அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 19 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
''நல்ல விசயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்[5 ;2 ] என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். சவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

சவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்னதற்கு மாற்றமாக, இன்று 'பாலிசி' பேசி முரண்படுகிறார். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லையே இரண்டாகப் பிரித்து, வஹீ அடிப்படையில் அவர்கள் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றும், நபியவர்கள் நேரம்போகாமல் பேசிய[?]வைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற கொள்கையுடைய அறிஞர் பீஜே, வஹீ அடிப்படையில் வெளிநாட்டு நிதி கூடும் என்று சொன்ன தீர்ப்புக்கு மாற்றமாக, பாலிசி எனும் தனது கருத்தை சட்டமாக்கி அதை தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தின் சட்டமாக்கி, தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களை பின்பற்றச் செய்கிறார் என்ற நமது கருத்துக்கு சம்மந்தப்பட்ட அறிஞர் பீஜே பதில் சொல்லவில்லை. ஆனால் அவரது இயக்கத்தினர் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து நேரடியாக 'பஸ்'ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க மேற்கண்ட அல்ஜன்னத் பதிலில், 
எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்ற தனது கூற்றிற்கு மீண்டும் முரண்பட்டு தான் அப்பட்டமாக பொய் சொல்லும் ஒரு பொய்யர் தான் என்று பீஜே நிரூபிப்பதை கீழே படியுங்கள்;

''இன்னொன்றையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக்கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைபிடித்த கொள்கை அல்ல. ஆரம்பத்தில் ஜாக் இயக்கத்தில் நான் இருந்தபோது, அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் நான் இருந்தேன். நான் என்னளவில் அத்தகைய உதவியை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் சலபிகள் கூட்டத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்த காலகட்டத்தில் எதாவது [வெளிநாடுகளில்] உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.எழுதியும் இருக்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன.கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார். நாளடைவில் பணமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை[ வெளிநாட்டு நிதி] வெறுக்கலானேன். லிங்க்;

மேற்கண்ட பீஜேயின் இந்த வாக்குமூலம் மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கு அவர் எழுதிய மறுப்பில் இருந்து எடுத்ததாகும். இந்த வாக்குமூலத்தில், ஜாக்கில் இவர் இருந்தபோது ஜாக் வெளிநாட்டு நிதியை பெற்றுள்ளது. அதை இவரும் சரிகண்டு அந்த அமைப்பில் இருந்துள்ளார். அந்த ஜாக் வாங்கும் வெளிநாட்டு சல்லிக்காக, இவரும் ஒத்து ஊதும் வகையில் இவருக்குப் பிடிக்காத சலபிக் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். கஷ்டப்படும் பலருக்கு வெளிநாட்டு நிதியை பெற்றுத்தருமாறு கூறியுள்ளார். பல கடிதங்களும் வரைந்துள்ளார். இப்படி தான் வாங்காவிட்டாலும் தனது இயக்கம் வாங்கியதை சரிகண்ட இவர், அதற்காக இவரது கொள்கைக்கு முரண்பட்ட சலபியையும் சரி கண்டு அவர்களின் மேடையில் முழங்கிய இவர், மற்றவர்களுக்காக வெளிநாட்டு நிதி பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்த இவர், இன்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு, மற்றவர்களை அரபு நாட்டு சலிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது கேளிக்கூத்தல்லவா? ஜாக் பெற்ற சல்லிக்காக இவர் சலபிக்கூட்டத்தில் மாரடித்தார் என்று சொல்லலாமா? இதைஎல்லாம் விட ஜாக் வெளிநாட்டு நிதி பெற்று வந்த நிலையில், இவர் ஜாக்கில் இருந்த நிலையில், அல்ஜன்னத் பத்திரிக்கையில் பீஜே ஆசிரியராகவும், கமாலுத்தீன் மதனி வெளியீட்டாளர் ஆகவும் இருந்த காலகட்டத்தில் கேட்கப்பட்ட வெளிநாட்டு நிதி பற்றிய மேற்கண்ட கேள்விக்கு, எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்களுக்கு வரவில்லை என்பதன் அர்த்தம், எனக்கு அதாவது பீஜே எனும் எனக்கு வரவில்லை என்று அர்த்தம் என்று வார்த்தை ஜாலம் காட்டமுடியாது. அப்படி பீஜே தனிப்பட்ட தனக்கு வரவில்லை என்றால், 'நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு நிதி வாங்கவில்லை. ஆனால் நான் சார்ந்துள்ள ஜாக் அமைப்புக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியை தனது அமைப்பு வாங்கிய நிலையில் அதை மறைத்து எங்களுக்கு அப்படி பணம் எதுவும் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ள இவரைத் தெரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தை தூய வடிவில் சொல்ல துவங்கப்பட்ட அல்ஜன்னத்தில் அதன் ஆசிரியரான இவரே ஒரு பொய்யராக இருந்துள்ளார். இவர் நினைத்தால் எதை மறைக்கவும் எத்தனை பொய்யும் சொல்லத் தயங்காதவர் என்று அறிந்துகொள்ளுங்கள். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை: