அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 6 ஜூலை, 2009

விசாரணையின்றி, சொர்க்கம் செல்வோர் யார்?

நாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வதற்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ என்ற பயம். இந்நிலையில், அந்த அதிகாரி நீங்கள் எவ்வித தடங்களும் இன்றி 'கிரீன்' சிக்னல் வழியாக செல்லுங்கள் என்று நம்மிடம் கூறினால் நாம் எவ்வாறு குதூகலிப்போமோ, இதை விட்ட மிகப்பெரிய விசாரணை மைய்யமான மறுமையில் எல்லோரும் விசாரணை எப்படியிருக்குமோ நம் தீர்ப்பு என்னாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ் நபி[ஸல்]அவர்களின் உம்மத்திலிருந்து 70 ஆயிரம் பேர்களை எவ்வித விசாரணையும் இன்றி நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பாக்கியம் யாருக்கு?
‏ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ كُنْتُ عِنْدَ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ رَأَى الْكَوْكَبَ الَّذِي ‏ ‏انْقَضَّ ‏ ‏الْبَارِحَةَ قُلْتُ أَنَا ثُمَّ قُلْتُ أَمَا إِنِّي لَمْ أَكُنْ فِي صَلَاةٍ وَلَكِنِّي لُدِغْتُ قَالَ فَمَاذَا صَنَعْتَ قُلْتُ اسْتَرْقَيْتُ قَالَ فَمَا حَمَلَكَ عَلَى ذَلِكَ قُلْتُ حَدِيثٌ ‏ ‏حَدَّثَنَاهُ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏فَقَالَ وَمَا حَدَّثَكُمْ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏قُلْتُ حَدَّثَنَا ‏ ‏عَنْ ‏ ‏بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الْأَسْلَمِيِّ ‏‏أَنَّهُ قَالَ لَا رُقْيَةَ إِلَّا مِنْ ‏ ‏عَيْنٍ ‏ ‏أَوْ ‏ ‏حُمَةٍ ‏ ‏فَقَالَ قَدْ أَحْسَنَ مَنْ انْتَهَى إِلَى مَا سَمِعَ وَلَكِنْ حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَرَأَيْتُ النَّبِيَّ وَمَعَهُ ‏ ‏الرُّهَيْطُ ‏ ‏وَالنَّبِيَّ وَمَعَهُ الرَّجُلُ وَالرَّجُلَانِ وَالنَّبِيَّ لَيْسَ مَعَهُ أَحَدٌ إِذْ رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ فَظَنَنْتُ أَنَّهُمْ أُمَّتِي فَقِيلَ لِي هَذَا ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَوْمُهُ وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي انْظُرْ إِلَى الْأُفُقِ الْآخَرِ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي هَذِهِ أُمَّتُكَ وَمَعَهُمْ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ ثُمَّ نَهَضَ فَدَخَلَ مَنْزِلَهُ ‏ ‏فَخَاضَ ‏ ‏النَّاسُ فِي أُولَئِكَ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ فَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ صَحِبُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ وُلِدُوا فِي الْإِسْلَامِ وَلَمْ يُشْرِكُوا بِاللَّهِ وَذَكَرُوا أَشْيَاءَ فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا الَّذِي ‏ ‏تَخُوضُونَ ‏ ‏فِيهِ فَأَخْبَرُوهُ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَرْقُونَ وَلَا ‏ ‏يَسْتَرْقُونَ ‏ ‏وَلَا ‏ ‏يَتَطَيَّرُونَ ‏ ‏وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ ‏ ‏عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ ‏ ‏فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ أَنْتَ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ آخَرُ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا ‏ ‏عُكَّاشَةُ ‏‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِ
"எனக்குப் பல சமுதாயத்தவர் (எனது விண்ணேற்றத்தின்போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, (தம்மைப் பின்பற்றிய பத்துக்குள் அடங்கும்) ஒரு சிறுகுழுவினரோடு ஓர் இறைத்தூதரையும் ஓரிருவரோடு ஓர் இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர்கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், "இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள்" என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும், "மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்" என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, "இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர்" என்று எனக்குச் சொல்லப்பட்டது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்" என்று கூறினர். வேறு சிலர், "இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம்" என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்து, "எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் யாரெனில், யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்" என்று கூறினார்கள்.அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நீரும் ஒருவர்தாம்" என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).[முஸ்லிம் ]

மேற்கண்ட பொன்மொழியில் விசாரணையும்- வேதனையும் இன்றி சுவர்க்கம் செல்பவர்கள் நான்கு காரியங்களை செய்யமாட்டார்கள் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்;

1 .யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்.

2 .யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்.

3 . பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்.

4 . முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

மேற்கண்ட நான்கு தன்மைகள் இன்றைக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையோரிடம் இருப்பதை காணலாம். மந்திரிப்பதையே தொழிலாக கொண்ட மவ்லவி[?] களும் உண்டு. முஸ்லிம் மந்திரவாதியிடம் கயிருமுடிந்து கழுத்தில் இடுப்பில் கட்டிக்கொள்வது, தாவிஸை மந்திரித்து வாங்கி தாலியாக கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்வது. இது காணாது என்று ஏதாவது தீராத நோய் என்றால் சாமியார்களிடமும் மந்திரித்து திருநீறு பூசிக்கொள்வது. அவன் தரும் பொருட்களை வீட்டில் தொங்கவிடுவது அல்லது மாட்டிவைப்பது. இப்படி மந்திரித்தலில் எத்துனை வகைகள் உண்டோ அத்துனையையும் செய்யும் முஸ்லிம்களும் உண்டு.

மேலும், பறவைகளை வைத்து சகுனம் பார்ப்பது இன்று இல்லை என்றாலும், பறவைகளை வைத்து சில மூடநம்பிக்கைகளை நம்புவதை காணலாம். காக்கா கத்தினால் விருந்தாளி வருவார்கள் என்பது போன்ற நம்பிக்கைகளும் , பூனை குறுக்கே போனால், அல்லது விதவை குறுக்கே போனால், அல்லது வீட்டின் நிலைப்படி தட்டிவிட்டால் போகும் காரியம் உருப்படாது என்பன போன்ற சகுனம் பார்க்கும் பழக்கம் முஸ்லிம்கள் சிலரிடம் இருக்கிறது.

மேலும் முற்றிலும் இறைவனையே சார்ந்திருக்கும் உறுதியான நம்பிக்கையும் முஸ்லிம்களில் பலரிடம் இல்லாமையை காணலாம். தமக்கு ஏற்படும் சிற்சில துன்பங்களை தாங்கி கொள்ளமுடியாமல் தர்காக்களில் சரணடைந்து அங்கு அடங்கி மண்ணோடு மண்ணாகி போன அவுலியா என்று நம்பப்படுபவரிடம்,

எனது நோயை நீக்குங்கள்; பேயை ஒட்டுங்கள்; பிள்ளையை தாருங்கள்; விஷாவை தாருங்கள்; செல்வத்தை தாருங்கள் என்றெல்லாம் கேட்பதன்மூலம் இறைவன் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை கேலிக்குரியதாக ஆக்குவதை பார்க்கிறோம். இந்நிலை மாறவேண்டும். மந்திரிப்பதையும் -சகுனம் பார்ப்பதையும்- மூட நம்பிக்கைகளையும் விட்டொழித்து முழுக்க முழுக்க இறைவனை சார்ந்து நாம் இருப்போமானால், விசாரணையும் வேதனையும் இன்றி சுவனம் செல்லும் அந்த 70 ஆயிரம் பேரில் நாமும் ஒருவராக ஆகமுடியும். எல்லாம் வல்ல அல்லாஹ் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மையும் ஆக்கி அருள்வானாக!

கருத்துகள் இல்லை: