடைக்காலத்தை பொருத்தமட்டில் வெப்பம் நம்மை வாட்டிவதைக்கின்ற காரணத்தால் வெப்பத்திலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, வீட்டிலிருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், அவ்வளவு ஏன் காரிலே பயணித்தாலும் ஏ.சி. எனப்படும் குளிர்சாதன பெட்டி மூலம் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். அதோடு இந்த கோடைகாலத்தில் குளிற்சியான பிரதேசங்களுக்கு இன்ப சுற்றுலா சென்று நம்மை பாதுகாத்துக்கொள்கிறோம். வசதியற்றவர்கள் அவர்களுக்கு தக்கவாறு வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வழியை கடைபிடிக்கிறார்கள். இந்த அளவு சுமார் நான்கு மாதகாலம் நம்மை பாடாய்படுத்தும் வெப்பத்தை உமிழும் இந்த சூரியன் நமக்கு அருகாமையில் உள்ளதா என்று நாம் ஆய்வு செய்து பார்த்தால், சூரியன் பூமியிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த அளவுக்கு வெகு தொலைவில் உள்ள சூரியனின் வெப்பத்தை நம்மால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், நாளை மறுமையில் மஹ்ஷர் எனப்படும் இறுதி விசாரணை மைதான நிலையை எண்ணிப்பாருங்கள்; அந்த நாளில் சூரியன் நமது தலைக்கு மேலாக இருக்கும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள். ஒருபுறம் சூரியனின் உச்சகட்ட தாக்குதல் ஒருபுறம்-மறுபுறம் நம் தீர்ப்பு என்னாகுமோ என்ற அச்சம் ஒருபுறம். ஒவ்வொருவரும் வியர்வையில் குளித்துக்கொண்டிருக்கும் அந்த நாளில், எவ்வித நிழலும் இல்லாத அந்த நாளில் அல்லாஹ், தனது அரியாசனமான 'அர்ஷின்' நிழலை எழு சாரார்க்கு தருவான் என்று நபியவர்கள் கூறிய பொன்மொழி இதோ;

அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர். [நூல்;புஹாரி] .
நீதிமிக்க அரசன்.
அரசன் என்பவன் தனக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்யக்கூடாது. மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. மக்களின் சொத்துக்களை அபகரிக்கக்கூடாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , நீதி செலுத்தும் விஷயத்தில் வேண்டியவர்- வேண்டாதவர், பணக்காரர்- ஏழை, சமூகத்தில் அந்தஸ்துடையவர்- பாமரன் என்றெல்லாம் வேறுபாடு பார்க்கக்கூடாது. அனால் இன்று ஆட்சியாளர்கள் பெரும்பாலும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்றால், வலியோன்- எளியோன் என்ற அடிப்படையில்தான் நீதி வழங்குகின்றனர். வலுவான ஆதாரங்களுடைய கொலைக்குற்றவாளி, ஆள்பலம் அந்தஸ்துபலம் உள்ளவனாக இருந்தால் அவனுக்கு ஜாமீன் என்ற பெயரில் விடுதலை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பலவீனன் விசாரணைக்கைதியாக இருந்தால் அவன் பத்து ஆண்டுகள் சிறையில் கழித்து இருந்தாலும் அவனுக்கு குறைந்தபட்ச ஜாமீன் கூட மறுக்கப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆனால், ஐந்தாண்டுகள் ஒரு குறுகிய நிலப்பரப்பை ஆளும் இவர்களைவிட மிகப்பெரிய வல்லரசை ஆண்ட எம் தலைவர் ரசூல்[ஸல்] அவர்கள், நீதி வழங்கும் விஷயத்தில் நடந்துகொண்ட நேர்மை பாரீர்;

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள். [புஹாரி]

இந்த செய்தியில் உயர்ந்த குலம் என்று அறியப்பட்ட ஒரு பெண்மணியை தண்டனையிலிருந்து விடுவிக்க, நபியவர்களின் நேசத்திற்குரிய உசாமா அவர்கள் பரிந்துரைக்க, நபியவர்கள் கடும் கோபம் கொண்டு என்மகள் திருடினாலும் தண்டிப்பேன் என்றார்களே! இதுதான் நீதி! இப்படிப்பட்ட பாரபட்சமற்ற ஆட்சி நடத்தும் அரசன் [முஸ்லிமாக இருந்தால்] அர்ஷின் நிழல் பெறுவான்.
2அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
பொதுவாக மனிதன் அதிகம் தவறு செய்வது இளமைப்பருவத்தில்தான். 'இளங்கன்று பயமறியாது' என்பார்களே! அதுபோன்று இளமை பருவத்தில் எந்த தவறையும் துணிந்து செய்யும் மனப்பக்குவம் உள்ளநிலையில், தவறுகளை புறந்தள்ளி தன்னைப்படைத்த அல்லாஹ்வுக்கு அஞ்சியவனாக அல்லாஹ்வை வணங்கும் இளைஞன் அரசின் நிழல் பெறுவான்.
3பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
பள்ளிவாசலுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன் எனில், அவன் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மட்டுமல்லாது, அவன் வியாபாரத்தில் இருந்தாலும், குடும்ப விஷயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இன்னும் அவன் எந்தெந்த காரியாங்களில் இருந்தாலும் அவனின் உள்ளம் அடுத்த வக்த் தொழுகையை எதிர்நோக்கி, பள்ளியோடு அவன் உள்ளம் பிணைந்திருக்கும். இப்படிப்பட்ட உள்ளம் உள்ளவனால்தான் முறையாக தொழுகையை நிறைவேற்றமுடியும். தொழுகையை முறையாக- முழுமையாக கடைபிடிப்பவன்தான் மார்க்கத்தின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துவான். இப்படிப்பட்ட உள்ளமுடையவன் அர்ஷின் நிழல் பெறுவான்.
4அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
முஸ்லிம்களின் நேசம் என்பது அல்லாஹ்வுக்காக என்ற அடிப்படையிலும், பிரிவு என்பதும் அல்லாஹ்வுக்காக என்ற அடிப்படையிலும் இருக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான் சத்திய சகாபாக்களின் உறவும் -பிரிவும் இருந்தது. ஆனால் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று சொல்பவர்களாகிய நம்மிடம், உறவும்-பிரிவும் அல்லாஹ்வுக்காக என்ற நிலைமாறி, 'அண்ணனுக்காக' 'அமீருக்காக' 'கழக தலைவருக்காக' என்ற அடிப்படை வந்து விட்டது . நாம் மேலே கூறிய படி சகாபாக்கள் அல்லாஹ்வுக்காக நேசம் வைத்ததற்கு மிகச்சிறந்த உதாரணம்; மக்கத்து முஹாஜிர்களும்-மதீனத்து அன்சாரிகளும் சகோதரர்களாக மாறினார்களே! நேற்றுவரை யாரென்றே தெரியாத மக்கத்து முஹாஜிர்களுக்கு மதீனத்து அன்சாரிகள் தங்களின் சொத்துக்களில் பங்கு கொடுக்கும் அளவுக்கு நேசம் காட்டியதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வுக்காக!அதுபோல் சகாபாக்கள் பிரிவதும் அல்லாஹ்வுக்காக என்பதற்கு ஒரு சான்று;'

நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.[புஹாரி]

இந்த செய்தியில் உக்பா இப்னு ஹாரிஸ்[ரலி] அவர்கள், மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில் தனது மனைவி தனக்கு பால்குடி சகோதரியாகவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டவராகவும் இருப்பதையரிந்த உடனே விவாகரத்து செய்தாரே! இதற்கு என்ன காரணம் அல்லாஹ்வுக்காக என்ற ஒன்றைத்தவிர வேறில்லை.ஆக இப்படிப்பட்டவர்கள் அரசின் நிழல் பெறுவர்.
5 .அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன்.
ஒரு ஆண்மகன் திருடாதவனாக, மது அருந்தாதவனாக, புகை பிடிக்காதவனாக இருப்பது எளிதான ஒன்றாகும். அதே நேரத்தில் அவன் ஆண்மையை தூண்டக்கூடிய வகையில் ஒரு பெண் அதுவும் அழகான, அந்தஸ்தும் நிறைந்த பெண் அழைக்கும்போது கண்டிப்பாக இறையச்சம் உள்ள ஒருவனால்தான் அந்த பெரும்பாவத்திலிருந்து தன்னை தனது கற்பை காத்துக்கொள்ளமுடியும். அப்படிப்பட்ட இறையச்சமுடைய ஒருவரை பற்றி அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لاَ يُفْلِحُ الظَّالِمُونَஅவர்[யூசுப்] எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக! நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (1௨ :௨ 3)
இந்த வசனத்தில் அல்லாஹ் நபி யூசுப்[அலை] என்ற கற்புக்கரசரை பற்றிக்கூறுகின்றான். இதுபோன்று, ஒரு பெண் அழைத்தபோதும் அல்லாஹ்வுக்கு அஞ்சி யார் விலகி கொள்கிறாரோ அவர் அர்ஷின் நிழல் பெறுவார்.
6தன்னுடைய இடக்கரத்துக்கு தெரியாமல்[ரகசியமாக] வலக்கரத்தால் தர்மம் செய்பவன்;
தர்மம் செய்வதில் இருவகை உண்டு. ஒன்று யாரும் அறியாமல் ரகசியமாக தர்மம் செய்வது. மற்றொன்று செய்யும் தர்மத்தை பகிரங்கமாக செய்வது. இந்த இரண்டுவகை தர்மத்திற்கும் மார்க்கத்தில் அனுமதியுண்டு. பகிரங்கமாக செய்யும் தர்மத்தை பொறுத்தவரையில் அந்த தர்மம், தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக்கொள்பவர்களை தர்மம் செய்ய தூண்டும் வகையில் இருக்கவேண்டும். மாறாக பிறர் பாராட்டவேண்டும் என்ற அடிப்படையில் இருக்கக்கூடாது. ஆனால் இன்று பெருநாள் தர்மமாக வழங்கக்கூடிய மூன்றுகிலோ அரிசியை முன்னூறு போட்டோ எடுத்து பத்திரிக்கைகளில் பரப்புவதும், தொலைக்காட்சி, இன்டெர்நெட்டுகளில் காட்சிப்பொருள் ஆக்குவதையும் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக பல சகோதரர்களிடம் இருந்து வசூலித்து விநியோகிக்கப்படும்போது, தங்கள் அமைப்பு/கழகம் சார்பாக வழங்கியதாக சுய தம்பட்டம் வேறு. இதயெல்லாம் தாண்டி ஒரு முஸ்லீம் தான் செய்யும் தர்மம் அல்லாஹ் மட்டும் அறிந்தால்போதும் என்று ரகசியமாக செய்யும் தர்மம் அவனுக்கு அர்ஷின் நிழலை பெற்றுத்தரும்.
தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து [அல்லாஹ்வின் அச்சத்தால்] கண்ணீர் வடித்தவன்.
ஒருவனுடைய தக்வாவை உரசிப்பார்க்கும் இடம் தனிமைதான். பொதுவில் பலபேர் முன்னிலையில் தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ளும் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் அயோக்கியர்களாக இருப்பர். பொதுவில் பலபேர் முன்னிலையில் தன்னை அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவர்களாக காட்டுவது எளிது. அதுவல்ல தக்வா. உண்மையான தக்வா என்பது தனிமையில் இருக்கும்போது இறைவனைப்பற்றி, அவன் வல்லமைகளை பற்றி, அவன் கெட்டவர்களுக்காக சித்தப்படுத்தி வைத்திருக்கும் தண்டனைகள் பற்றி சிந்தித்து, அந்த சிந்தனையின்போது அவனையும் அறியாமல் கண்ணீர் சுரக்குமே அதுதான் உண்மையான தக்வா. இப்படிப்பட்ட தக்வா உடையவர்கள் அர்ஷின் நிழல் பெறுவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அந்த மகத்தான சோதனை நாளில் நம்மீது கருணை பொழிந்து, கோழி தன் குஞ்சுகளை சிறகினுள் மறைத்து பாதுகாப்பது போன்று நமக்கு அர்ஷின் நிழல் எனும் பாதுகாப்பையும், நிரந்தர சொர்க்கத்தையும் வழங்குவானாக!

வியாழன், 21 மே, 2009

சாபத்திற்குரியவர்கள் யார்..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும் சாபம், நபிமார்களின் சாபம், இறைவனின் கட்டளைப்படி மலக்குகள் விடும் சாபம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக படைத்த இறைவனின் சாபம். இத்தகைய சாபங்களில் எந்த வகைசாபத்தை நாம் பெற்றாலும் நாம் மறுமையில் ஈடேற்றம் பெறமுடியாது. எனவே, சாபத்திற்குரியவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது என்ற அடிப்படையில் சாபத்தை பெற்றுத்தரக்கூடிய சிலவிஷயங்களை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம்.
அல்லாஹ்வின் சாபம்;
அல்லாஹ்வின் சாபத்தை பொறுத்தவரையில், பாரதூரமான பெரிய பாவங்களை செய்தால்தான் அல்லாஹ்வின் சாபம் நம்மீது ஏற்படும் என்றில்லை. நாம் சாதாரணமாக செய்துவரும் சிலவிஷயங்கள் கூட அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரக்கூடியதாக இருக்கலாம். நாம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகாலையில் ரயிலில் பயணம் செய்தால் ஒரு காட்சியை காணலாம். அதாவது ரயில் தண்டவாளங்களின் அருகே சிலர் 'காலை கடன்களை' நிறைவேற்றிக்கொண்டிருப்பதை காணலாம். மேலும் சில இடங்களில் தெருக்களில் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளபகுதிகளில், மரங்களின் மறைவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலஜலம் கழிப்பவர்களையும் நாம் பார்க்கிறோம். இது அவர்களின் பார்வையில் சாதாரணம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு இது பாரதூரமான விஷயமாகும்.

நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரக்கூடிய இரு விஷயங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்றவுடன், சகாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! என்ன அந்த இரு விஷயங்கள் என்று வினவ, மக்கள் நடமாடும் பாதைகளிலும், இளைப்பாறும் மரநிழல்களிலும் சிறுநீர் கழிக்காதீர்கள் என்று கூறினார்கள்.[நூல்;அஹ்மத்]
நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்;
அல்லாஹ் மனிதனை படைத்திருக்க, அவனைபற்றி அவனது ஆற்றல் பற்றி தனது வேதத்தின் மூலமும், தூதர் மூலமும் தெளிவுபடுத்தியபின்னும் அல்லாஹ்வை நிராகரித்து கல்லையும்-மண்ணையும்-கண்டவரையும் வணங்கும் பெரும்பாலோரை பார்க்கிறோம். இத்தகையோர் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்;
نَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّهِ وَالْمَلآئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.[2:161
மார்க்கத்தை மறைப்பவர்கள் மீது;
இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும்பாலோரிடம் மார்க்கத்தில் காட்டித்தராத பித்அத்களும், மூட நம்பிக்கைகளும் மலிந்து காணப்படுவதற்கு காரணம் மார்க்கத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆலிம்கள் தங்களின் சுயனலனுக்ககவோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்திற்காகவோ மார்க்கத்தை மறைத்ததுதான். மேலும், ஒரு விஷயத்தில் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஒரு சட்டத்தை சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக செயல்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக தலாக்; மீட்டிக்கொள்ளக்கூடிய தலாக் இருமுறை என்று அல்லாஹ் தன் அருள்மறையில் கூறியிருக்கிறான். அதோடு நபி[ஸல்] அவர்கள் காலத்திலும், அபூபக்கர்[ரலி]அவர்கள் காலத்திலும், உமர்[ரலி] அவர்கள் ஆட்சியின் பாதிவரையிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகத்தான் இருந்தது [முஸ்லிம்] என்ற தெளிவான ஹதீஸ் இருக்க, இன்று சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்வோர் ஒரே தடவையில் முத்தலாக்கை நடைமுறைப்படுத்தி மார்க்கத்தை மறைத்து, திரிப்பதை பார்க்கிறோம்.
அல்லாஹ் கூறுகின்றான்;
نَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَـئِكَ يَلعَنُهُمُ اللّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.[2:159]
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியோர் மீது;
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللّهِ كَذِبًا أُوْلَـئِكَ يُعْرَضُونَ عَلَى رَبِّهِمْ وَيَقُولُ الأَشْهَادُ هَـؤُلاء الَّذِينَ كَذَبُواْ عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللّهِ عَلَى الظَّالِمِينَ
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.[11:18]
அல்லாஹ்வுக்கு மகனை கர்ப்பித்தவர்கள் மீது;
நபி ஈஸா[அலை] அவர்கள் அல்லாஹ்வின் மகனென்று ஒரு சாராரும், உஸைர்[அலை] அல்லாஹ்வின் மகனென்று ஒரு சாரரும் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகின்றனர். அல்லாஹ் இவைகளைவிட்டும் தூய்மையானவன். மேற்கண்ட இருவரும் அல்லாஹ்வின் அடிமைகள் அன்றி அல்லாஹ்வின் மகனல்ல என்று திருமறையில் அல்லாஹ் தெளிவாக அறிவித்துள்ளான். இதன் பின்னும் யாரேனும் இவர்களை அல்லாஹ்வின் மகனென்று வாதிட்டதால்,
அல்லாஹ் கூறுகின்றான்;

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ وَقَالَتْ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُواْ مِن قَبْلُ قَاتَلَهُمُ اللّهُ أَنَّى يُؤْفَكُونَ
யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?[9:30 ]
முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு;
நம்மில் பெரும்பாலோர் சாதாரணமாக நல்ல பெண்கள் மீது சேற்றை வாரியிறைக்கும் விதமாக, அவர்களின் நடத்தை சம்மந்தமாக ஏதேனும் ஒரு அவதூறை வீசிவிட்டு செல்வதை பார்க்கலாம். அதனால் அந்த ஒழுக்கமான பெண் சமூகத்தில் படும் அவலங்களையும், அப்பெண்ணுக்கு ஏற்படும் மன வேதனைகளையும் இந்த அவதூறு கூறுவோர் சற்றும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அல்லாஹ் இப்படிப்பட்டவர்கள் மீது கடும் கோபம் கொள்கிறான்;

إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.[24:23]
தர்காக்களை எழுப்பியோர் மீது;
நமது தமிழகத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்கு பள்ளிவாசல் இல்லாத ஊரை காணலாம். ஆனால் தர்கா இல்லாத ஊரை காணமுடியாது என்று சொல்லுமளவுக்கு தடுக்கிவிழுந்தால் தர்காவில் விழும் அளவுக்கு தர்காக்கள் மலிந்து காணக்கிடைக்கிறது. அதோடு இந்த தர்காக்களுக்கு பயணம் மேற்கொள்வதோ எதோ மார்க்கத்தில் பர்ளாக்கப்பட்டது போன்று மக்கள் படை எடுப்பதையும் பார்க்கிறோம். இந்த தர்காக்களுக்கு வக்காலத்து வாங்கும் மார்க்க அறிஞர்களையும்[?] பார்க்கிறோம். ஆனால் இந்த தர்காக்கள் சாபத்திற்குரிய செயலாகும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்;
நபி[ஸல்]அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள். பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். [நூல்;புஹாரி]
இன்னும் சில சாபத்திற்குரிவைகள்;
#அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார் பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.[புஹாரி]

#இப்னு உமர்(ரலி) கூறினார்; பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்[புஹாரி]

#இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.[புஹாரி]

#அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்; ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?' என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள். [புஹாரி]

அன்பானவர்களே! சாபத்திற்குரிய செயல்களின் பட்டியல் ஏராளம் உண்டு. இருப்பினும் விரிவஞ்சி தவிர்க்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் சாபத்திற்குரிய செயலகளிவிட்டு நம்மை பாதுகாத்து, அவனது அருளுக்குரிய அமல்களை செய்பவர்களாக ஆக்கி அருள்வானாக!

திங்கள், 18 மே, 2009

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்!

உலகில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலோர் நாம் கலிமா சொல்லிவிட்டோம் மேலும் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் எனவே நாம் உறுதியாக சுவர்க்கம் சென்றுவிடுவோம் என்று எண்ணுவதை நாம் பார்க்கலாம். ஆனால் அல்லாஹ், முஸ்லிம்களில் உறுதியான ஈமான் உடையவர்கள் யார்? பலவீனமான ஈமான் உடையவர்கள் யார் என்பதை பரிசோதிக்கும் வகையில் நாம் வாழும் காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளை ஏற்படுத்த்துகிறான். அல்லாஹ்வின் இந்த சோதனைகளை சந்திக்கும் முஸ்லிம்களில் சிலர், என்ன இது! அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத காஃபிர்கள் சுகமாக வாழும்போது அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட எங்களை அல்லாஹ் இப்படி சோதிக்கிறானே என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. ஆனால் சோதனை என்பது கண்டிப்பாக உண்டு.

அல்லாஹ் கூறுகின்றான்;أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْاْ مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاء وَالضَّرَّاء وَزُلْزِلُواْ حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ مَتَى نَصْرُ اللّهِ أَلا إِنَّ نَصْرَ اللّهِ قَرِيبٌஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

ரசூல்[ஸல்]அவர்கள் கூறினார்கள்;மூமீன்கள் அவரவர் ஈமான் அளவுக்கு சோதிக்கப்படுவார்கள்[திர்மிதி]

மேற்கண்ட வசனமும், ஹதீசும் முஸ்லிம்கள் கண்டிப்பாக சோதனைகளை சந்தித்தே தீரவேண்டும் என்பதையும், சோதனைகள் நம் ஈமானை எடைபோடும்-உறுதிப்படுத்தும் காரணியாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

நமக்கு முன் சென்றோர் சந்தித்த சோதனைகளில் ஒன்று;

கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல்) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.[புஹாரி 6943 ]இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக மக்கத்து முஸ்ரிக்குகளால் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சத்திய சகாபாக்களை, நீங்களெல்லாம் என்ன சோதனையை சந்தித்து விட்டீர்கள்? உங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் சந்தித்த சோதனையை பாருங்கள் என்று நபியவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள் என்றால், சோதனையே வாழ்க்கையாக கொண்ட சத்திய சகாபாக்களை விட நாம் அதிக சோதனையை சந்தித்து விட்டோமா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

நபிமார்களும் சோதிக்கப்பட்டுள்ளார்கள்;

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள், கூறுகிறார்கள்;'அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன' என்று கூறினார்கள். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி 4525 ]

நிராகரிப்பாளர்கள் மீதான சோதனை;

மூமீன்கள் மீது ஏற்படும் சோதனைக்கும், நிராகரிப்பாளர்கள் மீது ஏற்படும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், மூமீன்கள் மீதான சோதனை அவர்களுக்கு மறுமையில் நன்மையை பெற்றுத்தரும். காஃபிர்களுக்கு இவ்வுலக சுகவாழ்க்கை என்பது ஒருவகையான சோதனையாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்;وَلاَ يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُواْ أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِّأَنفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُواْ إِثْمًا وَلَهْمُ عَذَابٌ مُّهِينٌஇன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

மூமீன்கள் மீதான இறைவனின் சோதனைகளின் வகைகள்;وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوف

وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக![2:155 ]

பசியைக்கொண்டு சோதனை;

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட பசியைக்கொண்டு இறைவன் சோதிக்கும்போது அதையும் தாங்கிக்கொள்வது ஒரு மூமினின் பண்பாகும். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த நபி[ஸல்] அவர்களே பசியால் வாடியிருக்கிறார்கள்.

அய்மன் அல்ஹபஷீ(ரஹ்) அறிவித்தார்;நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுப பற்றித் தெரிவிக்க) நபி(ஸல்), அவர்களிடம் சென்று, 'இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது" என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்), நாங்கள் மூன்று நாள்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4101 ]பயத்தை கொண்டு சோதனை;

பொதுவாக இன்று தலைவர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள் எனில், அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும் தைரியம்தான். அதே தலைவர் தனிமைப்படுத்தப்பட்ட்டால் பயத்தின் காரணமாக அடங்கிவிடுவார். அதுபோல் பத்துபேர் கூடியிருக்கும் நிலையில் ஒருவருக்குள்ள தைரியம் தனிமையில்இருக்கும்போது இருப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லீம் கூட்டமாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, சத்தியத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தயங்கக்கூடாது. இதோ! தனி மனிதராக பயம் என்ற சோதனையை வென்ற அபூதர் அல் கிஃபாரி[ரலி] அவர்களை பாருங்கள்;

அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார் எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)" என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூ தர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா" என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு" என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்" என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை" என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே" என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்" என்று கூறினார்கள். நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்" என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்" என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! (நீ இ!லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா" என்று கூறினார்கள். அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!" அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்" என்று சொன்னேன். உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலம்விட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள். (இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!" என்று கூறினார்கள். [புஹாரி எண் 3522 ]

செல்வத்தை கொடுத்தும் எடுத்தும் சோதனை;

சுலைமான்[அலை] அவர்களுக்கு அல்லாஹ், வேறு யாருக்கும் வழங்காத ஆட்சி அதிகாரத்தையும், செல்வத்தையும் வழங்கியதை நாம் அறிவோம். அந்த சுலைமான்[அலை] அவர்கள் அல்லாஹ்விடம் கெட்ட பிரார்த்தனையை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்;فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَஅப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.

வசதியான குடும்பத்தில் பிறந்து இஸ்லாத்தை ஏற்றபின் வறுமையில் வாழ்ந்து ஷஹீதான முஸ்அப்[ரலி] அவர்களின் நிலை பாரீர்;

நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின்மு உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். [புஹாரி]

நேசத்திற்குரியவர்களின் உயிர்களை கைப்பற்றும்போது;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.[புஹாரி]

சோதனைகள் பாவத்திற்கு பரிகாரமாகும்;

மூமின்களின் அனைத்து சோதனைகலும், துன்பங்களும் நோய் எதுவாகிலும் அவரது பாவங்களுக்கு பரிகாரமாகும்.அவரது காலில் குத்தும் முள் உட்பட[புஹாரி]

பாதுகாப்பு பெற;

nabi[sal]அவர்கள், 'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸிஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். [புஹாரி]

இறுதி வெற்றி மூமின்களுக்குத்தான்;وَلاَ تَهِنُوا وَلاَ تَحْزَنُوا وَأَنتُمُ الأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَஎனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.[3;139]

அன்பானவர்களே! அல்லாஹ்வை நம்பிய முஸ்லிம்களை சோதிப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த ஆதாயமுமில்லை. இருப்பினும், தங்கத்தை நெருப்பிலிடுவது அதன் தரத்தை உறுதிப்படுத்தவே! அதுபோல் உண்மை முஸ்லிம்களாகிய நம்மை இறைவன் சோதிப்பது நம்முடைய ஈமானையும், அமல்களையும் செம்மைப்படுத்தி சொர்க்கத்திற்குரியவர்களாக மாற்றவே!!



வெள்ளி, 8 மே, 2009

சிறுமைப்படுத்தி நரகில் தள்ளும் பெருமை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மனிதர்களில் சிலர் பெருமைக்காக வாழ்பவர்கள் உண்டு. இவர்கள் ஒரு சிறு துரும்பை அசைத்தாலும், அதை மலையளவில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி பெருமைப்பட்டுக்கொள்வார்கள். இன்னும் சிலர் உண்மையிலேயே உதவும் உள்ளத்தோடு சில உதவிகளை சிலருக்கு செய்வார்கள்.இவர்கள் பெருமைக்காக செய்வதில்லை ஆனால், இவர்கள் செய்த உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் அல்லது இவர்கள் செய்த உதவிகளை காணும் சிலர், இவர்களின் இந்த பணியை புகழ்ந்துரைக்கும்போது அவர்களின் உள்ளத்தில் பெருமை குடிகொண்டுவிடும். அதுபோல வசதிபடைத்தவர்களும், தங்களை உயர்ந்த படைப்பாக கருதிக்கொண்டிருப்பவர்களும், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்களை விடதங்களை தாங்களே பெருமைக்குரியவர்களாக கருதுபவர்களையும் பார்க்கலாம். அதுபோல் சாதாரணமாக எளிமையாக இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பும், ஒரு கூட்டமும் உருவாகிவிட்டால் தங்களை மிஞ்ச ஆளில்லை என்ற பெருமையும் கர்வமும் கொள்கிறார்கள். மேலும் மார்க்கத்தில் சிலவிஷயங்களில் தெளிவு இருக்கின்ற காரணத்தால், எதோ முழுமையாக இஸ்லாத்தை கரைத்து குடித்துவிட்டவர்களை போல கர்வம் பிடித்து அலைபவர்களையும் அறிஞர்கள் என்ற போர்வையில் காணலாம். இவ்வாறாக பெருமை ஏதேனும் ஒரு வடிவில் பெரும்பாலோரை ஆட்டிவைக்கும் நிலையில் பெருமை பற்றிய சில விஷயங்களை பார்க்கலாம்.
பெருமை என்பது ஷைத்தானின் குணம்;
அல்லாஹ் ஆதம்[அலை] அவர்களை படைத்த பின் ஆதம்[அலை] அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் பணித்தபோது ஷைத்தான் இறைவனின் கட்டளையைபுறக்கணித்து மறுத்ததோடு, கர்வத்தோடு கூறியதை இறைவனின் இறைவனின் அருள்மறையில் சொல்லிக்காட்டுகிறான்;


وَإِذْ قُلْنَا لِلْمَلآئِكَةِ اسْجُدُواْ لآدَمَ فَسَجَدُواْ إَلاَّ إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ "களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?" என்று கூறினான்.[17:61]


قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ الْعَالِينَ
"இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான். (38:75)
قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்" என்று (இப்லீஸ்) கூறினான். (38:76)
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ
(அப்போது இறைவன்) "இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்" எனக் கூறினான். (38:77)
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ
"இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்" (எனவும் இறைவன் கூறினான்). (38:78)
இறைவனின் கட்டளையை புறக்கணித்து பெருமையடித்த ஷைத்தான், யுகமுடிவு நாள்வரை இறைவனின் சாபத்திற்குரியவனாக மாறிவிட்டான். அவ்வாறு அவனை மாற்றியது பெருமைதான். எனவேதான் பெருமை என்பது ஷைத்தானின் குணம் எனபது தெளிவு.
பெருமையடிக்க மனிதனுக்கு அருகதையில்லை;

وَلاَ تَمْشِ فِي الأَرْضِ مَرَحًا إِنَّكَ لَن تَخْرِقَ الأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولاً
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.[17:37]
அற்பமான விந்துதுளியில் இருந்து படைக்கப்பட்டு, பலவீனமான நிலையில் வாழ்ந்து மரணிக்கும் மனிதனுக்கு பெருமை கொள்வதில் எந்த தகுதியும் இல்லை எனபதை மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்துகிறது.
பெருமை அல்லாஹ்வுக்கே தனிப்பட்ட காப்புரிமையாகும்;

وَلَهُ الْكِبْرِيَاء فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.[45:37]
பெருமை எனபது தனக்கே உரியது என்று இறைவன் சொல்லிக்காட்டியுள்ள நிலையில், அவனால் படைக்கப்பட்ட அற்பமான மனிதர்கள் பெருமையடிப்பது அறிவீனமில்லையா?
செல்வத்தை கொண்டு பெருமையடிக்காதீர்;

إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள். (28:76)
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்). (28:77)
قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِندِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِن قَبْلِهِ مِنَ القُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَن ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ
(அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். (28:78)
فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; "ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்"' என்று கூறினார்கள். (28:79)
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِّمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ
கல்வி ஞானம் பெற்றவர்களோ "உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள். (28:80)
فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِن فِئَةٍ يَنصُرُونَهُ مِن دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ المُنتَصِرِينَ
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. (28:81)
وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاء مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَن مَّنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், "ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள். (28:82)
ஆடை அணிகலன்களில் பெருமையடிக்காதீர்;
அல்லாஹ் அழகானவன்.அவன் அழகை விரும்பக்கூடியவன் எனவே நமக்கு அல்லாஹ் அழகான ஆடை அணிகலன்களை தந்திருந்தால் அதை அணிவதில் தவறில்லை. ஆனால் அதைக்கொண்டு பெருமையடிக்கக்கூடது. சிலர் தனது ஆடையை கரண்டைக்கு கீழாக தரையை பரசும் அளவுக்கு அணிந்துகொண்டு பெருமையாக நடந்துவருவதை காணலாம். இவ்வாறு ஆடை விசயத்தில் பெருமையடிப்பவரின் நிலை பற்றி நபி[ஸல்] அவர்களின் கூற்றை பாரீர்;

நபி(ஸல்) அவர்கள்' அல்லது 'அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி,எண் 5789 ]

மற்றொரு ஹதீஸில்,
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், 'யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்' என்று கூறினார்கள்[நூல்;புஹாரி எண் 5784 ]
அடுத்தவரின் நற்செயலை முகத்துக்கு நேரே புகழாதீர்கள்;
ஒரு தடவை நபிகளார் (ஸல்) முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன் , ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]
பெருமையடிப்பவர்களின் மறுமை நிலை;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், 'பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்' என்று சொன்னது. சொர்க்கம், 'எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்' என்று கூறியது.[நூல்;புஹாரி எண் 4850 ]
நிரந்தர நரகம்;

قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ
"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.[அல்-குர்ஆன்39:72]
மூமீன்களின் பண்பு;

إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.[அல்-குர்ஆன்32:15 ]

இறைவனுக்கு மட்டுமே உரித்தான பெருமையை நிரப்பமாக அவனுக்கே உரித்தாக்கி, அவனை 'பெருமைப்படுத்துவதன்' மூலம் சொர்க்கத்தை அடைவோம்.

تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.[அல்-குர்ஆன்28:83 ]





செவ்வாய், 5 மே, 2009

இணைந்த துருவங்களும்-இஸ்லாமிய நிலைப்பாடும்!



وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.[3 ;103 ]
மேற்கண்ட வசனத்திற்கேற்ப அல்லாஹ் தவ்ஹீத் எனும் அருளின்மூலம் மேற்கண்ட இரு சகோதரர்களை ஒன்றினைத்தான். ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியால் கடந்த ஐந்தாண்டுகளாக இவர்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் சாடும் நிலையை உண்டாக்கினான். இப்போது மீண்டும் அல்லாஹ்வின் அருளால் இந்த இரு துருவங்களும் ஒன்றினைந்துள்ளது. இந்த இணைப்புக்கு 'அரசியல்' முத்திரை சிலர் குத்தினாலும், முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களுக்கு இவர்களின் இந்த இணைப்பில் படிப்பினை உள்ளது. அமைப்புகள் வேறாக இருந்தாலும் சமுதாயநலன் என்ற விஷயத்தில் ஒன்றிணைந்த இவர்கள் நாளடைவில் ஒரே அமைப்பாகவும் இணைய இறைவன் நாடுவான். இவர்களை பின்பற்றி அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் 'சமுதாய நலன்' என்ற குடையின் கீழ் ஒன்றுபட முன்வரவேண்டும். இல்லை இல்லை 'எங்கள் வழி தனி வழி' என்று எவராவது 'வெட்டி'க்கொண்டு செல்ல நினைத்தால் அவர்கள் கீழ்கண்ட நபிமொழிகளை புறக்கணிக்கிறார்கள் என்று அர்த்தம்.
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல.அவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் யாரேனும் வெறுத்து அந்த நிலையில் அவர் மரணமடைந்தால் நரகம் செல்வார்.[நூல்;அபூதாவூத்]
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒருவன் தன் சகோதரனை ஒருவருடம் வெறுத்தால் அவன் அவனைக்கொலை செய்தவன் போலாவான்.[நூல்;அதபுல்முஃப்ரத்]
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒவ்வொரு திங்கள்-வியாழன் ஆகிய இரு நாட்களில் மனிதர்களின் செயல்கள் இறைவனிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. அப்போதுமூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக்கொண்ட இருவரைத்தவிர. அவ்விருவரையும் விட்டுவிடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திபோடுங்கள்- அவ்விருவரும் சமாதானம் ஆகும்வரை! என வானவர்களிடம் கூறப்படும்.[நூல்;முஸ்லீம்]
நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒருவர் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொள்ளக்கூடாது.இருவரும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் புறக்கணித்து செல்லக்கூடாது. அவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்.[நூல்;புஹாரி]
சொல்வது எமது கடமை; செவிமடுப்பதும், புறக்கணிப்பதும் பினங்கியிருப்பவர்களின் உரிமை. முடிவு..? முடிவில்லாதவனின் [அல்லாஹ்வின்] நீதிமன்றத்தில்!

திங்கள், 4 மே, 2009

கோபப்படாதே சகோதரா!

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற அருமையான பழமொழியை நாம் செவிமடுத்திருப்போம். உலகில் ஏற்படும் அத்துணை இன்னல்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கோபம் ஒரு காரணமாக அமைந்து இருப்பதை நாம் காணலாம். ஒரு நாட்டின் அதிபர் மீது இன்னொரு நாட்டு அதிபர் கொள்ளும் கோபம் இருநாட்டு மக்களின் இன்னுயிரை 'போர்' என்ற பெயரில் பறிக்கிறது. ஒரு அமைப்பின் நிர்வாகிகளுக்குள் ஏற்படும் கோபம் அமைப்பு பிளவுபடவும், அதன்மூலம் நேற்றுவரை சகோதரர்களாக இருந்தவர்கள் பகைவர்களாக வலம் வரவும் காரணமாவதோடு, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாகவும் அமைகிறது. ஒரு சாரார் மீது கொண்ட கோபம், அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் சமுதாயத்தை 'புறம்தள்ளியவர்களுடன்' கரம் கோர்க்கவைக்கிறது. இது ஒருபுறமிருக்க, குடும்ப அளவில் கணவன்-மனைவி இடையில் ஏற்படும் கோபம் குடும்பமெனும் கப்பல் மூழ்கியேவிடுகிறது. அற்பமான விஷயங்களில் அருமையான உறவினர்கள்மீது கொண்ட கோபம் உறவெனும் கயிறு அறுபட்டு பிரிகிறது. இத்தகைய கோபம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். [70:19]

மனிதனின் அவசர முடிவின் காரணமாகவும், கோபத்தின் காரணமாகவும் அவனுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதால்தான் மனிதன் அதிகமாக அவசரப்பட்டு முடிவெடுக்கும் தலாக் விசயத்தில் இறைவன், மூன்று வாய்ப்புகளை வழங்குகிறான்;


الطَّلاَقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلاَ يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُواْ مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلاَّ أَن يَخَافَا أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللّهِ فَأُوْلَـئِكَ هُمُ الظَّالِمُونَ
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.[2:229]
யார் வீரன்..?
நம்மிடத்தில் ஒரு வீரனை அடையாளம் காட்டுமாறு கேட்கப்பட்டால், நாம் பலசாலியான ஒருவரைத்தான் அடையாளம் காட்டுவோம். ஆனால் உண்மையான வீரன் யார் என்று நபியவர்கள் கூறுவதை பாருங்கள்;

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி![ நூல்: புகாரி, முஸ்லீம்
பலமிருந்தாலும் பணிவு காட்டுங்கள்;
முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹ_ருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூதாவூத் , திர்மிதி)
கோபத்தை மென்று விழுங்கிய உமர்[ரலி]அவர்கள்;
சகாபாக்களில் உமர்[ரலி] அவர்கள், மார்க்க விஷயத்தில் எவருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள் என்பதும், மார்க்கத்திற்கு எதிரானவர்கள் விஷயத்தில் கடும் கோபமுடையவர்கள் என்பதும் நாம் அறிந்ததே! இதற்கு சான்றாக ஹுதைபியா உடன்படிக்கையை எடுத்துக்கொள்ளலாம். அந்த உடன்படிக்கையின்போது நபி[ஸல்]அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவின்பேரில் அல்லது அனுமதியின்பேரில் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு பாதகமான விஷயங்கள் இடம்பெற்றதையும், உம்ரா செய்யவிடாமல் தடுப்பதையும் கண்ட உமர்[ரலி]அவர்கள், இந்த இணைவைப்பாளர்களுக்கு நாம் எதற்காக விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நபியவர்களிடமும், அபூபக்கர்[ரலி]அவர்களிடமும் கடுமையான கோபத்துடன் வாதிட்டதை நாம் ஹதீஸில் பார்க்கிறோம்.அப்படிப்பட்ட உமர்[ரலி]அவர்களின் வாழ்வில் ஒரு சம்பவம்;

ப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹ{ர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்தி ருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹ{ர்ரும் ஒருவர். குர்ஆனை கற்ற றிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் இளைஞர்களாயினும் சரியே! தன் சகோதரர் மகனிடம் உயைனா சொன்னார்: "மகனே! இந்த அமீரிடத்தில் உனக்கு செல்வாக்குள்ளது. எனவே அவரைச் சத்திப்பதற்கு எனக்கு அனுமதி வாங்கிக் கொடு!"அவ்வாறே அவர் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அனுமதி கொடுத்தார்கள்.
உமர்(ரலி) அவர்களின் சமூகத்தில் உயைனா வந்தபொழுது சொன் னார்: "இதோ! கத்தாபின் மகனாரே! நீர் எங்களுக்கு அதிக மானியம் கொடுப்பதில்லை. மேலும் எங்களிடையே நீதியுடன் தீர்ப்பு அளிப்பதில்லை!" (இதனைக் கேட்டதும்) உமர்(ரலி) அவர்கள் அதிகஅளவு கோபம் கொண்டு அவரைத் தண்டிக்கவே முனைந்து விட்டார்கள்!
அப்பொழுது உமர்(ரலி) அவர்களிடம் ஹ{ர்ரு சொன்னார்: "அமீருல் முஃமினீன் அவர்களே! (குர்ஆனில்) அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கிக் கூறுகிறான்: (நபியே! மக்களிடத்தில்) மென்மையையும் மன்னிக் கும் போக்கையும் மேற்கொள்வீராக! நன்மை புரியுமாறு ஏவுவீராக. மேலும் அறிவீனர்களைவிட்டும் விலகியிருப்பீராக! (7 : 199) - இந்த மனிதரும் அறிவீனர்களில் ஒருவர்தானே!" - அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த வசனத்தை அவர் ஓதிக்காட்டியபொழுது உமர்(ரலி) அவர்கள் அதை மீறிச் செல்லவில்லை! அவர்கள் இறைவேதத்தின் வரம்புக்குக் கட்டுப்படுப வர்களாய்த் திகழ்ந்தார்கள்!" நூல்: புகாரி.

மிகப்பெரிய ஜனாதிபதியாக இருந்தபோதும், அல்லாஹ்வின் வசனம் ஒதிக்காட்டியபோது அப்படியே கோபத்தை கட்டுப்படுத்திய உமர்[ரலி] அவர்கள் எங்கே? அந்த வசனம் இன்றும் குர்ஆனில் இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் கச்சைகட்டிக்கொண்டு திரியும் நாம் எங்கே? சிந்திப்போமா?
நபிகளாரின் அறிவுரை;
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்! (நூல்: புகாரி)

எத்துணையோ அறிவுரைகள் இருந்தும், மனிதனின் அத்தனை தீமைக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய கோபத்தை தவிர்க்குமாறு நபியவர்கள் சொன்ன உபதேசத்தை நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது.
கோபத்தை போக்கும் வழி;
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். [புஹாரி;6115 ]

பொறுமை என்பது இறைவன் புறத்திலிருந்து வருவது, கோபம் என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவது. எனவே ஷைத்தானின் தூண்டுதலான கோபத்தை விட்டொழித்து, இறைவனின் நேசத்திற்குரிய பொருமையாலர்கலாக நாம் மாறவேண்டும்.

ஆத்திரத்தில் ஆகாதெனினும், அன்பு; தன்னை வளர்க்க கூலி தரும்.