அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 18 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிக்கொள்வதில் உள்ள பொய்களை பார்ப்போம்.

''நான் திர்மிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன்''என்று பீஜே கூறுகிறார். அதாவது இவர் தயாரித்து சொந்தமாக ரிலீஸ் செய்ய இருந்தாராம். அவரும், அவரோடு நெருக்கமாக இருந்தவர்களும் உயிரோடு இருக்கும் இந்த காலத்திலேயே இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்றால், அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும். உண்மையில் திர்மிதியைப் புதுப்பெண்ணாக இவர் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தாரா? என்றால் இல்லை. ஏற்கனவே இந்த திர்மிதி இவர் ஜாக்கில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே ஏறக்குறைய முப்பது பாகங்களுக்கும் மேலாக சிறிய நூல்களாக வெளிவந்து விட்டது. அந்த பாகங்களை எல்லாம் ஒட்டித்தான் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தார். அதாவது அவர் அடிக்கடி சொல்வாரே! 'புதிய மொந்தையில் பழைய கள்' என்று; அதுபோல ஏற்கனவே வெளியான நூலைத்தான் 'மேக்கப்' போட்டு ஹாமித்பக்ரியிடம் தந்தார். இதில் தியாகம் எங்கே வாழுது? துரோகம் தான் வாழுது! அது என்ன துரோகம்? இவரது திர்மிதியை ஏற்கனவே விற்றுவந்த ஜாக்கின் வெளியீட்டு நிறுவனம், இவர் ஹாமித்பக்ரியிடம் கொடுத்து பெரிய புக்காக வெளியிட்ட பின்னால் ஜாக்கிடம் இருந்த சிறிய வடிவிலான திர்மிதி விற்பனையாகாமல் தேங்கிப் போனது. ஏற்கனவே ஒரு நிறுவனம் திர்மிதியை விற்று வரும் நிலையில், அதே திர்மிதியை இன்னொருவருக்கு கொடுப்பது, ஒரே நிலத்தை இரண்டு பேருக்கு விற்பதைப் போன்ற துரோகமல்லவா? இந்த துரோகத்தை செய்த பீஜே, அதையே தியாகமாக காட்டுவது அவரின் திறமைதானே!

இங்கே இன்னொன்றையும் பீஜே சொல்வார். அது என்னவென்றால், திர்மிதி சிறிய நூல்களாக பல பாகங்களாக வெளியாகியபோது, அதற்கான உரிமையை நான் அவர்களுக்கு கொடுக்கவில்லை. நானே புத்தகத்தை பிரிண்டிங் செய்து பைண்டிங் செய்து நூலாக அவர்களுக்கு கொடுப்பேன். அதற்குரிய விலையை நான் வாங்கிக் கொண்டேன். ஆனால் ஹாமித்பக்ரியிடம் ஹதீஸ்களை அவர் கையில் தூக்கி கொடுத்து, அதற்க்கான வெளியீட்டு உரிமையை இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்கு வழங்கினேன். எனவே அது வேறு; இது வேறு என்று பீஜே சொல்லலாம். ஒரு பொருளை ஒருவர் மூலமாக விற்றுவரும் நிலையில், அதே பொருளை வேறு வடிவத்தில் விற்பதாக இருந்தால் ஏற்கனவே விற்றுவரும் அவரிடம் அதைப் பற்றி பேசி, அவர் மறுத்தால் அவர் பாதிக்காத வகையில் வேறு ஒருவர் மூலமாக விற்கலாம். ஆனால் திர்மிதியை சிறிய பாகங்களாக வெளியிட்டு வந்த அந்த நிறுவனத்துடன் பீஜே, இந்த ஆலோசனை நடத்தினார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவேண்டும். நாம் விசாரித்த வகையில், இப்போது திர்மிதி பெரிய புத்தகமாக வெளியிட்டால் ஏற்கனவே சிறிய பாகங்களாக வெளியிட்டவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற கருத்து பீஜெயிடம் சொல்லப்பட்டபோது, இல்லம்மா! சிறிய பாகம் வாங்க விரும்புறவன் அதை வாங்கிருவான்; பெரிய பாகமாக வாங்க விரும்புறவன் இதை வாங்கிருவான். எனவே அந்த விற்பனை பாதிக்காது என்று சொன்னதாக தகவல் கிடைத்தது. எது எப்படியோ, திர்மிதியை ஹாமித்பக்ரி கையில் பீஜே ஒப்படைத்தபோது அது புத்தம்புதிய காப்பியாக இருக்கவில்லை. அது ஏற்கனவே பல தியேட்டர்களில் ஒடி, மழை பெய்தது போன்ற கோடு வரும் அருதப் பழசான பிலிம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்''என்று பீஜே கூறுகிறார்.
ஹாமித்பக்ரியிடம் திர்மிதியை கொடுத்ததை கூறும் பீஜே, அதற்காக அவரிடம் இருந்து வாங்கியதை மட்டும் லாவகமாக மறைத்து தன்னை தியாகியாக காட்டுகிறார். அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்] பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60 ,000 வாங்கிக்கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 20000 பெற்றுக் கொண்டார். ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்] 

மேலும், ஒரு லட்சம் என்பது இன்றைக்கு சாதாரணம். ஹாமித்பக்ரி மோசடி செய்தார் என்பதற்கு அன்றைக்கு பத்து லட்சம் என்றால் பயங்கரமான தொகை என்று பில்டப் காட்டும் பீஜே; இந்த ஒரு லட்சமும் அன்றைக்கு உள்ள மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்பதை சொல்வாரா? கணக்கு தெரியவில்லை என்றால் இவர் தொண்டியில் கட்டியுள்ள வீட்டின் கதவு ஜன்னல்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

ஆக, மக்களிடம் ஷேர் வசூலித்து ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடாத காரணத்தால் ஜமாஅத் பெயர் கெட்டது போலவும், ஜமாஅத்தின் களங்கத்தை துடைக்கும் வகையிலும், ஹாமித்பக்ரியை கடனிலிருந்து மீட்கும் வகையிலும், முல்லைக்கு தேர் தந்த பாரி போன்று, இவர் தனது திர்மிதியை தானமாக தந்தது போன்று பிலிம் காட்டுகிறாரே! இவர் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர் என்று மக்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை கடனிலிருந்து காப்பது என்றால் அவருக்கு தனது பொருளை இலவசமாக கொடுத்து இதை விற்று கடனை கட்டு என்று ஒருவர் சொன்னால் அவர் உண்மையில் தியாகி. ஆனால் ஒருவரது கடன் இக்கட்டை பயன்படுத்தி தனது பொருளை வியாபாரமாக்கி பணம் வாங்கிக்கொண்ட ஒருவர் தியாகியாக முடியுமா? தான் ஒருவருக்கு கொடுத்த பொருளை சொல்லிக்கட்டும் பீஜே, அதற்கு பகரமாக தான் பெற்ற கையூட்டை மறைத்தாரே! இப்போது பீஜே தியாகியா? துரோகியா? மக்களே முடிவு செய்யுங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

கருத்துகள் இல்லை: