அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு; மன்னிக்கும் குணம் இருக்கிறதா? உங்களுக்கு இதயநோய் வராது: ஆய்வில் தகவல்.

கோபம் பற்றி இஸ்லாம்; 
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் !

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும் கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நூல் : புகாரி 

அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
************************************************************

நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அய்ந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்வதையே நினையுங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். 

நன்றி; விடுதலை 21 -8 -12

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

நோன்பு பெருநாள் சிந்தனை !!!


ரமலான் பதிவு:30

நோன்பு பெருநாள் சிந்தனை !!!







நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.


நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


thanks to;
Engr.Sulthan

சனி, 18 ஆகஸ்ட், 2012

இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!

அஸ்ஸலாமு அலைக்கும்..


புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், நாளை கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!

உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த 'ஈத் முபாரக்'

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

வாக்கு'வாதம்'...!

வாக்குவாதம்

    தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று  நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமாرَضِيَ اللَّهُ عَنْهُ  ஆதாரம்: திர்மதீ

   http://www.readislam.net/yellline.gif

    அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: அபூதாவூத்  

http://www.readislam.net/yellline.gif

    நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ  

http://www.readislam.net/yellline.gif

    நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மிதீ

http://www.readislam.net/yellline.gif

     ஒரு தடவை   நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர்.  உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து  ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் رَضِيَ اللَّهُ عَنْهُ அதாரம்: அபூதாவூத்

 

 

Best regards,

 

Abdul Gani


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அதிகமாக அழுங்கள் குறைவாகவே சிரியுங்கள்!


அல்லாஹ் கூறுகிறான்: ""இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள்,
அவர்களுக்கு இது இறையச்சத்தை அதிகமாக்கும்''                    (அல்குர்ஆன் 17:109)

உண்மையான இறை விசுவாசிகள், சதா அல்லாஹ்வை அஞ்சி, அவனுடைய தண்டனைகளை நினைத்
துப்பார்த்து தனிமையிலிருந்து அழுது மன்றாடி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருவார்கள்,
மறுமையில் வல்ல அல்லாஹ் நம்மை நரகத்தில் போட்டு விடுவானோ என்ற அச்சத்தால் கண்கலங்கு
வார்கள். பாவங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவார்கள்.

""ஒருதடவை நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்'' அதுபோன்ற சொற்பொழிவை
நாங்கள் கேட்டதே இல்லை, அப்போது அவர்கள் ""நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால் குறைவாக
சிரிப்பீரிகள், அதிகமாக அழுவீர்கள்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் தங்கள் முகங்களை மூடிக்
கொண்டார்கள், அவர்கள் அழுகின்ற சப்தம் கேட்டது என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

""அவர்கள் செய்து கொண்டிருந்ததின் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.                  அல்குர்ஆன் 9:82

பரிசுத்த வேதமான திருக்குர்ஆன் வசனங்களில் உள்ள அபூர்வமான விஷயங்களையெல்லாம்
படித்து சிந்திக்காதவர்கள், அதை புறக்கணித்து வாழக்கூடியவர்கள், உள்ளம் இறுகியவர்கள், இந்த
உலக வாழ்க்கையைப் பார்த்து ஏமாறக்கூடியவர்கள், இப்படிப்பட்ட பண்புடையவர்களை வல்ல
அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

""நீங்கள் குர்ஆனிலுள்ள செய்திகளைப் பற்றியா ஆச்சரியப்படுகிறீர்கள்? சிரித்துக் கொண்டும்
இருக்கிறீர்கள், நீங்கள் அழாமலும் இருக்கிறீர்களே?                    அல்குர்ஆன் 53:59,60

இந்த உலக வாழ்க்கை என்பது எல்லாவிதமான பாக்கியங்களையும் அனுபவித்து சிரித்து மகிழ்வதற்காக வழங்கப்பட்ட வாழ்க்கையல்ல, இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நாளைக்கு நம்மைப்
படைத்த நாயனிடத்தில் சென்றாக வேண்டுமே அங்கு நாம் வெற்றி பெறப் போகின்றோமா
அல்லது தோல்வியடையப் போகின்றோமா? என்ற பயத்தோடு தான் உண்மையான இறை
நம்பிக்கையாளன் ஒவ்வொரு நேரத்தையும் கழிப்பான். அல்லாஹ்வை அஞ்சி அவனை நினைத்துப்
பார்த்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடான கோடி மக்களை
நினைத்துப் பார்த்து வடிக்கும் கண்ணீர் துளிகளை இஸ்லாம் நன்மைக்குரியதாக கருதுகிறது. இந்த
கண்ணீர்த்துளிகள் மறுமையில் அல்லாஹ்விடத்தில் சாட்சியாக வரும்

""அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர் கறந்த பால் மடுவுக்குள் மீண்டும் நுழையும் வரை
ஒரு போதும் நரகில் நுழையமாட்டார், அல்லாஹ்வின் பாதையில் படிந்த புழுதியும் நரகப்புகையும்
இணைந்திடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                   நூல் : திர்மிதி 1633

நன்றி;அல்ஜன்னத்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஹிஜ்ரி ஆண்டு தோன்றியது எப்படி?


நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம் 7, பக்கம் 268)

உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
நூல்: ஹாகிம் (4287)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: புகாரி (3934)

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
(பத்ஹுல் பாரீ: பாகம் 7, பக்கம் 268)

நபிகளார் அவர்கள்; மதினா சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது. இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'
என்று குறிப்பிட்டார்கள்.
(பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268)

இந்த கருத்து தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

நன்றி; அல்ஜன்னத் மாத இதழ்.

கவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே
நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், 
அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவரிடத்தில் ``அபூஉமாமாவே
தொழுகையில்லாத இந்த நேரத்தில் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கிறீரே என்ன
விஷயம்? என்று கேட்டார்கள். 

அதற்கு அவர் என்னோடுள்ள கவலைகளும் என்
மீதுள்ள கடனும் தான் யா ரசூல்லாஹ் என்று கூறினார். நான் உனக்கு
சிலவார்த்தைகளைச் சொல்லித் தரட்டுமா அதை நீர் கூறிவிடுவீரானால்
அல்லாஹ் உம்முடைய கவலையைப் போக்கி, உம்முடைய கடனையும் தீர்த்து
விடுவான் என்று கூறினார்கள்" சொல்லித்தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!
என்று அவர் கூறினார். காலையிலும் மாலையிலும் இந்த துஆவை ஓதுவீராக என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

``யாஅல்லாஹ் கவலை துக்கத்தை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்புத்
தேடுகிறேன். இயாலாமை, சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். கோழைத்தனம், கஞ்சத்தனத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். கடன் தொல்லை மனிதர்களின் அடக்குமுறையை விட்டும்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்''.

இதை நான் கூறி வந்த போது அல்லாஹ் என்னுடைய கவலையைப் போக்கி,
என்னுடைய கடன் தீர வழிசெய்தான் என அபூஉமாமா(ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி[ரலி]
நூல் : அபூதாவூத்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காண்பித்து தந்த பிரகாரம்
அல்லாஹ்விடத்தில் உள்ளம் உருகி பிரார்த்திக்கும் போது அவன் எல்லாவிதமான
கஷ்டங்களையும் இலேசாக்கிவிடுகின்றான். அவனுடைய அருளை நம்மீது
சொரிந்து விடுகின்றான். அவனிடமே முற்றிலும் நம்முடைய முறையீடுகளை
வைக்க வேண்டும்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அந்த மூன்று விஷயங்கள்[17] அன்பின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்)

அன்பின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்)

அல்லாஹ் உங்களை மூன்று விடயங்களை விட்டும் பாதுகாத்து இருக்கின்றான். அவைகள்:

  1. நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு உங்கள் நபி உங்களுக்கெதிராக பிரார்த்திப்பதை விட்டும்,
  2. சத்தியவாதிகளை அசத்தியவாதிகள் (முழு வடிவில்) மேலோங்குவதை விட்டும்,
  3. நீங்கள் அனைவரும் வழிகேட்டில் ஒன்றுபடுவதை விட்டும்

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்ரிய் (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).

            ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அந்த மூன்று விஷயங்கள்[16] எண்ணங்களை தூய்மையாக்குவோம்!

எண்ணங்களை தூய்மையாக்குவோம்!

  1. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து உயிர் நீத்த ஷஹீத்.
  2. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கிய கொடைவள்ளல்.
  3. மக்களின் புகழை விரும்பி பிறருக்கு மார்கத்தைப் போதித்த ஆலிம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் எனது முழங்காலின் மீது அடித்தவர்களாக அபூஹுரைராவே! இந்த மூவரைக்கொண்டு தான் நரகம் எறிக்கப்பட ஆரம்பிக்கும் எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி).

            ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....