அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அதிகமாக அழுங்கள் குறைவாகவே சிரியுங்கள்!


அல்லாஹ் கூறுகிறான்: ""இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள்,
அவர்களுக்கு இது இறையச்சத்தை அதிகமாக்கும்''                    (அல்குர்ஆன் 17:109)

உண்மையான இறை விசுவாசிகள், சதா அல்லாஹ்வை அஞ்சி, அவனுடைய தண்டனைகளை நினைத்
துப்பார்த்து தனிமையிலிருந்து அழுது மன்றாடி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருவார்கள்,
மறுமையில் வல்ல அல்லாஹ் நம்மை நரகத்தில் போட்டு விடுவானோ என்ற அச்சத்தால் கண்கலங்கு
வார்கள். பாவங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவார்கள்.

""ஒருதடவை நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்'' அதுபோன்ற சொற்பொழிவை
நாங்கள் கேட்டதே இல்லை, அப்போது அவர்கள் ""நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால் குறைவாக
சிரிப்பீரிகள், அதிகமாக அழுவீர்கள்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் தங்கள் முகங்களை மூடிக்
கொண்டார்கள், அவர்கள் அழுகின்ற சப்தம் கேட்டது என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

""அவர்கள் செய்து கொண்டிருந்ததின் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.                  அல்குர்ஆன் 9:82

பரிசுத்த வேதமான திருக்குர்ஆன் வசனங்களில் உள்ள அபூர்வமான விஷயங்களையெல்லாம்
படித்து சிந்திக்காதவர்கள், அதை புறக்கணித்து வாழக்கூடியவர்கள், உள்ளம் இறுகியவர்கள், இந்த
உலக வாழ்க்கையைப் பார்த்து ஏமாறக்கூடியவர்கள், இப்படிப்பட்ட பண்புடையவர்களை வல்ல
அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

""நீங்கள் குர்ஆனிலுள்ள செய்திகளைப் பற்றியா ஆச்சரியப்படுகிறீர்கள்? சிரித்துக் கொண்டும்
இருக்கிறீர்கள், நீங்கள் அழாமலும் இருக்கிறீர்களே?                    அல்குர்ஆன் 53:59,60

இந்த உலக வாழ்க்கை என்பது எல்லாவிதமான பாக்கியங்களையும் அனுபவித்து சிரித்து மகிழ்வதற்காக வழங்கப்பட்ட வாழ்க்கையல்ல, இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நாளைக்கு நம்மைப்
படைத்த நாயனிடத்தில் சென்றாக வேண்டுமே அங்கு நாம் வெற்றி பெறப் போகின்றோமா
அல்லது தோல்வியடையப் போகின்றோமா? என்ற பயத்தோடு தான் உண்மையான இறை
நம்பிக்கையாளன் ஒவ்வொரு நேரத்தையும் கழிப்பான். அல்லாஹ்வை அஞ்சி அவனை நினைத்துப்
பார்த்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடான கோடி மக்களை
நினைத்துப் பார்த்து வடிக்கும் கண்ணீர் துளிகளை இஸ்லாம் நன்மைக்குரியதாக கருதுகிறது. இந்த
கண்ணீர்த்துளிகள் மறுமையில் அல்லாஹ்விடத்தில் சாட்சியாக வரும்

""அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர் கறந்த பால் மடுவுக்குள் மீண்டும் நுழையும் வரை
ஒரு போதும் நரகில் நுழையமாட்டார், அல்லாஹ்வின் பாதையில் படிந்த புழுதியும் நரகப்புகையும்
இணைந்திடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                   நூல் : திர்மிதி 1633

நன்றி;அல்ஜன்னத்.

கருத்துகள் இல்லை: