அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 16 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முன்னுரை; அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயின் அன்றும் இன்றும் உள்ள நிலைப்பாடுகளையும், அயல்நாட்டு நிதி பிரச்சினையில் அவர் அடித்து விடும் அப்பட்டமான பொய்களையும் அலசிவரும் இந்த தொடரில், இதுவரை அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அவரது இப்போதைய நிலைப்பாடு அவரது தீர்ப்புக்கே மாற்றமாக அவரது மனோ இச்சை முடிவு என்பதையும், தானும் தனது ஜமாத்தும் வெளிநாட்டு நிதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரால் ஹாமித்பக்ரியும், சைபுலாஹ்வும் தான் வசூல் வேட்டையாடினார்கள் என்ற அவரது பொய்யை உடைக்கும் வகையில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர்கள் யார் யார் என்பதை பட்டியலிட்டதோடு, அந்த சங்கத்திற்கும் பீஜெயுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினோம். அந்த சங்கம் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினோம். 

இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிகொள்வதற்கு காரணமாக அமைந்த அபூதாவூத் மொழிபெயர்ப்பு குறித்த அவரின் அப்பட்டமான பொய்யைப் பார்ப்பதற்கு முன்னால் ஏற்கனவே கேட்ட ஒரு கேள்வியை பீஜெயிக்கு மீண்டும் வைக்கிறோம்.அதற்கு அவர் பதில் சொல்லியாகவேண்டும்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்று சொன்னீர்களே! அந்த இருவர் யார்? 
 
அபூதாவூத் விசயத்தில் பீஜே சொல்வது என்ன? 

ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் அரபுநாடுகளுக்கு சென்றனர். அங்கு மக்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அதாவது நாங்கள் ஹதீஸ் நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். அதில் நீங்கள் ஷேர் சேர்ந்தால் நல்ல லாபத்துடன் முதலீட்டை திரும்பத்தருவோம் என்று சொல்லி நிதி திரட்டினார்கள். அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதன்மை நிர்வாகிகளாக இருந்தாலும் மற்ற நிர்வாகளிடமோ மூத்த அறிஞர்களிடமோ அவர்கள் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அவர்கள் வெளியிடப்போவதாகவும் அவர்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வெளியிடப்போவதாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி நிதிகளை திரட்டினார்கள்.

இப்படி பங்கு சேர்த்து பல மாதங்கள் ஆன பின்னும் நூல் வெளியிடும் எந்த முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. பங்கு சேர்ந்தவர்கள் என்னிடமும் லுஹாவிடமும் தொலைபேசி வழியாகவும், எழுத்து மூலமாகவும் புகார்களை அனுப்பினார்கள். உடனடியாக நிர்வாகக்குழுவை கூட்டி ஹாமித்பக்ரியிடமும் சைபுல்லாஹ்விடமும் விளக்கம் கேட்டோம். யாரை கேட்டு ஷேர் சேர்த்தீர்கள்? நீங்கள் இருவரும் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்துகொண்டு இப்படி நிதி திரட்டுவது ஜமாஅத்தின் செயலாக பார்க்கப்படாதா? சரி! பணம் திரட்டி வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் எந்த நூலையும் வெளியிட முயற்சி செய்யாமல் இருப்பது ஏன்? உடனடியாக ஷேர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று பீஜெயாகிய நான் வற்புறுத்தினேன். ஆனால் அதிகமான நிர்வாகிகள் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம்; உடனே ஹதீஸ் நூலை வெளியிட்டு இவ்விருவரும் கொடுத்த வாக்கை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என்று சொன்னதால் இவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.

இவர்கள் சொன்னபடி அபூதாவூதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அபூதாவூத் 300 ஹதீஸ்களை லுஹா மொழிபெயர்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்களை மொழிபெயர்த்து 1000 ஹதீஸ்களாக வெளியிட எவ்வளவு நாள் தேவைப்படும் என்று லுஹாவிடம் கேட்டபோது தனக்கு ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்று கூறிவிட்டார். அப்படியானால் இன்னும் தாமதப்படும் மக்களிடம் இன்னும் கெட்டபெயர் ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் கருதினார்கள். நான் திரிமிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன். பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்.
மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப ஷேர் போட்டவர்களுக்கு பணத்தை ஜமாஅத் வழங்கும் என்று நிபந்தனை விதித்தோம்.

மேலே நீங்கள் படித்தது அபூதாவூத் வெளியீடு குறித்த பீஜேயின் வர்ணனையாகும். இதில் முதலாவதாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஹாமித்பக்ரியும்-கைவிட்ட தமுமுகவும் என்ற ஒரு நீண்ட தொடரை எழுதிய பீஜே, அபூதாவூத் வெளியிடுவதற்காக ஹாமித்பக்ரிதான் ஷேர் சேர்த்தார் என்று முழுக்க முழுக்க ஹாமித்பக்ரியை சாடியிருந்தார். அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை குறிப்பிடவில்லை. பார்க்க; 

அப்போது சைபுல்லாஹ்வை சேர்க்காததற்கு காரணம் அவர் அன்று ஜமாஅத்தில் இருந்தார். இப்போது ஷேர் மோசடி என்று இவரால் கூறப்படும் இதில் சைபுல்லாஹ் அவர்கள் பெயரை இணைப்பதற்கு காரணம் அவர் இப்போது ஜமாஅத்தில் இல்லை. ஆக இவரது ஜமாஅத்தில் இருந்தால் இவரே மோசடி என்று சொல்லும் ஒரு திட்டத்தின் பங்குதாரரை மறைத்து காப்பாற்றுவார். இவரை விட்டு வெளியேறினால் அவரை மோசடியாளராக அடையாளம் காட்டுவார் என்பதற்கு இது ஒரு சான்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் அபூதாவூத் ஷேர் சேர்த்தது தனக்கோ ஏனைய நிர்வாகிகளுக்கோ தெரியாது. எங்களிடம் அவர்கள் அனுமதி வாங்கவில்லை. பின்னர் இதுபற்றி மக்கள் புகாரளித்த பின் தான் அவர்கள் இருவரையும் நிர்வாகக்குழுவில் சங்கைப்பிடித்தோம் என்று சளைக்காமல் சரடு விடுகிறார் பீஜே. ஆனால் இவ்விருவரும் வெளிநாட்டில் ஷேர் வசூலிக்கும் காலத்திலேயே இவருக்கு இந்த விஷயம் தெரியும் என்பதற்கு அவரது வாயாலேயே அல்லாஹ் வாக்குமூலம் கொடுக்க வைத்த அற்புதம் பாரீர்;

ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற இவரது தொடரில், ''இதுபோல் வெளிநாடு சென்று ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடப்போகிறேன் ஷேர் தாருங்கள். லாபம் தருகிறேன் என்று பல லட்சங்கள் திரட்டினார். என்னிடம் தொலைபேசியில் கேட்டவர்களுக்கு, யாரும் இதில் சேரவேண்டாம் என்று கூறினேன்.'' என்று பீஜே கூறுகிறார்.

இதன் மூலம் அபூதாவூத் வெளியிடுவது தாமதமான பின்னர், புகார் வந்த பின்னர் தான் தனக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிய வந்தது போல் பீஜே சொல்லியது அப்பட்டமான பொய்யல்லவா? தன்னிடம் போனில் கேட்டவர்களை இதில் ஷேர் சேராதீர்கள் என்று பீஜே சொன்னதற்கு காரணம், ஹாமித்பக்ரி மோசடியாளர் என்பதால்தான் என்றால், ஹாமித்பக்ரியின் இந்த மோசடியிலிருந்து ஏனைய மக்களையும் காக்கும் வகையில், ஹாமித்பக்ரி ஷேர்  கேட்டால் கொடுக்காதீர்கள் என்று இவர் அந்த வெளிநாட்டு கிளைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாதது ஏன்? ஷேர் வசூலித்த ஹாமித்பக்ரியை தொடர்பு கொண்டு இந்த ஷேர் நீங்கள் பிடிக்கக் கூடாது; மீறி பிடித்தால் ஜமாஅத் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லாதது ஏன்? சரி! இவர் கூற்றுப் பிரகாரம் ஹாமித்பக்ரி பல லட்சங்கள் அள்ளிக் கொடுவந்தாரே! வந்த பின்னால், ஏங்க பக்ரி! இந்த ஷேர் கலெக்ட் பண்ணீங்களே! அது என்ன ஆச்சு? ஏன் இன்னும் நூலை வெளியிடவில்லை? அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்று பீஜே கேட்காதது ஏன்? மக்கள் புகார் வரும்வரை வாய்மூடி மவுனம் காத்தது ஏன்? நிர்வாக்குழு கண்டிப்பதற்கு முன்பே நான் இதுபற்றி கேட்டேன் என்று பீஜே இப்போது சொன்னாலும் மாட்டிக்கொள்வார். 

அடுத்து, அபூதாவூத் விசயத்தில் ஹாமித்பக்ரி வசூலித்தது எவ்வளவு என்று பீஜெயிக்கு தெரியாது என்றால், அது எத்தனை லட்சங்கள் என்று எனக்கு தெரியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தொடரில், ''பல லட்சங்கள்; பத்துலட்சத்திற்கு மேல் என்று கூறுகிறார். உணர்வு 16;3௦ ல், சில லட்சங்கள் அது இப்போது எனக்கு நினைவில் இல்லை என்கிறார். பல லட்சங்களா? சில லட்சமா? இது போகட்டும்.

அபூதாவூத் பிரச்சினையில் மக்கள் புகாரளித்த பின் தான் லுஹாவை அணுகி ஆயிரம் ஹதீஸ் கேட்டதாகவும் அவர் ஆறுமாதம் ஆகும் என்றதாகவும் ஒரு செய்தியை சொல்கிறார் பீஜே. ஆனால் உண்மை என்ன? மேலப்பாளையம் வழக்கு ஒன்றில் சிறைமீண்ட லுஹா, தான் மொழிபெயர்த்த அபூதாவூத் ஹதீஸ் இத்தனை வைத்துள்ளேன் என்று ஹாமித்பக்ரியிடம் சொன்ன பின் தான் அபூதாவூத் வெளியிடும் திட்டமே தீட்டப்படுகிறது. அதற்காக ஷேர் பிடிக்கப்படுகிறது. அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின் தான் லுஹாவை அணுகியதாக பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பிரச்சினை வந்த பின்பு கூட என்னால் முடியாது; இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று கூறிய லுஹா, இந்த பணிக்காக என்று ஒப்புகொண்டுஒரு லட்சம் வாங்கியது எதற்காக என்று கூறுவரா? நான் ஒரு லட்சம் வாங்கவில்லை என்று லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா? 

ஆக ஹாமித்பக்ரி அபூதாவூத் வகைக்காக ஷேர் பிடித்தது உண்மை. அதற்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் தந்து அதை வெளியிட முயற்சி செய்தது உண்மை. இதை மறைத்து ஹாமித்பக்ரி ஏதோ அந்த லட்சங்களை முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டது போல் பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யாகும். இறுதியாக, இதுவரை நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பீஜே பதிலளிக்க வேண்டும்.

இதே அபூதாவூத் விசயத்தில் பீஜேயின் பல ஆண்டு நாடகங்கள்;
1991 லேயே அபூதாவூத் தயார் நிலையில் உள்ளதாக கூறும் பீஜே, அந்த அபூதாவூத் மாயமாய் மறைந்த ரகசியத்தை கொஞ்சம் மக்களுக்கு சொல்வாரா?

அடுத்து வருவது;
திர்மிதி வெளியீட்டில் பீஜேயின் நம்பிக்கைத் துரோகங்கள்.

திரிமிதியின் திரை மறைவு பணப் பரிமாற்றங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.கருத்துகள் இல்லை: