அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஞாயிறு, 6 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 9]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

2002 ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு தனவந்தர், பீஜெயாகிய தனக்கு நியாஸ் ஹாஜியார் என்பவர் மூலமாக ஐந்து லட்சம் தர முன் வந்ததாகவும், அந்த தனவந்தரை எனக்குத் தெரியாது. எனவே நான் மறுத்து விட்டதாக சொல்லி விடுங்கள் என்று நியாஸ் ஹாஜியாரிடம் சொன்னதாகவும், ''ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்ற தொடரில் பீஜே கூறியுள்ளார். 

இதில் கவனிக்க வேண்டியது, ஐந்து லட்சத்தை தான் ஏற்க மறுப்பதற்கு காரணம் வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற எனது கொள்கைதான் என்று பீஜே சொல்லவில்லை. தனக்கு ஐந்து லட்சம் தர முன் வந்த அந்த தனவந்தர் யாரென்று எனக்குத் தெரியாது. எனவே எனக்கு வேண்டாம் என்றுதான் பீஜே காரணம் சொல்கிறார். அப்படியானால் அந்த தனவந்தர் தெரிந்தவராக இருந்திருந்தால் வாங்கியிருப்பார்தானே? 

சரி. வெளிநாட்டு நிதி கூடாது என்ற கொள்கை இவர் ஜாக்கில் இருந்து கழன்ற காலத்திலேயே, அதாவது தவ்ஹீத் பிரச்சாரக்குழு உருவான காலத்திலேயே இவர் உருவாக்கிக் கொண்டதாகும். அப்படியானால் தான் மட்டும் வெளிநாட்டு நிதி வாங்காமல் இருந்தால் மட்டும் போதாது. வேறு யாருக்கும் வாங்கிக் கொடுக்கவோ, பரிந்துரை செய்யவோ கூடாது. அப்போதுதான் இவர் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று அர்த்தம். இந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து வந்த அந்த ஐந்து லட்சத்தை இவர் திருப்பி அனுப்பியிருந்தால், உண்மையில் இவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர் என்று அர்த்தம். ஆனால் இவரோ கடையநல்லூரில் இயங்கும் ததஜ  சார்பு நிறுவனமான இஸ்லாமிய கல்லூரிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்கிறார். இதிலிருந்து இவரது வெளிநாட்டு நிதிக் கொள்கையின் லட்சணம் தெரியவில்லையா? 

இப்போது பீஜே சொல்லலாம். இஸ்லாமியக் கல்லூரி என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவைப் பெற்றது தானே தவிர, தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமானதல்ல என்று. ஏற்கனவே காயல்பட்டினம் இஸ்லாமியக் கல்விச் சங்கம் விசயத்தில் இப்படி இவர் சொன்னவர்தான். பின்பு நாம், இஸ்லாமிய கல்விச் சங்கம் ஹாமித்பக்ரிக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவரது இன்றைய ஜமாஅத் நிர்வாகிகள் பலர் அந்த சங்கத்தின் அங்கம் என்று பட்டியலிட்டோம். அதை பீஜெயால் மறுக்கமுடியவில்லை. அதே போல் இந்த இஸ்லாமியக் கல்லூரி வெறுமனே ஜமாஅத் ஆதரவு பெற்ற நிறுவனம் மட்டுமல்ல. முழுக்க முழுக்க ஜமாஅத்தின் தூண்கள் அங்கம் வகிக்கும் நிறுவனமாகும்.

இஸ்லாமியக் கல்லூரி சம்மந்தமான விபரங்கள்;

இக்கல்லூரிக்காக உருவாக்கப்பட்ட டிரஸ்டின் பெயர்; இஸ்லாமிய அறக்கட்டளை.

இந்த டிரஸ்டின் அங்கத்தவர்கள்;
 1. எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா.
 2. ஹாமித்பக்ரி.
 3. அப்துல் ஜலீல் மதனீ.
 4. சம்ஷுல்லுஹா.
 5. முஹம்மது அலி ரஹ்மானி.
 6. ஜே.எஸ்.ரிபாயி.
 7. டி.எம்.ஜபருல்லாஹ்.
 8. அப்துரரஹ்மான் பிர்தவ்சி.
 9. எம்.ஐ.ஸுலைமான்.
 10. எம்.எஸ்.ஸுலைமான்.
 11. அலிஅக்பர் உமரி.
இந்த டிரஸ்டிகளில் இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பலர் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதில் தமுமுக பிரிவின் பின்னால் ரிபாயி போன்ற சிலர் விலகிய பிறகு, பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான கலீல்ரசூல், அன்வர்பாஷா உள்ளிட்டோர் டிரஸ்டிகளாக சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் அன்றும், தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகள் தான் படம் நடத்தினர்கள். நிர்வாகம் செய்தார்கள். இன்றும் இந்த கல்லூரி ததஜ மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா தலைமையில், ஜமாத்தின் கல்லூரி போலவே செயல்படுகிறது. மேலும், இந்த இஸ்லாமிய அறக்கட்டளை டிரஸ்டை ஜமாஅத்தில் சேர்க்கவேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, அதை சைபுல்லாஹ் நீங்கலாக , அனைவரும் எதிர்த்தார்கள். குறிப்பாக கலீல்ரசூல் கடுமையாக எதிர்த்தார். அதன் பின்னால் பீஜே தலைமையில் நடந்த பிறிதொரு அமர்வில், ஜமாஅத்தின் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இக்கல்லூரி ஜமாஅத்தின் அதரவு பெற்ற கல்லூரியாக அவதாரம் எடுத்தது.
 1. இக்கல்லூரியின் பாடத்திட்டம் ஜமாஅத் தான் தீர்மானிக்கும்.
 2. இக்கல்லூரியில் மாணவர் சேர்க்க; நீக்கம் ஜமாஅத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
 3. கணக்கு வழக்குகளில் ஜமாஅத் தலையிடும்.
உள்ளிட்டவைகள் முக்கிய நிபந்தனைகளாகும். மேலும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான பல லட்சங்கள் மதிப்புள்ள ஒரு சொத்து இன்றைக்கு ததஜ கைவசம் உள்ளது. இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அது தனி நிர்வகம்மா; அதுக்கும் ஜமாத்துக்கும் சம்மந்தமில்லம்மா; என்று பீஜே ஜகா வாங்குவார் என்பதற்காகத் தான்.

இப்போது சொல்லுங்கள். பீஜே வெளிநாட்டு நிதியில் யோக்கியராக இருந்தால், அந்த நிதியை திருப்பி அனுப்பாமல், ஜமாஅத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு கல்லூரிக்கு வாங்கிக் கொடுத்தது ஏன்? பேங்கில் நாம் போடும் பணத்திற்கு வரும் வட்டியை வாங்கி, வேறு நற்காரியத்திற்கு பயன்படுத்தினால் கூட ஹராம் என்று பத்வா வழங்கும் பீஜே, தான் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக அதே வெளிநாட்டு நிதியை தனது ஜமாஅத் மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு வாங்கித் தந்தது முரண்பாடில்லையா? [குறிப்பு; வட்டியை இங்கே உதாரணத்திற்குத்தான் காட்டியுள்ளோம். அதை நாம் சரிகானவில்லை. எனவே அதை வைத்து ஹலால்- ஹராம் என பீஜே திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்]

மேலும், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பணிகளுக்காக ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா ஆகியோர் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்தார்கள். அது தனி நிறுவனமாக இருந்தாலும், இவ்விருவரும் ஜமாஅத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் தான் வசூலிக்கிறது என்ற தோற்றம் வரும் என்று நான் தடுத்து விட்டேன் என்று கூறும் பீஜே, அதே முக்கிய நிர்வாகிகளான ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும், லுஹாவும், இரண்டு சுலைமாங்களும், பிர்தவ்சியும், கலீல் ரசூலும், அன்வர்பாஷாவும் அங்கம் வகிக்கும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு தானே முன் வந்து வெளிநாட்டு நிதியை பெற்றுத் தருகிறார் என்றால், இப்போது ஜமாஅத்தின் கொள்கை பாதிக்கப்படாதா? ஜமாஅத் பெயரில் வாங்கினால் தவறு. ஜமாஅத் நிர்வாகிகள் தனியாக கூடி ஒரு டிரஸ்டை உருவாக்கி அதற்காக வாங்கினால் தவறில்லையோ? மேலும், இஸ்லாமிய அறக்கட்டளை வெளிநாட்டு நிதி பெறலாம் என்றால், இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்ததை தடுத்தது பீஜேயின் மாற்றாந்தாய் மனப்பான்மையில்லையா? 

இதையொட்டி நாம் கேட்பது;
 1. வெளிநாட்டு நிதி ஜமாஅத் பெயரால் பெறக்கூடாது என்றால், ஜமாஅத் நிர்வாகிகள் தனிக்கடை போட்டு வசூலிக்கலாமா? அதற்கு பீஜே துணை நின்றது அவரது கொள்கைக்கு முரணில்லையா? பீஜேயின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், அவரது ஜமாஅத் நிர்வாகிகள், வெளிநாடுகளில் ஜமாஅத்திற்காக இல்லாமல் துணை நிறுவனங்களை ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாமா?
 2. ஜமாஅத் சம்பளம் கொடுக்க கூட முடியாமல் திணறியபோது, ஹாமித்பக்ரி இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்காக வசூல் வேட்டையாடினார் என்று குமுறிய பீஜே, அதே காலகட்டத்தில் ஒரு பெருந்தொகையை இஸ்லாமிய அறக்கட்டளைக்கு பெற்றுத்தந்தது முரண்பாடில்லையா? 
 3. வெளிநாடுகளில் நாமாகப் போய் வசூலிக்கக் கூடாது. வெளிநாட்டினர் தாமாக தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றால், இதுவரை எத்தனை கோடிகள் வெளிநாட்டவரிடம் இருந்து ஜமாத்திற்காக வாங்கப்பட்டது என்று பீஜே சொல்லுவாரா?
 4. இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதன் பெயரால் இயங்கும் இஸ்லாமியக் கல்லூரிக்கும், அதன் சொத்துக்களுக்கும் ஜமாத்திற்கோ, தனக்கோ சம்மந்தமில்லை என்று கூறுவரா? அதன் சொத்து ஆவணங்களை ஜமாஅத் வாங்கி வைத்திருப்பது எதற்காக என்று கூறுவாரா?
 5. ஜமாத்திற்கு சம்மந்தமில்லை என்று பீஜே கூறினால், சென்னை களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இரு தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளை உடனடியாக நிறுத்தியது போல், இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர், முதல்வர், ஆசிரியர்கள் என வியாபித்திருக்கும் தனது ஜமாத்தினரை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்லுவாரா? 
 6. இஸ்லாமியக் கல்லூரி சரியென்றால், அதில் தனது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கம் வகிக்கலாம் என்றால், அதற்காக வெளிநாட்டு நிதியும் பெறலாம் என்றால், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கமும் சரிதான் என்றும், அதற்காக வெளிநாட்டு நிதி பெறலாம் என்றும், அதை ஹாமித்பக்ரி மீதான காழ்ப்புணர்வில் தான் எதிர்த்தேன் என்றும் பீஜே சொல்லுவாரா?
 7. ஹாமித்பக்ரியின் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இன்றும் அண்ணனின் அபிமானியாக இருக்கும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்ட அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயிகள் சிலர் சம்பளம் பெற்றது எதற்காக என்று பீஜே சொல்லுவாரா? 
 8. இலங்கை வெளிநாடு இல்லை என்றோ, அந்த நாட்டின் பணம் அன்னிய நிதியில்லை என்றோ, தனது கொள்கை அரபு நாட்டு நிதிக்கு மட்டும் தான் என்றோ பீஜே சொல்லுவாரா?
வெளிநாட்டு நிதியும், பீஜேயின் அப்பட்டமான பொய்களும் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்....

கருத்துகள் இல்லை: