அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திங்கள், 19 ஜனவரி, 2009

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரு ஏகத்துவ கடிதம்!

அன்பிற்கினிய சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் 'தங்க பூமி' விருதை வென்று, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மட்டுமன்றி,இந்தியாவின் பிரதமர்-தமிழகமுதல்வர் இப்படி பரவலாக அனைத்து தரப்பாரும் உங்களை வாழ்த்திவரும் நிலையில், நீங்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கத்தையுடைய நாங்கள் மட்டும் வாழ்த்தமுடியாத நிலையில் உள்ளோம். காரணம் மனமின்மையால் அல்ல.மார்க்கம் தடுப்பதால்!

தாங்கள் இஸ்லாத்தின் மீது ஆழமான பற்றுடையவர் என்பதையும், தவறாமல் தொழுகை உள்ளிட்ட அமல்களை நிறைவேற்றுபவர் என்பதையும், ஹஜ் கடமையை முடித்தவர் என்பதையும், தங்களின் உரை துவக்கத்திலும்சரி, பிறர் தங்களை பாரட்டும்போதும்சரி 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று நீங்கள் சொல்ல மறப்பதில்லை என்பதையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.

இருப்பினும் தங்களிடத்தின் அன்போடு இரு கோரிக்கைகள் வைக்கக் விரும்புகிறோம். முதலாவது நீங்கள், பொன்னேரி அருகேயுள்ள பூதூர் என்ற இடத்தில் வாழ்ந்த பாபா அவர்கள்மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்ததாகவும் , நீங்கள் எதை செய்யவிரும்பினாலும் அவரிடத்தில் ஆலோசனை அல்லது ஆசி பெற்றுதான் செய்துவந்ததாகவும், அந்த பாபா மறைவுக்குப்பின் அவரது அடக்கத்தலத்தை தங்களின் நேரடிப்பரமரிப்பில் கவனித்து வருவதாகவும் நீண்ட நாட்களுக்குமுன் பத்திரிக்கையில் படித்த நினைவு. [தவறென்றால் மன்னிக்கவும்]

மேலும், மேற்கண்ட படத்தில் ஒரு தர்காவில் நீங்கள் வழிபடுகிறீர்கள். தர்கா என்பது நல்லடியார் என்று நம்பப்பட்ட ஒருவர் இறந்தவுடன் அவரை அடக்கம் செய்து அவர்இடத்தில் உதவி தேடுவது! அல்லது அவர் மூலம் உதவி தேடுவது! இந்த இரண்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

இறந்தவர்களின் கப்ருகளை உயர்த்தாதீர்கள்- அதை பூசாதீர்கள்-அதில் விளக்கு ஏற்றாதீர்கள்-உங்கள் செருப்பு வார் அறுந்தாலும் அதை அல்லாஹ்விடமே கேளுங்கள் என்றெல்லாம் நமது நபி[ஸல்] அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது அந்த தர்காக்களுக்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து, இறைவனுக்கு இணைவைப்பதை விட்டு விலகுமாறும் உங்களை வேண்டுகிறோம்.

அடுத்து தங்களின் இசைத்துறை என்பது இஸ்லாமிய அடிப்படையில் ஹராம் எனபதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என நம்புகிறோம். 'இசைக்கருவிகளை உடைத்து எறியவே நான் வந்தேன் ' என்ற நபி[ஸல்] அவர்களின் நல்லுபதேசத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த துறையின்மூலம் நீங்கள் எத்துனை கோடிகளை ஈட்டினாலும், எத்துனை விருதுகளை பெற்றாலும் அவை மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதல்ல என்பதையும் பணிவோடு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, சகோதரர் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணக்குங்கள்! அவனுக்கு யாதொன்றையும்/யாரையும் இணையாக்காதீர்கள். இசைத்துறையை விட்டு விலகி, அல்லாஹ் உங்களுக்களித்த அற்புதமான அறிவாற்றலை மார்க்கத்துக்கு உட்பட்ட வேறு துறைகளில் செலுத்துங்கள். அல்லாஹ் தங்கபூமி என்ன! மறுமையில் விலைமதிக்க முடியா தங்க சுவனத்தை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்.

'உபதேசம் செய்யுங்கள்; அது முமீன்களுக்கு பயனளிக்கும்! என்ற அருமறை வாக்கின்படி இந்த மடல் உங்களுக்கு வரையப்பட்டது. அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவன் மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து மரணித்து சுவனம் செல்லும் பாக்கியத்தை அளிப்பானாக!

நலம் விருப்பும் சகோதரன்; முகவை அப்பாஸ்.


படம் நன்றி;தமிழ் முரசு.

2 கருத்துகள்:

அம்சுருவாணி சொன்னது…

இகவும் அருமையான இடுகை திரு அப்பாஸ்

சொல்ல வந்ததை அன்புடனும், அழுத்ததுடனும் சொன்னமைக்கு நன்றி

நானும் இதையே என் பதிவில் சொல்ல முயன்றிருக்கிறேன்

அன்புடன்
அம்சுருவாணி

ஜாஃபர் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோதரர் A.R. ரகுமானுக்கு தாங்கள் எழுதிய கடிதத்தில் "மேலும், மேற்கண்ட படத்தில் ஒரு தர்காவில் நீங்கள் வழிபடுகிறீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த முறையில்தான் அல்லாஹ்வை தாங்கள் வழிபடுகிறீர்களா? தர்கா என்றால் "இறைநேசரின் இல்லம்" என்றும் பொருள் கொள்ளலாம். இறைநேசரின் இல்லத்திற்கு ஒருவர் சென்றால் உடனே வழிபடுவதாக ஏன் சொல்கிறீர்கள்? "ஜியாரத்" என்ற அரபி சொல் இருப்பது தங்களுக்கு தெரியாதா? "ஜியாரத்" செய்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே? "ஜியாரத்" என்று சொல்லாமல் "வழிபாடு" என்று ஏன் மாற்றி சொல்கிறீர்கள்? இந்து மத சகோதரர்கள்தான் "தர்காவிற்கு சென்று வழிபட்டார்கள்" என்று பத்திரிகைகளில் எழுதுவார்கள். அவர்களை போலவே நீங்களும் சொன்னால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? தர்காவிற்கு செல்பவர்கள் "ஜியாரத்" செய்யும் நோக்கத்தோடுதான் செல்கிறார்கள். நீங்கள்தான் இறைவனுக்கு இறைநேசர்களை இணையாக்கி உங்கள் அடிமனதில் தேங்கிக்கிடக்கும் சேற்றை அடுத்தவர் மீது வாரியடித்து பழி போடுகிறீர்கள். இந்த பாவத்திற்கு நிச்சயம் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

"அல்லாஹ்விற்கும் வழிபடுங்கள்; அவனுடைய ரசூலுக்கும் வழிபடுங்கள்" இது இறை வசனம். இந்த இறை வசனத்தில் சொல்லப்பட்ட "வழிபடுங்கள்" என்ற சொல்லுக்கு என்ன பொருள்? மழுப்பல் கூடாது விளக்கம் தேவை. ஏற்கனவே
"இருந்த நிம்மதியையும் பறித்த அவுலியா[!]" என்ற தலைப்பின் கீழிட்ட தங்களின் இடுகைக்கு நான் கொடுத்த பதிலுரைக்கு
இதுவரை தங்களிடமிருந்து பதில் இல்லை என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.