அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 4]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயை நோக்கி,

அன்று குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் வெளிநாடு நிதி கூடும் என்றீர்கள். இன்று அந்த வசனத்திற்கு மாற்றமாக மனோஇச்சையை சட்டமாக்கி முரண்பட்டது ஏன் என்று கேட்டோம். 

குர்ஆன் அனுமதி அடிப்படையில் வெளிநாட்டு நிதி பெறுபவர்களை அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது சரியா? என்று கேட்டோம்.

இஸ்லாமிய கல்விச் சங்கம் தான் வசூல் செய்தது. எனக்கோ தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்று பீஜே சொன்னதற்கு, இஸ்லாமிய கல்விச் சங்கம் விசயத்தில் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டோம். இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் மட்டும் தான் என்று பீஜே சொல்லத்தயாரா? என்று கேட்டோம்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்ற பீஜேயின் வாதத்தை வைத்து அந்த இருவரின் பெயரை பீஜே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டோம்.

இன்னும் இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பீஜேயை நோக்கி நாம் எழுப்பியும் அவர் அசையாமல் இருப்பதின் மூலம் வெளிநாட்டு நிதி விசயத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற சங்கம் இவர் ஆதரவுடன் வசூல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

வெளிநாட்டு நிதி வசூலித்தது ஹாமித்பக்ரிக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம்தான் என்று சொன்ன பீஜே, பிறகு அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் ஒரு அங்கம் என்றார். அப்போது நாம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இவ்விருவரைத் தாண்டி வேறு யாரும் இருக்கவில்லையா என்று கேட்டோம். அதற்கு பீஜே பதிலளிக்காததால், இப்போது நாமே இஸ்லாமிய கவிச் சங்கத்தின் அங்கத்தினர்களாக இருந்து இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலரை அடையாளம் காட்டுகிறோம்.

  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு தலைவராக வீற்றிருக்கும் சம்சுல்லுஹா ரஹ்மானி.
  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு உறுப்பினராக வீற்றிருக்கும் எம்.எஸ்.ஸுலைமான்.
  • இன்று பீஜேயின் தணிக்கைக் குழு தலைவராகவும், வருங்கால செயல் தலைவராகவும் அரியணை ஏறவுள்ள எம்.ஐ.ஸுலைமான்.

இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்கள் பட்டியல் இங்கே தேவையில்லை என்பதால் வெளியிடவில்லை. ஆக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்கு மட்டுமே சொந்தமாக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது அப்பட்டமான பொய் என்பதை, அவரது இன்றைய சகாக்கள் அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் என்பதன் மூலம் நிரூபித்துள்ளோம். 

இந்த லட்டர் பேடு சங்கத்தின் மூலம் ஹாமித்பக்ரி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். அது நிர்வாகிகளுக்கு தெரியவந்தபோது, நானும்[பீஜே] சைபுல்லாஹ்வும், லுஹாவும், அலாவுதீனும் அடங்கிய குழுவில் அவரை கண்டபடி கண்டித்தோம் என்று பீஜே சொன்னாரே! அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் எப்படி ஹாமித்பரியை கண்டிக்க முடியும் என்று ஏற்கனவே கேட்டோம். இப்போது அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான லுஹா எப்படி ஹாமித்பக்ரியை கண்டிக்க முடியும் என்பதற்கும் பீஜே பதில் சொல்லட்டும். ஹாமித்பக்ரியின் வசூல் மோசடிக்கும், அந்த சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ், லுஹா, எம்.ஐ.ஸுலைமான், எம்.எஸ். ஸுலைமான் ஆகியோருக்கும் சம்மந்தமில்லை என்று பீஜே மறுப்பாரா? அந்த சங்கத்தின் தலைவரான ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்தார் என்பது உண்மை என்றால், அந்த மோசடி சங்கத்தில் அங்கம் வகித்த இவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன? ஆக பலர் அங்கம் வகித்த கூட்டு நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற முயற்சித்தார்கள். ஆனால் அவ்விருவர் மட்டும் இன்று பீஜெயோடு இல்லாத காரணத்தால், அவ்விருவர் மீது மட்டும் பழிபோட்டு இப்போது தன்னோடு இருக்கும் மற்ற சகாக்களை காப்பாற்ற நினைக்கிறார் பீஜே.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பேச்சுக்கு ஹாமித்பக்ரி செய்த வசூல் மோசடி, சைபுல்லாஹ், லுஹா, இரண்டு சுலைமான்களுக்கு தெரியாமல் நடந்தது என்றே வைத்துக் கொண்டாலும் இந்த வசூல் விவகாரம் தெரிந்தவுடன் இவர்கள் எல்லாம் இந்த சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்கள் என்று பீஜே சொல்லுவாரா? ஹாமித்பக்ரி இந்த சங்கத்தை கலைத்து விட்டு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பணியை மட்டும்பார்த்தார் என்று பீஜே சொல்வாரா? 

இதையும் தாண்டி சொல்கிறோம். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா, இரண்டு சுலைமான்கள், லுஹா ஆகியோர் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் அங்கம் வகித்தது போல் அதே காலகட்டத்தில் தமுமுகவிலும் அங்கம் வகித்தார்கள். அதுவும் மேல் மட்ட அங்கத்தினர்களாக. தலைமைக்கழக பேச்சாளர்களாக. தமுமுக அந்த காலகட்டத்தில் ஒரு வெளிநாட்டு நிதி வசூலித்தால் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் சொல்லமுடியுமா? அவ்வளவு ஏன்? இன்று த த ஜமாஅத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள், இந்த ஜமாஅத் வெளிநாட்டு நிதி வாங்கியதை நிரூபித்து விட்டால், அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் நழுவமுடியுமா? இன்னும் தெளிவாக சொல்வதனால் ஜமாஅத் என்பது பரந்து விரிந்த உறுப்பினர்களை கொண்டது. ஆனால் இஸ்லாமிய கல்விச் சங்கமோ குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை கொண்டது. அந்த சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் பொறுப்பாளியாவார்.

எனவே இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதியோ, உள் நாட்டு நிதியோ வசூலித்தது மோசடி என்றால் அது ஹாமித்பக்ரி என்ற தனிமனிதனை மட்டும் சாராது. மாறாக பீஜேயின் இன்றைய சகாக்கள் உட்பட அனைவரும் அதில் பங்காளிகள் என்பதும், இந்த பங்காளிகளை தனது பங்காளிகளாக கொண்ட பீஜேயும் இந்த மோசடியில் ஒரு பங்காளி என்பதும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகும். 

அடுத்து வருவது;

இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் ஊதியம் பெற்ற அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயி.

அபூதாவூத் மொழிபெயர்ப்பு; அவிழப்போகும் முடிச்சுகள்.

திர்மிதி வெளியீடு; பீஜேயின் தியாகமா? திரைமறைவு பணப் பரிமாற்றங்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில்.

கருத்துகள் இல்லை: