
இஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது!!
அவசர அறிவிப்பு!
புதன், 16 செப்டம்பர், 2009
இனிய பெருநாளே........ ஈகைத்திருநாளே!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009
இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தவைகள்!
நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.
இஸ்லாத்தில் சிறந்தது
'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி எண் 11 ]
'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.[நூல்;புஹாரி எண் 12 ]
'நற்செயல்களில் சிறந்தது
'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 26 ]
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள்.[புஹாரி எண் 2782 ]
உலகத்தைவிட சிறந்தது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.[புஹாரி எண் 2796 ]இறைவனிடத்தில் சிறந்தது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அவர்கள் 'எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!' என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?' என்று கேட்பான். சொர்க்கவாசிகள் 'எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்' என்று சொல்வான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் எண் 7518 ]
கடமையல்லாத தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் சிறந்தது;
ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.[புஹாரி எண் 7290 ]
சகுனத்தில் சிறந்தது;
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்' என்று பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 5755 ]
தர்மத்தில் சிறந்தது;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.[புஹாரி எண் 2748 ]
செல்வத்தில் சிறந்தது;
'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 19 ]
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
பொது சொத்தை கைவைத்தால்....
மீண்டும் ஒரு இடைத்தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தமது கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நேர்காணலின்போது தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்வீர்கள் என்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் வினவுவதாக கேள்விப்பட்டுள்ளோம். அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற கோடிகளை இறைப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு காரணம் இவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வைத்து செலவு செய்ததை ஈடுகட்டி விடலாம் என்பதால் அல்ல. மாறாக, ஒன்றை விதைத்தால் பத்தை அறுவடை செய்யும் அதிகாரம் பதவிக்கு இருக்கிறது. அதன் மூலம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் உருவான அரசின் கஜானாவிலும் சுருட்டலாம். காண்ட்ராக்ட் என்ற பெயரில் சுருட்டலாம். பல்வேறு காரியங்கள் செய்து கொடுத்து கையூட்டு பெறலாம். இவ்வாறான பல்வேறு வழிகளில் மக்களின் உழைப்பால் உருவான வரிப்பணங்கள் இவர்களின் முதலீடாக இருக்கிறது. மேலும், அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியை பற்றி ஊழல் செய்தவர்கள் என்று முழங்குவதுண்டு. அந்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் தமது சக முஸ்லீம் அமைப்புகளை சுனாமியில் சுருட்டிவிட்டார்கள் என்பது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவதை பார்க்கிறோம். அதே சுனாமி பணத்தில் இவர்கள் சீருடை வாங்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.[இத்தகைய பரஸ்பர குற்றச்சாட்டு உண்மையா பொய்யாஎன்பது அல்லாஹ் அறிந்தவன்] இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள் சுருட்டுவதற்கும் முஸ்லீம் அமைப்புகள் சுருட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசியல் கட்சிகளை பற்றிஅரசியல் வாதிகளை பற்றி மக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் சமுதாய அமைப்புகளை பொருத்தமட்டில் எந்த சமுதாய அமைப்பாக இருந்தாலும் அவை 99 சதவிகிதம் முஸ்லிம்களின் உதவியை கொண்டு, அதிலும் குறிப்பாக வளைகுடாவில் இளமையை தொலைத்து வாழும் சகோதரர்களின் உதவியை கொண்டுதான் இயங்குகிறது என்பதும், இந்த சமுதாய அமைப்புகள் மீது அந்த அமைப்புகளில் அங்கம் வகிக்கும் சகோதரர்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்து தங்களின் பொருளாதாரத்தை வழங்குகிறர்கள் என்பதும் எவரும் மறுக்க முடியா உண்மையாகும். அப்படிப்பட்ட அமைப்பு எந்த நோக்கத்திற்காக வசூல் செய்தார்களோ அதற்கு செலவிடாமல் அமுக்கி கொண்டால், அல்லது வேறு வகைக்கு செலவு செய்தால் அவர்களின் மறுமை நிலை இதோ ஒரே ஒரு பொன்மொழி;
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்குப்) புறப்பட்டோம்; அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின் போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாக அடையவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) 'வாதீ(அல்குரா)' எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். 'பனூ ளுபைப்' குலத்தின் ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த (மித்அம் என்றழைக்கப்பட்ட) ஓர் அடிமையும் உடனிருந்தார்.நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு வாழ்த்துகள்! இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்ததே" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே (அனுமதியின்றி) அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.(இதை கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒருவர் ஒரு/இரு செருப்பு வாரைக் கொண்டு வந்து, "(இதை) நான் கைபர் போரின்போது (பங்கிடுமுன்) எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால்) "இவை, நரகத்தின் செருப்பு வார்/கள் (ஆகியிருக்கும்) என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்]
போரில் கிடைக்கும் பொருட்களை நபி[ஸல்] அவர்கள், போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பது வழக்கம். அவாறு பகிர்ந்தளிப்பதற்கு முன்பே ஒருவர் ஒரு போர்வையை சுருட்டிக்கொன்டதால் அவர் இறைவழியில் போரிட்டு உயிர்துறந்த போதும், அவர் சுருட்டிய போர்வை அவருக்கு நரகத்தை பெற்றுத்தருகிறது. மேலும் நபியவர்களுக்கு தெரியாமல் சுருட்டிக்கொண்ட இரு செருப்பு வார், திருப்பி தந்திருக்காவிட்டால் நரகத்தின் செருப்புவாராக ஆகியிருக்கும் என்றால், போரில் பங்கெடுத்தவர்களுக்கு அதில் கிடைக்கும் பொருட்கள் ஆகுமானவையாக இருந்ததும், அவைகளை உரியமுறையில் நபி[ஸல்] அவர்கள் பகிர்ந்தளிப்பதற்கு முன்னால் எடுத்துக்கொண்டதால் அந்த செயலின் காரணமாக நரகம் செல்கிறார்கள் எனில், பொது பணத்தை அல்லது சொத்துக்களை எந்த வித உரிமையும் இல்லாதவர்கள் சுருட்டிக்கொள்வது அல்லது தவறான வழியில் அந்த பொது சொத்தை பயன்படுத்துவது எங்கே கொண்டு பொய் சேர்க்கும் என்பthai மேற்கண்ட நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ், பொது சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் விஷயத்தில் நேர்மையை கையாளக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
புதன், 29 ஜூலை, 2009
மத்ஹபுகளின் பார்வையில் பராஅத்!
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
நன்றி;த.த.ஜ.நெட்
செவ்வாய், 21 ஜூலை, 2009
கிரகணங்களும்- இஸ்லாமியர்களும்!

வியாழன், 16 ஜூலை, 2009
அடாடா! இதுக்கும் கூட தண்டனையா..?
புறாக்களின் மார்பு பகுதியை போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக்காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்.[நூல் நசயீ]
செவ்வாய், 14 ஜூலை, 2009
அட! இதுக்கும் கூட நன்மையா..?
திங்கள், 13 ஜூலை, 2009
அன்பளிப்பை அழகுபடுத்துவோம்!

பிறந்தநாள் விழா, பெயர்சூட்டு விழா, காதணி விழா, பூப்புனித[?] நீராட்டு விழா, மணிவிழா போன்றவைகளில் வழங்கப்படும் அன்பளிப்புகள் பித்அத்தாகும். ஏனெனில், மேற்கண்ட விழாக்கள் மாற்றார்கள் இடமிருந்து நம்மவர்கள் காப்பியடித்தவையாகும். இதுபோன்ற விழாக்களில் பங்கெடுப்பதோ, அதில் அன்பளிப்புகள் வழங்குவதோ பித்அத்தாகும். மேலும், திருமணம் முடித்த தம்பதிகளுக்கு ஹலாலான பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம்.
அபூ உஸ்மான் அல்ஜஅத் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார் (பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ்(ரலி) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம்(ரலி) என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!'' என்று கூறினார்கள். அதற்கு நான், '(அவ்வாறே) செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறினேன். எனவே, அவர்கள் பேரிச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து 'ஹைஸ்' எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள். அதை என்னிடம் கொடுத்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன்.[ஹதீஸ் சுருக்கம். நூல்;புஹாரி 5163 ]
இந்த ஹதீஸ் திருமணத்தில் அன்பளிப்பு செய்யலாம் என்பதை விளக்குகிறது. இன்றைய திருமணத்தில் செய்யப்படும் அன்பளிப்புகளில் இருவகை உண்டு. ஒன்று மக்கள் அவர்களாக விரும்பி செய்வது. மற்றொன்று 'மொய்' என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வது. இதில் நாமாக விரும்பி செய்யும் அன்பளிப்பு ஆகுமானது. அதே நேரத்தில் வழங்கப்படும் பொருட்களும் மார்க்கம் அனுமதித்தவையாக இருக்கவேண்டும். சிலர் தங்களின் நண்பர்களின் திருமணத்தில் மதுவகைகளை அன்பளிப்பு செய்கிறார்கள். அதோடு பல்வேறு உருவங்கள் அடங்கிய பரிசு பொருட்களை அன்பளிப்பு செய்கிறார்கள். இவை இரண்டும் மார்க்கத்தில் கண்டிப்பாக தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.[5:2
மேலும் திருமணத்தில் தம்பதிகளை பரிகாசம் செய்யும் வகையில் சிலர், பெரிய பார்சலை கொண்டு வருவார்கள். பல அடுக்குள்ள அந்த பார்சலை பிரித்து பார்த்தால் இறுதியில் ஒரு பால் குடிக்கும் நிப்பிலோ, அல்லது ஒரு காண்டமோ இருக்கும். நிப்பிளும்-காண்டமும் மார்க்கம் தடுத்த பொருளல்ல என்றாலும், இந்த அன்பளிப்பில் ஏமாற்றமும் பரிகாசமும் உள்ளது. இந்தவகை பரிகாசம் தவிர்க்கப்படவேண்டும்.
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُواْ بَقَرَةً قَالُواْ أَتَتَّخِذُنَا هُزُواً قَالَ أَعُوذُ بِاللّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.[2:67 ]
பரிகாசம் செய்வது அறிவீனர்களின் செயல் என்பதை இந்த வசனம் மூலம் நாம் விளங்கமுடிகிறது. எனவே நாம் வழங்கும் அன்பளிப்புகள் ஒன்று இம்மை தேவையை நிறைவேற்றும் பொருளாதாரமாகவோ, அல்லது பயனுள்ள பொருட்களாகவோஇருக்கலாம். அல்லது இம்மை-மறுமைக்கு வழிகாட்டும் மார்க்க விளக்க நூல்களாகவும் இருக்கலாம் இதுதான் சிறந்ததாகும்.
அடுத்து மார்க்கம் தடுத்த பொருட்கள் ஆண் பெண் இரு சாராருக்கும் பொருந்துபவைகளும் உண்டு. இப்படி இரு சாராரும் பயன்படுத்த தடுக்கப்பட்ட பொருட்களை யாரேனும் அன்பளிப்பு செய்தால் அதை நாம் பெறக்கூடாது. அதே நேரத்தில் ஆணுக்கு மட்டும் தடையுள்ள பெண்களுக்கு அனுமதியுள்ள ஒரு பொருள் நமக்கு அன்பளிப்பாக வந்தால் அதை நாம் என்ன செய்யவேண்டும்?
அலீ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.[புஹாரி எண் 2614 ]
ஆண்களுக்கு பட்டாடை ஹராம் என்று சொன்ன நபி[ஸல்] அவர்கள், அலி[ரலி] அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். எனவே ஆண்களுக்கு பட்டாடையோ தங்கமோ அன்பளிப்பு கிடைக்குமானால் அதை மறுக்காமல் வாங்கிகொண்டு அதை அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு வழங்கிவிடலாம் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது. மேலும் ஆண்களுக்கு கிடைக்கப்பெற்ற பட்டாடையோ அல்லது தங்கத்தையோ விற்கவோ, அல்லது முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்கவோ செய்யலாம் என்பதற்கு கீழ்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும்;
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்;
உமர்(ரலி) ஒரு மனிதரின் (தோள்) மீது, விற்கப்படுகிற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களிடம், 'இந்த அங்கியை வாங்கிக் கொள்ளுங்கள். ஜும்ஆ நாளிலும் (குலங்கள் மற்றும் நாடுகளின்) தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்வீர்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்" என்று கூறினார்கள். பிறகு, ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் (அதே போன்ற பட்டு) அங்கிகள் கொண்டு வரப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர்(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி), 'இது குறித்துக் கடுமையான சொற்களைத் தாங்கள் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காகத் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்" என்று கூறினார்கள். உமர்(ரலி) அதை மக்காவாசிகளில் ஒருவராயிருந்த தம் சகோதரருக்கு அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பி வைத்துவிட்டார்கள். [புஹாரி எண் 2619 ]
முஸ்லிமல்லாதவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்கலாமா?
முஸ்லிம்களாகிய நமக்கு முஸ்லிமல்லாதவர்களுடன் நட்பும்-நல்லுறவும் இருக்கிறது. நமது நண்பர்களான அவர்கள் நமக்கு ஒரு அன்பளிப்பை தந்தால் அதை நாம் ஏற்கவேண்டும்.
அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.[நூல் புஹாரி எண் 2617 ]
இந்த செய்தி முஸ்லிமல்லாதவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்கலாம் என்பதை நமக்கு விளக்குகிறது. அதே நேரத்தில் அவர்கள் அன்பளிப்பு செய்யும் பொருள் மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருந்தால் நாம் வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், மாற்று மதத்தவர்களுக்கு வழங்கிவிடலாம் உமர்[ரலி] அவர்களை போன்று!
கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறலாமா?
நம்மில் சிலர் சிலருக்கு அன்பளிப்பு செய்வார்கள். நாளடைவில் அவர்களுக்கிடையில் பகைமை வந்துவிட்டால் நான் கொடுத்த அன்பளிப்பை கொடு என்று மல்லுக்கு நிற்பார்கள். எமக்கு தெரிந்து ஒருவர் தன் உறவினருக்கு ஒரு நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். பின்பு அவர்களுக்கு மத்தியில் பகை ஏற்பட்டவுடன் எனது நிலத்தை திரும்பத்தா என்றார். அன்பளிப்பு வாங்கியவர் தர மறுக்க இருவரும் கோர்ட் சென்றார்கள். இறுதியில் அந்த நிலம் இருவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரிசாக[ பயனற்றதாக] ஆகி விட்டது. எனவே அன்பளிப்பை திரும்ப பெறலாகாது;
ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்;
உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது" என்று தீர்ப்பளித்தார்கள்.[புஹாரி 2625 ]
அதே நேரத்தில், நாம் ஒருவருக்கு ஒரு நிலம் நிரந்தரமாக அன்றி இரவலாக அன்பளிப்பு செய்து அதில் ஒருவர் பாடுபட்டு தன்னிறைவு அடைந்த பின் நாம் தந்த நிலத்தை நம்மிடமே அவராகவே ஒப்படைத்தால் நாம் பெற்றுக்கொள்வதில் தடையில்லை.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விம்தத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். [புஹாரி எண் 2630 ]
ஒருவர் நாம் வழங்கிய அன்பளிப்பை முறைகேடாக பயன்படுத்தினாலோ, அல்லது உரிய முறையில் பராமரிக்காதவராக இருந்தாலோ நாம் வழங்கிய திரும்ப பெறலாமா எனில் கூடவே கூடாது.
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், 'நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்க அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்" என்று கூறினார்கள். [புஹாரி எண் 2623 ]
அன்பானவர்களே! நம்முடைய அன்பளிப்புகளை அழகானதாக, அன்பு நிறைந்ததாக, அல்லாஹ்வின் அருள் நிறைந்ததாக ஆக்க முயற்ச்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.
ஞாயிறு, 12 ஜூலை, 2009
ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்
ஆக்கிரமிப்புகள் ஆட்சியாளர்கள் தொடங்கி சாமான்யர்கள் வரை செய்வதை காணலாம். நம் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட் சமுதாயத்திற்குசொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பங்களா எழுப்பிக்கொண்டார் என்றும், மந்திரிகள் தொடங்கி வார்டு மெம்பர் வரை அவரவர் சக்திக்கு உட்பட்டு சிலர் ஆக்கிரமித்துள்ள செய்தியும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வருவதுண்டு. சென்னையில் நாம் சொந்தமாக நிலம் வாங்கி அதற்கு சுற்றுவேலி எழுப்பாமல் சிறிதுகாலம் விட்டுவிடுவோமேயானால் ஒரு கும்பல் நமது இடத்தில் சிறு குடிசை போட்டுக்கொண்டு, பின்பு அதை காலி செய்ய சில ஆயிரங்களை கையூட்டாக கேட்பார்கள். அரசாங்க நிலத்தில் குடிசை போட்டு குறிப்பிட்ட வருஷம் வசித்து விட்டால், அவர்களுக்கு மாற்று இடம் தராதவரை அவர்களை காலி செய்ய முடியாது என்ற நிலை.மேலும் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக முன்னோர்களால் தனமாக வழங்கப்பட்ட வக்ப் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளதையும் அறிவோம். ஏரிகளும்-ஆறுகளும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கி சிறுத்து காட்சி தருகிறது. ஒரு காலத்தில் வயல் வரப்புகள் இருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும் நிலை இருந்தது. இன்றோ வயலுக்கு சொந்தாக்காரர்கள் வரப்பை ஆக்கிரமித்து ஒரு கையளவு இடத்தில் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஓர் தாய் வயிற்றில் பிறந்த அண்ணன்-தம்பிக்குள் ஒரு சான் நில ஆக்கிரமிப்பால் ஓட்டாண்டியாக ஆகும் அளவுக்கு கோர்ட் படிஏறுகிறார்கள். இவ்வாறான ஆக்கிரமிப்புகள் பல விதங்களில் அரங்கேறி வருவதை நாம் அன்றாடம் காண்கிறோம்.
இஸ்லாம் இந்த ஆக்கிரமிப்பு செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது.
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்;
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்" என்று கூறினார்கள்.[நூல் நூல் நூல்; 2453 ]
நடைபாதைக்கும் நல்வழி காட்டிய மார்க்கம்;
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். [நூல்;புஹாரி 2473 ]
அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் அடுத்தவர் நில விஷயத்தில் அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;
அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;
உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]
இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள், தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிமல்லாத காந்தி அவர்கள், உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது. அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல் வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.
வியாழன், 9 ஜூலை, 2009
ஒன்றே செய்; அதையும் நன்றே செய்!
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ ح و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ جَرِيرٍ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ كُلُّهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ غَيْرَكَ قَالَ قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِم"
அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு (அ) தங்களைத் தவிர எவரிடம் கேட்கத் தேவையில்லாதவாறு இஸ்லாத்தைக் குறித்து எனக்குச் சொல்லித் தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டேன்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறி, அந்த நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி] நூல்;முஸ்லிம்எண்;55]
இந்த நபிமொழியில் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவேண்டும். பின்பு அதில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்ற கருத்தை பார்க்கிறோம். முஸ்லிம்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்புவது எனில் கலிமா ஷகாதாவை மொழிந்துவிட்டால் போதும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பதை பார்க்கிறோம். கலிமாவை மொழிந்தால் மட்டும் போதாது. அந்த கலிமா சொல்லும் தத்துவமான அல்லாஹ்வை உறுதியாக நம்பவேண்டும். அந்த உறுதி நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிந்துவிடும் எனில், நம்முடைய வாழ்வின் எல்லா அம்சங்களும் சீர்பெற்றுவிடும்.
அல்லாஹ்வின் மீதே நம்முடைய முழு நம்பிக்கையும் அமையும்போது, அல்லாஹ்வுடைய அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைக்கு மாற்றமான எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மறைந்துவிடும். ஷிர்க் மற்றும் பித்அத்தை எதிர்ப்பதால் நாம் சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படும்போது, ஷைத்தான் லாவகமாக நம் உள்ளத்தில் ஒரு விதைபோடுவான் அதாவது 'ஊர் கூட்டி ஒப்பாரி வைக்கும்போது நீமட்டும் ஊருக்கு மாற்றமாக செய்து இப்படி துன்பப்படவேண்டுமா ? என்று. அப்போது அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கை இருக்குமெனில், அங்கே நம்முடைய இறைவன் இருக்கிறான்.இந்த ஊர் என்ன உலகமே நம்மை எதிர்த்தாலும் நம்முடைய இறைவன் பாதுகாப்பான் என்ற சிந்தனை தோன்ற நாம் அங்கே சத்தியத்தை நிலைநாட்டவும், அதனால் ஏற்படும் இழப்புகளை தாங்கிக்கொள்ளவும் தயாராகிவிடுவோம்.
இதற்கு ஒரு அற்புதமான ஒரு சான்றை அருள்மறை குர்ஆண் நமக்கு விளக்குகிறது
இறைவனின் கட்டளைப்படி பிர்அவ்னிடம் சென்ற மூஸா[அலை]அவர்கள் தன்னை நபியென நிரூபிக்க இறைவன் வழங்கிய அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவுடன், இந்த அற்புதங்களை சூனியம் என்று வர்ணித்த பிர்அவ்ன், கைதேர்ந்த சூனியக்காரர்களை மூஸா[அலை]அவர்களுக்கு எதிராக களமிறக்க அப்போது நடந்தவைகளை திருக்குரான் இப்படி வர்ணிக்கிறது
وَجَاء السَّحَرَةُ فِرْعَوْنَ قَالْواْ إِنَّ لَنَا لأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?" என்;று கேட்டார்கள். (7:113)
قَالَ نَعَمْ وَإَنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ
அவன் கூறினான்; "ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்." (7:114)
قَالُواْ يَا مُوسَى إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ
"மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். (7:115)
قَالَ أَلْقُوْاْ فَلَمَّا أَلْقَوْاْ سَحَرُواْ أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءوا بِسِحْرٍ عَظِيمٍ
அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர். (7:116)
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது. (7:117)
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعْمَلُونَ
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன. (7:118)
فَغُلِبُواْ هُنَالِكَ وَانقَلَبُواْ صَاغِرِينَ
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள். (7:119)
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து (7:120)
قَالُواْ آمَنَّا بِرِبِّ الْعَالَمِينَ
"அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; (7:121)
رَبِّ مُوسَى وَهَارُونَ
"அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள். (7:122)
قَالَ فِرْعَوْنُ آمَنتُم بِهِ قَبْلَ أَن آذَنَ لَكُمْ إِنَّ هَـذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِي الْمَدِينَةِ لِتُخْرِجُواْ مِنْهَا أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்! (7:123)
لأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلاَفٍ ثُمَّ لأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
"நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்ற கூறினான். (7:124)
قَالُواْ إِنَّا إِلَى رَبِّنَا مُنقَلِبُونَ
அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள். (7:125)
وَمَا تَنقِمُ مِنَّا إِلاَّ أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.) (7:126 ]
மேற்கண்ட வசனங்களில் மூஸா[அலை] அவர்களுக்கு போட்டியாக சூனியம் செய்துகாட்ட வந்தவர்கள் இறுதியில் தோல்வியடைந்து ஈமான் கொண்ட மாத்திரமே, பிர்அவ்னின் 'மாறுகால் மாறுகை வாங்குவேன்; சிலுவையில் அறைவேன் என்ற மிரட்டலை கண்டு அஞ்சாமல் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து அதை எதிர்கொண்டார்கள் எனில், இதுதான் உண்மையான அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கை. எத்தகைய சோதனைகளை நாம் உலக வாழ்வில் சந்தித்தாலும், அது எந்த வடிவில் வந்தாலும் அல்லாஹ்வின் மீதே அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்கவேண்டும். அதுதான் மகத்தான மறுமை வெற்றிக்கும், இறையச்சத்துடன் கூடிய இம்மை வாழ்விற்கும் வழிகாட்டும்.
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"
திங்கள், 6 ஜூலை, 2009
விசாரணையின்றி, சொர்க்கம் செல்வோர் யார்?
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ كُنْتُ عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ فَقَالَ أَيُّكُمْ رَأَى الْكَوْكَبَ الَّذِي انْقَضَّ الْبَارِحَةَ قُلْتُ أَنَا ثُمَّ قُلْتُ أَمَا إِنِّي لَمْ أَكُنْ فِي صَلَاةٍ وَلَكِنِّي لُدِغْتُ قَالَ فَمَاذَا صَنَعْتَ قُلْتُ اسْتَرْقَيْتُ قَالَ فَمَا حَمَلَكَ عَلَى ذَلِكَ قُلْتُ حَدِيثٌ حَدَّثَنَاهُ الشَّعْبِيُّ فَقَالَ وَمَا حَدَّثَكُمْ الشَّعْبِيُّ قُلْتُ حَدَّثَنَا عَنْ بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الْأَسْلَمِيِّ أَنَّهُ قَالَ لَا رُقْيَةَ إِلَّا مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ فَقَالَ قَدْ أَحْسَنَ مَنْ انْتَهَى إِلَى مَا سَمِعَ وَلَكِنْ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَرَأَيْتُ النَّبِيَّ وَمَعَهُ الرُّهَيْطُ وَالنَّبِيَّ وَمَعَهُ الرَّجُلُ وَالرَّجُلَانِ وَالنَّبِيَّ لَيْسَ مَعَهُ أَحَدٌ إِذْ رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ فَظَنَنْتُ أَنَّهُمْ أُمَّتِي فَقِيلَ لِي هَذَا مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَوْمُهُ وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي انْظُرْ إِلَى الْأُفُقِ الْآخَرِ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي هَذِهِ أُمَّتُكَ وَمَعَهُمْ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ ثُمَّ نَهَضَ فَدَخَلَ مَنْزِلَهُ فَخَاضَ النَّاسُ فِي أُولَئِكَ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ فَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ صَحِبُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ وُلِدُوا فِي الْإِسْلَامِ وَلَمْ يُشْرِكُوا بِاللَّهِ وَذَكَرُوا أَشْيَاءَ فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا الَّذِي تَخُوضُونَ فِيهِ فَأَخْبَرُوهُ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَرْقُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ أَنْتَ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ آخَرُ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ حُصَيْنٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ هُشَيْمٍ وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِ
"எனக்குப் பல சமுதாயத்தவர் (எனது விண்ணேற்றத்தின்போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, (தம்மைப் பின்பற்றிய பத்துக்குள் அடங்கும்) ஒரு சிறுகுழுவினரோடு ஓர் இறைத்தூதரையும் ஓரிருவரோடு ஓர் இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர்கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், "இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள்" என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும், "மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்" என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, "இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர்" என்று எனக்குச் சொல்லப்பட்டது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்" என்று கூறினர். வேறு சிலர், "இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம்" என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்து, "எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் யாரெனில், யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்" என்று கூறினார்கள்.அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நீரும் ஒருவர்தாம்" என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).[முஸ்லிம் ]
மேற்கண்ட பொன்மொழியில் விசாரணையும்- வேதனையும் இன்றி சுவர்க்கம் செல்பவர்கள் நான்கு காரியங்களை செய்யமாட்டார்கள் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்;
1 .யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்.
2 .யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்.
3 . பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்.
4 . முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
மேற்கண்ட நான்கு தன்மைகள் இன்றைக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையோரிடம் இருப்பதை காணலாம். மந்திரிப்பதையே தொழிலாக கொண்ட மவ்லவி[?] களும் உண்டு. முஸ்லிம் மந்திரவாதியிடம் கயிருமுடிந்து கழுத்தில் இடுப்பில் கட்டிக்கொள்வது, தாவிஸை மந்திரித்து வாங்கி தாலியாக கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்வது. இது காணாது என்று ஏதாவது தீராத நோய் என்றால் சாமியார்களிடமும் மந்திரித்து திருநீறு பூசிக்கொள்வது. அவன் தரும் பொருட்களை வீட்டில் தொங்கவிடுவது அல்லது மாட்டிவைப்பது. இப்படி மந்திரித்தலில் எத்துனை வகைகள் உண்டோ அத்துனையையும் செய்யும் முஸ்லிம்களும் உண்டு.
மேலும், பறவைகளை வைத்து சகுனம் பார்ப்பது இன்று இல்லை என்றாலும், பறவைகளை வைத்து சில மூடநம்பிக்கைகளை நம்புவதை காணலாம். காக்கா கத்தினால் விருந்தாளி வருவார்கள் என்பது போன்ற நம்பிக்கைகளும் , பூனை குறுக்கே போனால், அல்லது விதவை குறுக்கே போனால், அல்லது வீட்டின் நிலைப்படி தட்டிவிட்டால் போகும் காரியம் உருப்படாது என்பன போன்ற சகுனம் பார்க்கும் பழக்கம் முஸ்லிம்கள் சிலரிடம் இருக்கிறது.
மேலும் முற்றிலும் இறைவனையே சார்ந்திருக்கும் உறுதியான நம்பிக்கையும் முஸ்லிம்களில் பலரிடம் இல்லாமையை காணலாம். தமக்கு ஏற்படும் சிற்சில துன்பங்களை தாங்கி கொள்ளமுடியாமல் தர்காக்களில் சரணடைந்து அங்கு அடங்கி மண்ணோடு மண்ணாகி போன அவுலியா என்று நம்பப்படுபவரிடம்,
எனது நோயை நீக்குங்கள்; பேயை ஒட்டுங்கள்; பிள்ளையை தாருங்கள்; விஷாவை தாருங்கள்; செல்வத்தை தாருங்கள் என்றெல்லாம் கேட்பதன்மூலம் இறைவன் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை கேலிக்குரியதாக ஆக்குவதை பார்க்கிறோம். இந்நிலை மாறவேண்டும். மந்திரிப்பதையும் -சகுனம் பார்ப்பதையும்- மூட நம்பிக்கைகளையும் விட்டொழித்து முழுக்க முழுக்க இறைவனை சார்ந்து நாம் இருப்போமானால், விசாரணையும் வேதனையும் இன்றி சுவனம் செல்லும் அந்த 70 ஆயிரம் பேரில் நாமும் ஒருவராக ஆகமுடியும். எல்லாம் வல்ல அல்லாஹ் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மையும் ஆக்கி அருள்வானாக!
வியாழன், 2 ஜூலை, 2009
ஓரினச்சேர்க்கையும்-இஸ்லாமும்!
இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரிவு சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ள நிலையில், இந்த ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَமேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"[7:80 ]
إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]
இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلاَّ أَن قَالُواْ أَخْرِجُوهُم مِّن قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ]
அழிக்க வந்த அமரர்களையும்[வானவர்கள்] 'அனுபவிக்க' நினைத்த பாவிகள்;
ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
وَجَاءهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُواْ يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَـؤُلاء بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُواْ اللّهَ وَلاَ تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]
قَالُواْ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ
(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79)
قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ
அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)
மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன;
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)
فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)
فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)
மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த இழிவான ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இவ்வுலகில் எவ்வித அங்கீகாரமும் இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். அதிலும் குறிப்பாக லூத் நபியவர்களின் வழிவந்த நாம் இந்த தீமையை ஒழித்திட கடும் முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்த சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். வழக்கம் போல முஸ்லீம் அமைப்புகள் ஆளுக்கொருநாள் என்று பந்தி வைத்து பரிமாறியது போல் போராட்டம் நடத்தாமல் ஒருங்கிணைந்து அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராடவேண்டும். மேலும், முஸ்லிமல்லாத மற்றும் ஒத்த கருத்துடையவர்களையும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கசெய்து இந்தியாவில் இந்த இழிவான கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
வெள்ளி, 26 ஜூன், 2009
சத்திய ஸஹாபாக்களுக்கு சமமாக முடியுமா...?
*அம்ரு இப்னு ஆஸ்[ரலி]-கிரிமினல்.
அபூ மூஸா அல் அஸ்ஸரி[ரலி]- ஏமாளி.
அலீ[ரலி]- எடுப்பார் கைப்பிள்ளை.
முஆவியா[ரலி] பதவி ஆசை பிடித்தவர்.
இவ்வாறாக இன்னும் பல சஹாபாக்களை வரலாறு என்ற பெயரில் விமர்சித்து, உச்சகட்டமாக சஹாபாக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அளவில் சகாபாக்களை பற்றிய மதிப்பீடு சமுதாயத்தில் இன்று விதைக்கப்பட்டுள்ளது.
உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பதைப்போல என்னதான் நாம் அமலில் மூழ்கியிருந்தாலும், அந்த சத்திய சீலர்களுக்கு சமமாக முடியாது எனும்போது, அவர்களை விட நாம் எப்படி மேன்மக்களாக ஆகமுடியும்? நாம் வாழ்க்கையில் என்றோ, எப்போதோ ஒரு தியாகம் செய்வோம். ஆனால் தியாகமே வாழ்க்கையாக கொண்ட சகாபாக்களின் வரலாற்றை எடுத்தெழுத எண்ணினால் எமது ஆயுள் போதாது. எனவே சகாபாக்களின் சிறப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.
தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்;
مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.[48:29]
தவ்ராத்திலும், இன்ஜீலிலும் உங்களையும் என்னையும் பற்றி கூறப்பட்டுள்ளதா? இல்லையே? நபி[ஸல்] அவர்களோடு இருந்த அந்த உத்தம தோழர்களை அல்லவா அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். மேலும், காபிர்களிடம் கடுமையானவர்களாக, மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? எப்படி சமமாக முடியும்? எப்படி சஹாபாக்களை விட சிறந்தவர்களாக முடியும்?
மன்னிப்பு வழங்கப்பட்ட மேதைகள்;
لَقَد تَّابَ الله عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِن بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَؤُوفٌ رَّحِيمٌ
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.[9;117 ]
சகாபாக்களில்
சிலருக்கு தடுமாற்றம் வந்தபோதிலும் , அவர்கள் கஷ்ட காலத்தில் நபியவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக கூறுகின்றான்! உங்களுக்கும் எனக்கும் இந்த உத்திரவாதம் இருக்கிறதா? எப்படி அந்த சத்திய சீலர்களோடு நாம் சமமாக முடியும்? எப்படி அவர்களைவிட மேன்மக்களாக ஆகமுடியும்?சகாபாக்களே சிலர் சிலருக்கு சமமாக மாட்டார்கள்;
وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُوْلَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.[57:10 ]
மக்கா வெற்றிக்கு முன்னாள் செலவு செய்து போரிட்டவர்களுடன், மக்கா வெற்றிக்கு பின்னால் செலவு செய்து போரிட்டவர்கள் சமமாக முடியாது எனும்போது, இஸ்லாத்திற்காக ஒரு துளி ரத்தம் சிந்தாத இன்னும் சொல்லப்போனால் எதிரிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதியளவு ஆகும் வரை போர் நம்மீது கடமையில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிற நாம் , எப்படி அந்த தியாக சீலர்களுக்கு சமமாக முடியும்? எப்படி அவர்களைவிட நாம் மேன்மக்களாக ஆகமுடியும்?
உண்மையான மூமீன்கள் அந்த மேதைகள்;
وَالَّذِينَ آمَنُواْ وَهَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ وَالَّذِينَ آوَواْ وَّنَصَرُواْ أُولَـئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.[8:74
முஹாஜிர்களையும்-அன்ஸாரிகளையும் உண்மையான மூமீன்கள் என்று அல்லாஹ் உத்திரவாதம் அளித்துவிட்டான். நமக்கு அத்தகைய உத்திரவாதம் உண்டா? நாம் உண்மையான மூமீன்களா? போலிகளா? என்று மறுமையல்லவா தீர்மானிக்கும். நம்பிக்கையாளர்கள் என்று வரையருக்கப்பட்டவர்களும், நம்பிக்கை கேள்விக்குறியாக நிற்பவர்களும் எப்படி சமமாக முடியும், எப்படி மேன்மக்களாக முடியும்?
வாக்குறுதி மாறா வாய்மையாளர்கள்;
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.[33:23 ]
சஹாபாக்கள் கொடுத்த வாக்குறுதிகள் அது அவர்களின் உயிர் விஷயமாக இருந்தாலும் அதை நிறைவேற்றிய வாய்மையாளர்கள் என்று அல்லாஹ் சான்று பகர்கிறான். நம்மில் யாரேனும் கொடுத்த வாக்குறுதி அத்தனையும் நூறு சதவிகிதம் நிறைவேற்றியதாக கூறமுடியுமா? வாய்மையாளர்களும்-வாய்மையில் குறைபாடு உள்ளவர்களும் சமமாக முடியுமா? வாய்மையாளர்களைவிட மேன்மக்களாக ஆகமுடியுமா?
சிறந்த சமுதாயம் என்று சான்று பெற்றவர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.[புஹாரி]
மூன்று சிறந்த தலைமுறையில் முதலிடத்தை பிடித்துள்ள சகாபாக்களோடு, பல தலைமுறை கடந்து வந்த நாம் சமமாக முடியுமா? மேன்மக்களாக ஆகமுடியுமா?போட்டியிலே கலந்துகொள்ளாத ஒருவர், முதல் பரிசு வாங்கியவரும்-நானும் சமம். அல்லது முதல் பரிசு வாங்கியவரைவிட நான் மேலானவன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளமுடியுமா?
எட்டிப்பிடிக்க முடியா உச்சம் அவர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. [புஹாரி]
இறைவனின் பாதையில் தங்களின் உடலாலும், பொருளாலும் தியாகம் செய்த அந்த உத்தமர்களின் இடத்தை நாம் உஹது மலையளவு தர்மம் செய்தாலும் எட்டிப்பிடிக்க முடியாது எனும் போது எவ்வாறு மேன்மக்களாக ஆகமுடியும்?
சகாபாக்களின் தவறுகள் அலட்சியம் செய்யப்படவேண்டும்;
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.[3:159 ]
மனிதர்கள் என்ற முறையில் சஹாபாக்கள் ஏதேனும் தவறு செய்தால்[குற்றவியல் நீங்கலாக] அதை அலட்சியப்படுத்துவதோடு, அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடுமாறு தனது நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான் எனில், அந்த சகாபாக்களின் தவறுகளை பட்டியல் போடுவதும், அவர்களின் விரல்விட்டு என்னும் அளவுக்குள்ள தவறுகளோடு தங்களை சம்மந்தப்படுத்தி ஒப்பிட்டு பார்த்து சஹாபாக்களை விட நாங்கள் மேன்மையானவர்கள் என்று கருதுவதும் மேற்கண்ட திருமறை வசனத்திற்கு அப்பட்டமான முரணாகும்.
இறுதியாக சஹாபாக்கள் சில தவறுகள் செய்துள்ளார்கள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால் அந்த தவறுகளை அவர்கள் உணர்ந்தபோது அதற்காக அவர்கள் கைசேதப்பட்டுள்ளார்கள். இதற்கு பல சான்றுகளை கூறலாம்.
ரஸூல்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் கொள்கை குழப்பம் தலை தூக்கியது. அதில் பிரதானமாக உமர்[ரலி] அவர்கள் இருந்தார்கள் என்ற கருத்து சிலரால் கூறப்படுகிறதே! நபி[ஸல்] அவர்களை தங்களின் பெற்றோரை/மனைவி-மக்களை விட, ஏன் தங்களின் உயிரைவிட அதிகமாக நேசித்தவர்கள் சஹாபாக்கள். அதிலும் குறிப்பாக உமர்[ரலி]அவர்கள் நபியவர்கள் மீது அளவுகடந்த அன்புடையவர்கள். அப்படிப்பட்ட நபியவர்களின் மரண செய்தியை உமர்[ரலி]அவர்களால் ஜீரணிக்கமுடியாமல் சொன்ன வார்த்தைதான் நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது. பின்பு அபூபக்கர்[ரலி]அவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை ஒதிக்காட்டியவுடன் உமர்[ரலி] தன்னை திருத்திக்கொண்டார்களா? இல்லையா?
ஆஊன்னா, ஆயிஷா[ரலி] அவர்களுக்கும்- அலி[ரலி] அவர்களுக்கும் நடந்த போரை சொல்லிக்காட்டுகிறோமே! அதை வைத்து அவர்களை மட்டமானவர்களாகவும், நம்மை மேன்மக்களாகவும் கருதுகிறோமே! அந்தபோர் முடிவில் நடந்தது என்ன? அன்னை ஆயிஷா[ ரலி] அவர்கள் தோற்றவுடன், தன்னை எதிர்த்து போரிட்டவர்- தன்னுடைய எதிரி என்றெல்லாம்[நம்மை போல் வஞ்சம் வைக்காமல்] கருதாமல் அலீ[ரலி] அவர்கள், அன்னையை கண்ணியமாக பத்திரமாக அனுப்பவில்லையா? அலீ[ரலி] அவர்களுக்கெதிராக போர் தொடுத்தது தவறு என்று அன்னையவர்கள் அழுது வருந்தவில்லையா?
இவ்வாறாக சஹாபாக்கள் தவறு செய்தாலும், பின்பு அந்த தவறை உணர்ந்து வருந்தியிருக்கிறார்கள்.திருந்தியிருக்கிறார்கள். சுமார் தொண்ணூறு சதவிகித பாவத்தையும்-சுமார் பத்து சதவிகித அமல்களையும் செய்யும் நாம், தொன்னூற்றி ஒன்பது சதவிகித நற்செயலையும் ஒரு சதவிகித தவறையும் செய்த நன்மக்களோடு எந்த காலத்திலும் ஒப்பாகவே முடியாது! ஒப்பாகவேமுடியாது!! ஒப்பாகவேமுடியாது!!!
திங்கள், 22 ஜூன், 2009
இதுவல்லவா பிள்ளைப்பாசம்...?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்தார். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை "ஸம்ஸம்" நீரால் கழுவினார். பிறகு ஞானமும் இறைநம்பிக்கையும் நிரம்பிய, பொன்னாலான தாம்பாளத்தோடு என்னிடம் வந்து, அதிலிருந்து என் நெஞ்சினுள் ஊற்றி மூடினார்.பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு விண்ணில் ஏறினார். பூமியின் (முதல்) வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானக் காவலரிடம், "திறப்பீராக!" என்று ஜிப்ரீல் கூறினார். "யார் அது?" எனக் காவலர் கேட்டார். அவர் "(நான்)ஜிப்ரீல்" என்று ஜிப்ரீல் பதிலளித்தார். "உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?" என்று காவலர் கேட்டார். "என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்" என்று ஜிப்ரீல் பதிலளித்தார். "அவருக்கு ஆளனுப்பப் பட்டிருந்ததா?" என்று காவலர் கேட்க, ஜிப்ரீல் "ஆம்" என்று பதிலளித்தார். முதல் வானக் காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்துக்குள் உயர்ந்து சென்றபோது அங்கு தமக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் (பிரிந்து) புடைசூழ்ந்திருக்க ஒருவர் இருந்தார். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (என்னைப் பார்த்ததும் அவர்,) "நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!" என்று என்னை வரவேற்றார். "யார் இவர் ஜிப்ரீலே?" என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன். "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை). இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள், அன்னாரின் வழித்தோன்றல்கள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடப்பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப்பக்கம் பார்க்கும்போது சிரிக்கிறார். இடப்பக்கம் பார்க்கும்போது அழுகிறார்" என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.[ ஹதீஸ் சுருக்கம். நூல்; முஸ்லிம்]
நபிகளாரின் இந்த பொன்மொழி உணர்த்துவதென்ன? நம்மை பார்த்திராத ஆதம் [அலை] அவர்கள், நாம் அவர்களின் சந்ததி என்ற ஒரே காரணத்திற்காக நம்மில் ஒரு பிரிவினர் நரகம் செல்வதை எண்ணி கண்ணீர் வடித்து கைசேதப்படுகிறார்கள் எனில், பத்து மாதம் சுமந்து, பாலூட்டி பாராட்டி சீராட்டி வளர்த்த நம் பிள்ளை நாளை நரக நெருப்பில் கருகாமல் இருக்க நாம் செய்த காரியம் என்ன என்பதை ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்கவேண்டும். வல்ல இறைவன் கூறுகின்றான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَமுஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.[66:6 ]
இனியேனும் நம் பிள்ளைகளின் மறுமை வாழ்க்கையில் கவனம் செலுத்துவோமா...?
வியாழன், 18 ஜூன், 2009
எங்கே எமது அடையாளம்..?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (எனது சமுதாயத்தவர்) இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதைப் பற்றி (ஓர் உவமை) உங்களுக்குத் தெரிவிக்கிறேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கறுப்புக்காளை மாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்று - அல்லது - வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவர்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). [நூல்;முஸ்லிம் ஹதீஸ் எண்: 324
ஹதீஸ் எண்: 325 வது செய்தியில், இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது என்றும், ஹதீஸ் எண்: 326 வது செய்தியில், மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும் போது என்றும் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனித்து விளங்கவேண்டும் என்பதை நபியவர்கள் உதாரணத்தோடு குறிப்பிடுகிறார்கள் . அதாவது முழுக்க-முழுக்க வெள்ளை நிறத்திலான காளை மாட்டில் ஒரே ஒரு கருப்பு முடி இருந்தால் எவ்வாறு தனித்து பளிச்சென்று தென்படுமோ அதுபோன்று, ஒரு முஸ்லிமை பார்த்தால் அவரைப்பற்றி விசாரிக்காமலேயே அவர் முஸ்லிம்தான் என்று அடையாளம் காணும் வகையில் இருக்கவேண்டும். முஸ்லிம் என்பதன் அடையாளமாக பல விஷயங்கள் மார்க்கத்தில் கூறப்பட்டிருந்தாலும், தோற்றத்தில் ஒன்றையும், அமலில் ஒன்றையும் இந்த ஆக்கத்தில் மேற்கோள் காட்டுகிறோம்.
தொழுகை;
حَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ
"நிச்சயமாக ஒருவரது இணைவைப்புக்கும் இறைமறுப்புக்கும் அடையாளம் என்பது தொழுகையைக் கைவிடுவதுதான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).[முஸ்லிம் ஹதீஸ் எண்: 117
நான் ஒரு முஸ்லிம். இனைவைப்பிலோ, அல்லது இறை மறுப்பிலோ எனக்கு உடன்பாடில்லை என்று அடையாளம் காட்டுவது தொழுகை மூலமாகத்தான். எப்படி எனில், ஒரு முஸ்லிமல்லாதவருடன் நாம் அளவளாவிக்கொண்டிருக்கையில், அருகில் உள்ள பள்ளியில் இருந்து அல்லாஹ்வை வணங்க அதான் எனும் அழைப்பு விடுக்கப்பட்டவுடன், நாம் பள்ளியை நோக்கி சென்றால் அங்கே நாம் முஸ்லிம் என அடையாளப்படுத்துகிறோம். அல்லது பாங்கின் ஓசையை கேட்டும்' எதன் மீதோ மழை பெய்தது' போன்று நாம் அரட்டை கச்சேரியை தொடர்ந்தால் அந்த இடத்தில் முஸ்லிமல்லாதவருக்கும்-நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இன்று முஸ்லிம்களில் தொழாதவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக உள்ளது. எனவே பெயரை அரபியில் வைத்துக்கொள்வதால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாகிவிட முடியாது. இறை மறுப்பாளர்கள் மற்றும் இனைவைப்பாளர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் தொழுகையை நிறைவேற்றாதவரை இவர்களும் அவர்களை சார்ந்தவர்களே.
தாடி;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [நூல்;buhaari எண் 5892]
தாடி வளர்ப்பது நபியவர்களின் வழிமுறையாகவும், இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யக்கூடியதாகவும், முஸ்லிமின் அடையாளமாகவும் திகழ்கிறது. நபி[ஸல்] அவர்கள் மட்டுமன்றி, பெரும்பாலான சகாபாக்களும் தாடி வைத்திருந்ததாக ஹதீஸ்களில் காணமுடிகிறது .ஆனால் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மில் பெரும்பாலோர் தாடி வைப்பதில்லை. மேலும், தாடி வைத்திருக்கும் சொற்பமான நபர்களை, 'ஏண்டா பரதேசி மாதிரி தாடி வளத்துக்கிட்டு அலையுற' என்று ஏளனமாக கேலி செய்பவர்களும் சமுதாயத்தில் உண்டு. வெள்ளிக்கிழமை மட்டும் முஸ்லிமாக மாறும்[ஜூம்மா மட்டும் தொழுபவர்கள்] இவர்கள், ஜூம்மா தொழுகைக்கு செல்லும் முன்பு அந்த வாரத்தில் வளர்ந்த சுன்னத்தான தாடியை மழுங்க சிறைத்து விட்டே பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது போக ஒரு காலத்தில் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் தாடி வைத்தவர்களை போலிஸ் சந்தேக கண் கொண்டு பார்த்தபோது அதற்கு பயந்து தாடியை எடுத்தவர்களும் உண்டு. தனது அபிமான அரசியல் தலைவர்கள் /நடிகர்களின் மேனரிசத்தை கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்களில் சிலர் நமது உயிரினும் மேலான தலைவர் நபி[ஸல்] அவர்களின் வழிமுறையான தாடி வளர்ப்பதை கடைபிடிப்பதில்லை. எனவே நாம் சுட்டிக்காட்டியவைகள் மட்டுமன்றி, நம்முடைய அன்றாட வாழ்க்கை தொடங்கி, திருமணம் வியாபாரம் பழக்க வழக்கங்கள் இப்படி எல்லாவற்றிலும் நாம் 'முஸ்லிம்' என்ற தனித்துவத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை முஸ்லிம்களாக வாழ்ந்து, முஸ்லிம்களாகவே மரணிக்க செய்வானாக!
புதன், 17 ஜூன், 2009
இறைவனின் பார்வையில் மிகப்பெரும் பாவம் எது..?
oru மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரிய பாவம் எது?"கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை வைப்பதுதான் (பெரும் பாவம்)" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அவர்கள், "உன் பிள்ளை உன்னுடன் (உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். "பிறகு எது?" என்று அவர் கேட்க, "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்பிக்கும் வகையில், "மேலும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறெந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றி (அநியாயமாகக்) கொலை செய்ய மாட்டார்கள்; மேலும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இப்பாவச் செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்" எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
ஆதார நூல்;முஸ்லிம்.
இந்த பொன்மொழியில் நபி[ஸல்]அவர்கள், இறைவனின் பார்வையில் பிரதானமாக கருதப்படும் மூன்று பாவங்களை குறிப்பிடுகிறார்கள். துரதிஷ்டவசமாக இந்த மூன்று பாவங்களும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடம் இருப்பதை காணலாம்.
இணைவைப்பு;
இறைவனுக்கு இணைவைப்பதை பற்றியும், அதன் பலன் நிரந்தர நரகம் என்று அல்-குர்ஆன் தெளிவாக அறிவுருத்தியபின்னும், பன்னெடுங்காலமாக அறிஞர்கள் பலர் உபதேசங்கள் செய்த பின்னும் தர்காக்களும் குறைந்தபாடில்லை. அங்கு போய் சரணடையும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இதற்கு காரணம் இறையச்சமின்மையும், தர்கா வழிபாடு ஒரு பெரும்பாவம் என்ற அறியாமையும்தான்.
குழந்தைகளை கொல்வது;
அன்றைய அறியாமை காலத்தில் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அதை அடியோடு ஒழித்துக்கட்டியது. இன்று நவீன உலகில் வயிற்றில் வளர்வது ஆனா? பெண்ணா? என்பதை அறியும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு அறிந்து வயிற்றில் வளரும் சிசு பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றுக்கு உள்ளேயே சமாதி ஆக்குவது. மேலும், இரண்டு குழந்தை பெறுவதுதான் நாகரிகம் என்று கருதி நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குழந்தை பெறுவதை தடுப்பது. மேலும் வறுமைக்கு பயந்து குழந்தை பெற்றுக்கொள்வதை குறைத்துக்கொள்வது. இவையாவும் ஒருவகை சிசுக்கொலைதான். எப்படி எனில், ஒரு தம்பதியருக்கு எத்துனை குழந்தைகள் பிறக்கவேண்டும் என்று தீர்மானித்து இறைவன் அத்துணை குழந்தைகளை கருவாக செய்கிறான். அல்லாஹ்வால் கருவாக்கப்பட்ட குழந்தைகளை, நாகரீகம் என்ற பெயரிலோ அல்லது நம்மால் வளர்க்க முடியாது என்ற பெயரிலோ அழிப்பது கண்டிப்பாக சிசுக்கொலையன்றி வேறென்ன!
மேலும் வல்ல ரஹ்மான் கூறுகின்றான், வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்[6 ;151 ]
எனவே கருவான குழந்தையை அழிப்பது பெரும்பாவமாகும். மேலும் எந்த கருவை நாம் வேண்டாம் என்று அழிக்கிறோமோ அந்த கரு மூலம் உருவான குழந்தை நமக்கு மட்டுமன்றி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் இறைவன் நாடியிருக்கலாம். எனவே இது போன்ற கருக்கலைப்பு செய்யும் முஸ்லிம்கள் திருந்தவேண்டும்.
அண்டை வீட்டுக்காரன் மனைவியுடன் விபச்சாரம்;
ஒரு முஸ்லிம் தனது பெற்றோர்/உற்றார்க்கு அடுத்தபடியாக நல்லுறவோடு இருக்கவேண்டியது அண்டை வீட்டினரிடம்தான். அண்டை வீட்டினருடன் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றிய நபிமொழிகள் ஏராளம் உண்டு.
அதில் ஒன்று; حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ قَالَ أَخْبَرَنِي الْعَلَاءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ"எவருடைய தொல்லைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்]
இந்த ஆளவுக்கு இஸ்லாம் வலியுறுத்தியுள்ள அண்டை வீட்டில் நமது நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், ஆபத்து என்ற உடன் அடுத்த நொடி ஆதரவுக்கரம் நீட்டுவது அண்டை வீடுதான். பொதுவாக மற்ற வீடுகளை விட்ட அண்டை வீட்டினரிடம் சகஜமாக பேசுவது, அவர்களது வீட்டிற்குள் உரிமையோடு சென்றுவருவது, அவர்களது பலம்-பலவீனத்தை அறிந்திருப்பது இதையெல்லாம் பயன்படுத்தி அவர்களுக்கு கெடுதல் தர நினைப்பது அதிலும் குறிப்பாக, அண்டை வீட்டார் நம்மை நல்லவன் என்று நம்பியிருக்கும் நிலையில் அவனது மனைவியுடன் ஒரு தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டு அவனது படுக்கையை பகிர்வது, ஒன்று நம்பிக்கை துரோகம் அடுத்து விபச்சாரம். இதைத்தான் மேற்கண்ட நபிமொழியில் பெரும்பாவம் என நபியவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்.ஆனால் நம்மில் சிலர் அண்டை வீட்டு கணவன் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ பணியாற்று பவனாக இருந்தால் அவனது மனைவிக்கு வலை வீசுபவர்களும் இருப்பதை பார்க்கிறோம். இப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும். நமது அண்டை வீட்டாருக்கு நாம் அரணாக இருக்கவேண்டுமேயன்றி, அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மை மேற்கண்ட பெரும்பாவங்களில் இருந்து பாதுகாப்பானாக!