இஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது!!
அவசர அறிவிப்பு!
புதன், 30 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]
வெள்ளி, 25 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 11]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
திங்கள், 14 மே, 2012
நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[2]
ஞாயிறு, 13 மே, 2012
உலக அன்னையர்தினம்; அம்மா என்றால் அன்பு!

அன்னையர் தினத்தை பொறுத்தவரையில், ஏனைய சர்வதேச தினங்களைப் போல் உலகம் முழுவதும் ஒரேநாளில் கொண்டாடப்படுவதில்லை.பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று உலகின் பெரும்பாலான நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடினாலும், சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்னரோ கொண்டாடுகின்றன.
உலக மாந்தர்களில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புகளில் ஈடு இணையற்றது தாயின் அன்புதான். மனைவியானாலும், மக்களானாலும், உடன்பிறந்தோர் ஆனாலும் , உற்றார்-உறவினர்களானாலும் அந்த அன்புக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தாயன்புக்கு எல்லையில்லை. ஒரு பெண் கற்பமாவது முதல் அவள் பிரசவிக்கும் வரை படும் வேதனைகளை, அவள் பெற்றெடுக்கும் குழந்தை 'அம்மா' என்று அழைத்தவுடன் அத்துணை வேதனையையும் அடியோடு மறந்துவிடுகிறாள்.தான் பெற்ற குழந்தையை பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆன்றோர்களின் அவைதனில் தன்பிள்ளை சான்றோனாக மதிக்கப்பட தன்னையே மெழுகுவர்த்தியாக கரைத்துக்கொள்கிறாள். தான் வளர்த்த பிள்ளை தறுதலையானாலும் அந்த தாய் ஒதுக்கிவிடுவதில்லை. தான் வளர்த்த பிள்ளை தன்னை அநாதை விடுதியில் சேர்த்தாலும், அனாதையாக தெருவிலே விட்டுவிட்டாலும் அந்தத்தாய் தன் பிள்ளையை சபிப்பதில்லை. அதனால் தான் உலகில் இழந்த எந்த உறவையும் மீட்டெடுக்கமுடியும் தாயைத்தவிர! மனைவி வெறுத்துவிட்டால் மற்றொரு மனைவியை திருமணம் செய்து ஈடு செய்துவிடலாம். ஒரு பிள்ளை வெறுத்து விட்டால் இன்னொரு பிள்ளையை கொண்டு ஈடு செய்து விடலாம். உடன்பிறந்தோர் வெறுத்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் அண்ணன் -தம்பி என்று அழைத்து ஆனந்தப்பட்டு கொள்ளலாம். ஆனால் ஒரு தாயின் அன்பை நாம் இழந்துவிட்டால் அந்த அன்பை எந்த அன்னியப்பெண்ணாலோ , அல்லது அன்னையின் உடன்பிறந்தவர்களாலோ கூட தரமுடியாது. இத்தகைய மகத்தான தகுதி தாய்க்கு உள்ளதால்தான் இஸ்லாம்,உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தலைவர் ரசூல்[ஸல்] அவர்களுக்கு அடுத்தபடியாக தாயை நேசிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது.
முதல் மூன்று இடம் தாய்க்கே!
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.[நூல் புஹாரி 5971 ]
இத்தகைய உயர்வான முதல் மூன்று ஸ்தானத்தை தாய்க்கு இஸ்லாம் வழங்கியிருக்க, திருமணமாகும்வரை தாய்சொல்லை தட்டாத மகன் திருமணத்திற்கு பின் மனைவி சொல்லே மந்திரம் என்று மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறி, தாயை-தந்தையை பழிப்பதும், விரட்டுவதும் அவர்களை நோவினை படுத்துவதுமான செயல்களை செய்பவர்களை பார்க்கிறோம்
அல்லாஹ் கூறுகின்றான்;
மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."[31:14]
மனிதனுக்கு தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான்.[46:15 ]
பெற்றோரை ஏசலாகாது;
(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக![17:23 ]
பெற்றோரை சபிப்பது பெரும்பாவம்;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் 'ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)' என்றார்கள்.[நூல்;புஹாரி 5973 ]
இறைவனுக்கு பிடித்தமான நற்செயல்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாம் விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.
[நூல்;புஹாரி எண் 2782 ]
அறப்போரை காட்டிலும் அன்னைக்கு செய்யும் பணிவிடை சிறந்தது;
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.
[நூல்;புஹாரி எண் 5972 ]
ஈன்றவர்கள் இணைவைப்பில் இருந்தாலும் இணக்கமாக இரு;
பெற்றோர்கள் அறியாமையினால் இணைவைப்பில் இருப்பதால் சில தவ்ஹீத்வாதிகள் பெற்றோரை புறந்தள்ளி அவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதை பார்க்கிறோம். அதற்கு அவர்கள் கூறும் காரணம் பெற்றோர் இணைவைப்பிலிருக்கும்போது அவர்களுடன் நாங்கள் எப்படி இணக்கமாக இருக்கமுடியும் என்று கேட்கின்றனர். பெற்றோரின் கொள்கையில்தான் நாம் உடன்படக்கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது நம்மீது கடமையாகும்.
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 2620
பெற்றோருக்கு பணிவிடை செய்து பெரியோனிடம் பிரார்த்தித்தால் பிரார்த்தனை ஏற்கப்படும்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.எனவே, அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்:"இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாம்விட்டது. அவர்கள் தூங்கிவிட்ட பின்பு சென்றேன். என் மனைவியும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக் கொண்டிருந்தனர். என் தாய்தந்தையர் பருகுகிற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்)விட்டுவிட, அவர்கள் அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. எனவே, அதிகாலை நேரம் உதயமாகும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால் தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!" அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது.[ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 3465 ]
பெற்றோருக்காக மன்னிப்பு தேடுங்கள்;
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்).[71:28 ]
பெற்றோரிடம் நமக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுதல்;
قَالُواْ يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ
(அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.[12:97 ]
சனி, 12 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]

வெள்ளி, 11 மே, 2012
மார்க்கத்தை இழிவுபடுத்தி, மானங்கெட்ட சலுகை நமக்குத் தேவையா?- சீறுகிறார் சம்சுதீன் காசிமி.
நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒரு இஸ்லாமியப் பார்வை- தொடர்[1]
விளைநிலத்தின் வரப்புச் சண்டைக்காக கோர்ட்டு படியேறிய பங்காளிகள் இருவர், வயலையே விற்று கோர்ட்டுக்கு செலவு செய்த பின்னும் கூட தீர்ப்பு வந்தால் ஆச்சர்யமே என்று சொல்லும் அளவுக்கு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு பின் வரும் சம்பவத்தை பார்ப்போம்.
கேரளா, கொல்லம் நீண்டகரா துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, அந்த வழியாகச் சென்ற, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். கடற்கொள்ளையர்கள் என, தவறாக நினைத்து, மீனவர்களை சுட்டு விட்டனர். இந்த சம்பவத்தில், படகிலிருந்த 11 மீனவர்களில், தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஜலஸ்டின், 45, மற்றும் அஜீஷ் பிங்கி, 25 ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் லத்தோர் மற்றும் ஜரோன் ஆகியோர் பிப்ரவரி 17ம் தேதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க, இத்தாலி வெளியுறவு இணை அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சர், இந்திய நிர்வாகத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் தரவில்லை. மேலும், இவ்வழக்கு இந்திய தண்டனை சட்டப்படி, கேரளாவில் நடைபெறும் என்றும், தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் கேரளா மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களை சந்திக்க, அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர், திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள், பலியான மீனவர்கள் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இத்தாலிய பாதுகாவலர்களின் குடும்பத்தினர், இத்தாலிய நிர்வாகத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் பலியான தமிழக மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு, தலா ஒரு கோடி ரூபாய் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் குடும்பத்தினரும், பலியான மீனவர்கள் குடும்பத்தினரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதையடுத்து, இத்தாலிய பாதுகாவலர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என, ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டிருந்த, துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களின் குடும்பத்தினர், "இத்தாலியர்கள் இருவருக்கும் எதிராக எந்த வழக்கையும் நடத்தப் போவதில்லை என்றும், அவர்கள் இருவரையும் மன்னித்து விட்டோம்' என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இத்தாலிய பாதுகாவலர்களுக்கு எதிரான, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி, இத்தாலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, மீனவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஆவணங்களை வாபஸ் பெற, கேரள ஐகோர்ட் அனுமதி அளித்தது. தங்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர, இத்தாலிய நிர்வாகத்தினர் சம்மதித்து விட்டதால், தாங்கள் வழக்குகளைத் தொடர விரும்பவில்லை என, மீனவர்கள் குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி கோபிநாதன் அனுமதி வழங்கினார். இதையடுத்து இத்தாலியர்கள் இருவரும் விரைவில் விடுதலையாகலாம் என எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு இவ்வழக்கில் ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் பெற அனுமதித்த கேரள நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
இந்தப்பிரச்சினையில் கேரளா உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதா என்பதை பார்ப்பதை விட, நியாயப்படி சரியானதா என்று பார்த்தால் சரிதான். ஏனென்றால் சம்மந்தப்பட்ட கொலையுண்டவர்களின் குடும்பத்தினர், கொலையாளிகளிடம் இழப்பீடு வாங்கிக்கொண்டு ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறிய நிலையில், அந்த வழக்கை நடத்தியே தீருவோம் என்று கேரளா நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? யாருடைய புகாரின் பேரில், யாருடைய நலனுக்காக இந்த வழக்கு பதியப்பட்டதோ, அவர்களே நஷ்டஈடு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை மன்னித்து விட்ட பின்னால், நீதிமன்றங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? கேரளா நீதிமன்றத்தின் நடவடிக்கை இஸ்லாமிய சட்டத்திற்கு ஏற்ப உள்ளது. இறைவன் கூறுகின்றான்;
ஈமான் கொண்டோரே! கொ லைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். இருப்பினும் [கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
[2 ;178 ]
இந்த இறை வசனத்தில் கொலைக்கு கொலைதான் தீர்வு என்று சட்டம் சொல்லும் இறைவன், கொலை செய்தவனை, கொலையுண்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால், அந்த வாரிசுகளுக்கு உரிய இழப்பீட்டை கொலை செய்தவன் நியாயமான முறையில் வழங்கவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். ஒரு கொலையாளியை தண்டிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கொலையுண்டவரின் குடும்பத்திற்கே இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் இத்தாலி கொலையாளிகளை கொலையுண்டவரின் குடும்பமே மன்னித்து விட்டதால் அதை கேரளா உயர்நீதிமன்றமும் அங்கீகரித்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு கொலைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணக் கூடாது என்பது ஒரு அறிவுப்பூர்வமான வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கில் கொலையுண்டவரின் வார்சுகள் நீதிமன்றத்தை அணுகியே இதற்கு தீர்வு கண்டுள்ளனர். எனவே நீதிமன்றத்திற்கு வெளியே என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. மேலும், ஒரு பொருளுக்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு விபத்திற்கு இழப்பீடு வாங்கிகொண்டு ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கும் சட்டம், ஒரு உயிர் விசயத்தில் இழப்பீடு வாங்கிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறுவது புதிராக உள்ளது. மேலும், இந்த விசயத்தில் தம்மைப் போலவே சட்டம் படித்த கேரளா நீதிபதிகளை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் விசயத்தில் என்ன செய்திருக்கிறது?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்து கொள்கிறது. ஜூலை 10-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளது.
இந்த மூவர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கு ஏற்கனவே தமிழகத்தின் கீழ்கோர்ட்டு தண்டனை விதித்து, அதை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி, பின்பு உச்சநீதிமன்றத்தில் இந்த தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, பின்பு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்பட்டு, தூக்குத்தண்டனைக்கு நாள் குறித்த பின்னால், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு; அதான் தொடர்ச்சியாக இப்போது மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், ஒரே வழக்கில் எத்தனை முறை சுழற்ச்சி விசாரணை; எத்தனை முறை தீர்ப்பு? ஒரு பிரதமர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியாத நிலை உள்ள நாட்டில், கொலைக்கு நஷ்டஈடு பெற்றுக்கொண்டு விரைவான தீர்வு காண மக்கள் முயற்ச்சிப்பதில் என்ன குறை காண முடியும்?
ராஜிவ்காந்தி கொலையாளிகள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டதால் அவர்களுக்கு இதுவே ஒரு தண்டனை; இனியொரு தண்டனை விதிக்க முடியாது என்று சொன்னால், இந்த தாமதத்திற்கு யார் காரணம்? ஜனாதிபதியல்லவா? கொலையுண்டவர்களுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கிய அரசியல் சாசனம் அல்லவா? இப்படி ஜவ்வாக ஒரு வழக்கு இழுபடுவதைத் தான் உச்சநீதிமன்றம் விரும்புகிறதா? அல்லது இஸ்லாம் சொல்லும் வழிமுறையை பின்பற்றி கொலையுண்டவன் குடும்பத்தாரிடம் கருத்துக் கேட்டால் ஒரு நாளில் வழக்கு முடிவுக்கு வந்து விடுமே! மேலும், இருபது ஆண்டுகள் கண்ணித்தீவாக நீளும் இந்த கொலைவழக்கில் வெறுமனே ராஜீவ் மட்டும் தான் கொல்லப்பட்டாரா? ராஜீவோடு சேர்த்து பதினைந்து பேர் கொல்லப்பட்டார்களே! அவர் தம் குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்று என்றாவது நீதிமன்றங்கள் கவலைப்பட்டதுண்டா? ஆண்டுக்கணக்கில் நீளும் இந்த வழக்கால் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு நயாப்பைசா பிரயோஜனம் உண்டா? இல்லை. அதே நேரத்தில் இந்த கைதிகளை பாதுகாக்க, இவர்களின் வழக்கை நடத்த என்று பலகோடிகள் மக்களின் வரிப்பணம் பாழானது தான் மிச்சம். இதையெலாம் உணர்ந்துதானோ என்னவோ, அந்த இரு மீனவ குடும்பத்தினர் உடனடி நிவாரணத்திற்கு வழிகண்டு விட்டனரோ!
எனவே, கொலையுண்டவனுக்கு சம்மந்தமே இல்லாத ஜனாதிபதிக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கும் சட்டம், கொலையுண்டவனின் குடும்பம் மன்னித்தால் அதை எதிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை தானே! எனவே குற்றவாளியை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்கினால் வழக்குகள் தேங்குமா? வரிப்பணங்கள் பாழாகுமா? சிந்திப்போம்- சீர்திருத்தம் செய்வோம். சட்டங்கள் நீதியை நிலைநாட்டவே என்பதை உணர்வோம்.
தீர்ப்புகள் வரும்....
ஞாயிறு, 6 மே, 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 9]
- எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா.
- ஹாமித்பக்ரி.
- அப்துல் ஜலீல் மதனீ.
- சம்ஷுல்லுஹா.
- முஹம்மது அலி ரஹ்மானி.
- ஜே.எஸ்.ரிபாயி.
- டி.எம்.ஜபருல்லாஹ்.
- அப்துரரஹ்மான் பிர்தவ்சி.
- எம்.ஐ.ஸுலைமான்.
- எம்.எஸ்.ஸுலைமான்.
- அலிஅக்பர் உமரி.
- இக்கல்லூரியின் பாடத்திட்டம் ஜமாஅத் தான் தீர்மானிக்கும்.
- இக்கல்லூரியில் மாணவர் சேர்க்க; நீக்கம் ஜமாஅத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
- கணக்கு வழக்குகளில் ஜமாஅத் தலையிடும்.
- வெளிநாட்டு நிதி ஜமாஅத் பெயரால் பெறக்கூடாது என்றால், ஜமாஅத் நிர்வாகிகள் தனிக்கடை போட்டு வசூலிக்கலாமா? அதற்கு பீஜே துணை நின்றது அவரது கொள்கைக்கு முரணில்லையா? பீஜேயின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், அவரது ஜமாஅத் நிர்வாகிகள், வெளிநாடுகளில் ஜமாஅத்திற்காக இல்லாமல் துணை நிறுவனங்களை ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாமா?
- ஜமாஅத் சம்பளம் கொடுக்க கூட முடியாமல் திணறியபோது, ஹாமித்பக்ரி இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்காக வசூல் வேட்டையாடினார் என்று குமுறிய பீஜே, அதே காலகட்டத்தில் ஒரு பெருந்தொகையை இஸ்லாமிய அறக்கட்டளைக்கு பெற்றுத்தந்தது முரண்பாடில்லையா?
- வெளிநாடுகளில் நாமாகப் போய் வசூலிக்கக் கூடாது. வெளிநாட்டினர் தாமாக தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றால், இதுவரை எத்தனை கோடிகள் வெளிநாட்டவரிடம் இருந்து ஜமாத்திற்காக வாங்கப்பட்டது என்று பீஜே சொல்லுவாரா?
- இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதன் பெயரால் இயங்கும் இஸ்லாமியக் கல்லூரிக்கும், அதன் சொத்துக்களுக்கும் ஜமாத்திற்கோ, தனக்கோ சம்மந்தமில்லை என்று கூறுவரா? அதன் சொத்து ஆவணங்களை ஜமாஅத் வாங்கி வைத்திருப்பது எதற்காக என்று கூறுவாரா?
- ஜமாத்திற்கு சம்மந்தமில்லை என்று பீஜே கூறினால், சென்னை களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இரு தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளை உடனடியாக நிறுத்தியது போல், இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர், முதல்வர், ஆசிரியர்கள் என வியாபித்திருக்கும் தனது ஜமாத்தினரை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்லுவாரா?
- இஸ்லாமியக் கல்லூரி சரியென்றால், அதில் தனது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கம் வகிக்கலாம் என்றால், அதற்காக வெளிநாட்டு நிதியும் பெறலாம் என்றால், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கமும் சரிதான் என்றும், அதற்காக வெளிநாட்டு நிதி பெறலாம் என்றும், அதை ஹாமித்பக்ரி மீதான காழ்ப்புணர்வில் தான் எதிர்த்தேன் என்றும் பீஜே சொல்லுவாரா?
- ஹாமித்பக்ரியின் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இன்றும் அண்ணனின் அபிமானியாக இருக்கும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்ட அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயிகள் சிலர் சம்பளம் பெற்றது எதற்காக என்று பீஜே சொல்லுவாரா?
- இலங்கை வெளிநாடு இல்லை என்றோ, அந்த நாட்டின் பணம் அன்னிய நிதியில்லை என்றோ, தனது கொள்கை அரபு நாட்டு நிதிக்கு மட்டும் தான் என்றோ பீஜே சொல்லுவாரா?