அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 17 மார்ச், 2012

சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''ஒருவர் பல லட்சம் செலவு செய்து பள்ளிவாசல் கட்டுகிறார். அப்பள்ளிக்குத் தம் பெயரை வைக்க விரும்புகிறார். மார்க்கம் அதை அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு அல்ஜன்னத் மார்ச் 95 அல்ஜன்னத் மாத இதழில் பதிலளித்துள்ள அறிஞர் பீஜே, ''பள்ளிவாசல்கள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.[72 ;18 ] என்ற வசனத்தை முன்வைத்து, ஒரு மனிதரோ ஒரு கூட்டத்தாரோ தம் சொந்த செலவில் பள்ளிவாசலைக் கட்டினாலும் அதில் அவருக்கோ அக்கூட்டத்திற்கோ தனி உரிமை ஏதுமில்லை' என்று கூறிவிட்டு, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானது என்ற எண்ணத்தில் இன்னாருடைய பள்ளி என்று பெயர் சூட்டகூடாது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். பல்வேறு பள்ளிவாசல்கள் உள்ள ஊர்களில் ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசலை அடையாளம் காண்பதற்காக பெயர் சூட்டினால் அதில் தவறேதுமில்லை என்கிறார். அதோடு பள்ளிவாசலை கட்டியவரே தன் பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என்று ஆசைப்படுவது அவரது நோக்கத்தின் தூய்மையின்மையைக் காட்டுகின்றது என்றும் கூறுகிறார்.

ஒருவர் தன் சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டினாலும் அதில் அவருக்கு எந்த உரிமையுமில்லை. எந்த அளவுக்கென்றால் தான் கட்டிய அப்பள்ளியில் தனது பெயரை சூட்டக்கூட உரிமையில்லை என்பது அறிஞர் பீஜே அவர்களின் பதிலின் சாரம்சமாகும். அப்படியே இந்த பதிலை எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசலுக்கு பொருத்திப் பார்ப்போமா? எஸ்.பி. பட்டினத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் சொந்த செலவில் ஒரு பள்ளிவாசலை நிறுவி அதை மக்களின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்து அந்த பள்ளியில் பல ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வருகையில், திடீரென்று ஏதோ தனது சொத்தை விற்பதுபோல் பள்ளிவாசலை அறிஞர் பீஜே அவர்களின் ஜமாத்திற்கு பத்திரம் முடித்து கொடுக்கிறார்கள். அதை பீஜேயும் ஏற்றுக் கொள்கிறார். அதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையில் தொழுகை நடந்துவந்த பள்ளி பூட்டப்பட்டு இன்று பாழடைந்த மண்டபமாய் காட்சி தருகிறது. ஒருவர் தன் சொந்த செலவில் கட்டிய பள்ளிக்கு தன் பெயர் வைப்பதற்கு ஆசைப்பட்டால் அங்கே அவரது நோக்கம் தூய்மையற்றது என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று, அல்லாஹ்வுக்காக மக்களின் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பள்ளியை ஒரு சொத்தைப் போல் பாவித்து அந்த தம்பதி எழுதித் தர முன்வந்தபோது, 'நீங்கள் என்றைக்கு அந்த பள்ளியை மக்களின் தொழுகை பயன்பாட்டுக்கு விட்டுவிட்டீர்களோ அதற்கு  பின்னால் அப்பள்ளி மீது உங்களுக்கு கடுகளவும் உரிமையில்லை. அதை நீங்கள் எங்களுக்கோ வேறு யாருக்கோ நீங்கள் பத்திரம் முடித்து தரமுடியாது. அப்படி நீங்கள் பத்திரம் முடித்து தந்தால், நீங்கள் அந்த பள்ளியை உங்கள் சொந்த சொத்தாக கருதியுள்ளீர்கள் என்று அர்த்தம்.  அப்பள்ளியை கட்டிய உங்களின் நோக்கம் தூய்மையற்றதாகிவிடும் என்று தடுத்தாரா பீஜே? இல்லை. அப்பள்ளியை தனது ஜமாஅத் சொத்தாக்கி கொண்டார். இது பீஜேயின் முரண்பாடில்லையா? மேலும் தொழுகை நடைபெற்று பிறகு பூட்டப்பட்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை மீட்போம் என்று சொல்லும் பீஜே, அல்லாஹ்வை வாங்கிய பள்ளியை பூட்டப்படுவதற்கு காரணமாகி நிற்கிறாரே! இது அல்ஜன்னத்தில் அவர் சொன்ன பதிலுக்கு முரணில்லையா? முதலில் இந்த எஸ்.பி.பட்டினம் பள்ளி மீதான தனது ஜமாஅத்தின் உரிமையை விலக்கிக் கொண்டு அப்பள்ளியை திறந்து அல்லாஹ்வை வழிபடச் செய்து தனது செயலுக்கு பரிகாரம் தேடட்டும்.

கருத்துகள் இல்லை: