அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 23 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 2]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் அன்று ஆகுமானது என்று சொன்ன பீஜே அவர்கள், இன்று மனோஇச்சை பாலிஸி பேசி வெளிநாடு நிதி பெறமாட்டோம் என்று சட்டம் போட்டுக்கொண்டு தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தை பின்பற்றச் செய்கிறார் இது முரணில்லையா? என்று கேட்டோம். இன்றுவரை இதற்கு பீஜே பதில் சொல்லவில்லை. 

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வஹீ அடிப்படையிலான கட்டளைகளை மட்டுமே பின்பற்றுவோம். அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் சொன்னதை ஏற்கமாட்டோம் என்று சொன்ன பீஜே, அல்லாஹ்வின் வஹீ அடிப்படியில் ஆகுமான ஒன்றை, இவரது சொந்த கற்பனையில் உதித்த சட்டங்களை சொல்லி புறந்தள்ளுவது மட்டும் முரணில்லையா? என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. 

மார்க்க அடிப்படையில் ஆகுமான நிதியை, அதுவும் ஆகுமானதுதான் என்று இவரே ஒத்துக்கொண்ட நிதியை பெற்று நலப்பணிகள் செய்பவர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று இவர் விமர்சிப்பது சரியா என்று கேட்டோம். பீஜே பதிலளிக்கவில்லை. ஆனால் பீஜேயாகிய நீங்கள் அரபு நாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்று ஒரு சகோதரர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்துள்ளார். இதிலிருந்து தான் முரண்பட்டு நிற்பதை அவரே ஏற்றுக்கொண்டு விட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

உணர்விலும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், நீங்கள்[பீஜே] அரபுநாட்டில் பணம் வசூலித்தீர்களா? என்ற கேள்வி-பதிலை பதிவு செய்துள்ள பீஜே, வழக்கம் போல இதிலும் முரண்பட்டு தன்னை அடையாளம் காட்டத் தவறவில்லை. அதைப் பார்ப்பதற்கு முன்னால் அந்த பதிலில், ''அரபுகளிடம் வசூல் செய்ய நான் ஆட்களை அனுப்பினேன் என்பதும், திர்மிதி நூலுக்கு அரபுமொழியில் மதிப்புரையும் முன்னுரையும் வாங்கினேன் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே பதிலளித்ததும் புளித்துப் போனதுமாகும்.''' என்று கூறியுள்ளார். ஒரு விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்டவர் பதிலளித்த பின்பும் அதை மறுநாளோ அல்லது மறு வாரமோ, மறு மாதமோ, மறு ஆண்டோ கிளப்புவது புளித்துப் போன விஷயம் என்றால், அதே உணர்வில் இவர் பதிலளித்த அதே எடிசனில் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ் சம்மந்தமாக ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனத்திற்கு சம்மந்தப்பட்ட பாக்கரும்-ஜவாஹிருல்லாஹ்வும் முன்பே பதிலளித்துள்ள நிலையில், மீண்டும் கிளப்புவது மட்டும் புளித்துப் போனதாக இவருக்குத் தெரியவில்லையா? உணர்வில் மட்டுமல்ல. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் மேற்கண்ட இருவர் பற்றி இவராலும், இவரது ஜமாத்தினராலும் அந்த விமர்சனம் வைக்கப்படுகிறதே. அப்படியானால் இவர்களுக்கு மட்டும் இன்னும் புளிப்புத் தட்டவில்லையா? அல்லது அடுத்தவர் பற்றிய விமர்சனத்தை நான் ஆயுளுக்கும் செய்வேன்.ஆனால் என்னைப் பற்றிய விமர்சனத்தை நான் பதில் கொடுக்கும் பதிலை ஏற்றுக் கொண்டு உடனே கைகழுவி விடவேண்டும் என்கிறாரா? ஒரு விமர்சனத்திற்கு பதில் கொடுப்பது மட்டும் போதுமானதன்று. கொடுக்கும் பதில் வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைத்து நொறுக்கும் வகையில் இருக்கவேண்டும். அப்படி இல்லாத நிலையில் அறிஞர் பீஜேயின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் 'கை நிறைய கழுதை விட்டை' என்றாகிவிடும். அந்த வகையில் தான் பீஜே குறித்த விமர்சனங்களுக்கு அவரால் அளிக்கப்படும் பதில்கள் இருக்கின்றன. எனவே தான் அவரைப்பற்றிய விமர்சனங்கள் புதிய புதிய கோணங்களில் அவரைத் தாக்குகின்றன என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாத ஒரு நிறுவனம் என்று காட்டுவதற்காக கடும் பிராயசித்தம் செய்து முயற்சித்துள்ளார் பீஜே. இந்த இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் பீஜேயின் முரண்பட்ட கருத்தை முதலில் பார்ப்போம். 'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்று ஒரு நீண்ட கட்டுரையை தனது இணையதளத்தில் 19 .10 .2010 அன்று வெளியிட்டார். அதில், 

''ஆனால் இவர்[ஹாமித்பக்ரி] தவ்ஹீத் ஜமாத்திற்கு தலைவராக இருந்துகொண்டே, இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில் லட்டர் பேட் அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக தமிழகம் முழுக்க வசூல் வேட்டையில் இறங்கினார். சம்பளம் கொடுக்கக் கூட நிதி இலலமல் தவ்ஹீத் ஜமாஅத் தள்ளாடும் நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை தனது லட்டர் பேடு சங்கத்திற்கு நிதி திரட்ட பயன்படுத்திக் கொண்டார். தனக்கு மட்டுமே சொந்தமான லட்டர் பேட் இயக்கத்தின் பெயரால் எவ்வளவு நிதி திரட்டினாலும்  யாரும் அதைக் கேட்க முடியாது என்பதுதான் இதற்கு காரணம்.'''என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக கவனியுங்கள். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான ஹாமித்பக்ரி அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்துகொண்டே தனக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற லட்டேர்பேடு சங்கத்தை உருவாக்கி, தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை பயன்படுத்தி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். தனக்கு மட்டுமே சொந்தமான இயக்கம் என்பதால் யாரும் நம்மிடத்தில் கேளிவி கேட்க முடியாது என்ற துணிவில் ஹாமித்பக்ரி இப்படி வசூல்வேட்டை நடத்தினார் என்பது மேற்கண்ட பீஜேயின் வாக்குமூலம் சொல்கிறது.  இந்த வாக்குமூலம் வாயிலாக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது மோசடி வசூல் செய்வதற்காக ஹாமித்பக்ரி தனக்கு மட்டும் சொந்தமாக உருவாக்கிக் கொண்ட ஒரு சங்கம் என்று பீஜே கூறுகிறார். இதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு அடுத்த செய்திக்கு வாருங்கள்;

'ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்'  என்ற அதே கட்டுரையில், ''இந்த விஷயம் [ஹாமித்பக்ரியின் வசூல் மோசடி] தெரிந்தவுடன் அவரை [ஹாமித்பக்ரியை] தமுமுக அலுவலகத்திற்கு அழைத்து நான், லுஹா, சைபுல்லாஹ் ஹாஜா, அலாவுதீன் அடங்கிய குழுவில் கடுமையாக விசாரணை  நடத்தினோம்.  ஜமாஅத்தின்  பெயரால்   கள்ள வசூல் செய்வதற்கா உம்மை தலைவராக நாங்கள்  நியமித்தோம்? என்று கடுமையாக கண்டித்தேன். எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகத்தை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தோம். என் வாழ்நாளில் நான் அதிகமாக கோபப்பட்ட சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று என்கிறார் பீஜே

பீஜேயின் இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்றை ஹாமித்பக்ரி அவர்கள் தொடங்கியதே இவருக்கு தெரியாதது போன்றும், அந்த சங்கத்தின் பெயரால் தமிழகம் முழுக்க ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தி அமுக்கியபின் தான் இவருக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரியவந்தது போன்றும் உடனடியாக கண்கள் சிவக்க, லுஹா, சைபுல்லாஹ், அலாவுதீன் போன்ற சகாக்கள் சகிதம் ஹாமித்பக்ரியை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியதாக கூறுகிறார் பீஜே. இதில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தை உருவாக்கி வசூல் மோசடி செய்தது ஹாமித்பக்ரி மட்டுமே என்றும், ஹாமித்பக்ரி மட்டுமே இந்த சங்கத்தின் ஏகபோக உரிமையாளர் என்ற கருத்தையும், ஆழமாக பதிவு செய்கிறார் அறிஞர் பீஜே. இதையும் மனதில் நன்றாக பதிவு செய்துகொண்டு அடுத்து வாருங்கள்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களின் மறுக்கு மறுப்பு என்ற கட்டுரை ஒன்றை பீஜே எழுதுகிறார். அதில், ஹாமித்பக்ரி அவர்கள் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை தனது உணர்வு பதில்கள் பகுதியிலும் பதிவு செய்துள்ளார்.

ஹாமித் பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தனது முந்தைய வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற ஒன்று ஹாமித்பக்ரியின் ஏகபோக நிறுவனம் என்று சொன்ன பீஜே, அந்த ஏகபோக நிறுவனம் சார்பாக ஹாமித்பக்ரி வசூல் வேட்டை நடத்தியபோது, பக்ரியை விசாரணை நடத்திய குழுவில் சைபுல்லாஹ்வும் இருந்தார் என்று சொல்லியுள்ள பீஜே, இந்த வாக்குமூலத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் எனக் கூறியுள்ளார். அப்படியானால் ஹாமித்பக்ரியின் வசூல் மோசடியில் சைபுல்லாஹ்வும் ஒரு அங்கம் என்று ஆகிவிடுமே? பிறகு எப்படி சைபுல்லாஹ் அவர்கள், ஹாமித்பக்ரி மீதான இந்த விசாரணையில் அங்கம் வகிக்க முடியும்? தானும் அங்கம் வகிக்கும் ஒரு சங்கத்திற்காக வசூல் செய்ததற்காக சைபுல்லாஹ் அவர்கள் ஹாமித்பக்ரியை எப்படி கண்டிக்க முடியும்? இஸ்லாமிய கல்விச் சங்கம் வசூல் செய்தது தவறு என்றால், ஹாமித்பக்ரியை கடுமையாக எச்சரித்ததாக கூறும் பீஜே, அதே சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களை பற்றி வாய் திறக்காதது முரணில்லையா? ஹாமித்பக்ரி அவர்கள் தமிழகம் முழுக்க வசூல் செய்தது அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வரா பீஜே? மேலும் இச்சங்கம் வசூல்  செய்தது தவறு என்றால், உடனடியாக இச்சங்கத்தை கலைக்கவேண்டும் என்று ஹாமித்பக்ரிக்கு உத்தரவிட்டாரா பீஜே? இல்லையே? ஹாமித்பக்ரியின் இந்த வசூல் மோசடி சங்கத்தில் இருந்து சைபுல்லாஹ் அவர்களை உடனடியாக விலகச் சொன்னாரா பீஜே? இல்லையே? அப்படியானால் இச்சங்கம் ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்காக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது பொய் என்பது உறுதியாவதோடு, இச்சங்கம் பீஜேயின் பார்வையில்தான் செயல்பட்டுள்ளது. அதை பீஜேயும் அங்கீகரித்துதான் செயல்படச் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. அதோடு இச்சங்கத்தில் ஹாமிபக்ரி, சைபுல்லாஹ் என்ற இரு அறிஞர்கள் மட்டும் தான் அங்கம் வகித்தார்கள் என்று பீஜே சொல்லத் தயாரா? அப்படி பீஜே சொல்லும் பட்சத்தில் இந்த சங்கத்திற்கும், அனைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு இருந்த உறவு சந்தி சிரிக்கும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்து இச்சங்கம் சார்பாக வெளிநாட்டில் வசூல் செய்யப்பட்டதில் பீஜேவுக்கோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ சம்மந்தமில்லை என்ற பீஜேயின் பொய்யை அலசுவதற்கு முன்னால், மேலே நாம் சொல்லியுள்ள பீஜேயின் முரண்பாடுகளுக்கும் பொய்களுக்கும் பீஜே பதில் சொல்லவேண்டும். அடுத்து, அன்பளிப்பு சம்மந்தமான கேள்விக்கு பதில் கூறிய பீஜே அதில், ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்.

தொடரும் அருளாளன் நாடினால்...

கருத்துகள் இல்லை: