அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சனி, 12 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

தமிழகத்தில் ஜாக், வெளிநாட்டில் நிதி உதவி பெற்று பள்ளிவாசல்கள் எழுப்பி வருகின்றது. அதே போல் இலங்கையில் சில நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற்று, பள்ளிவாசல்கள், மற்றும் நலப்பணிகளை செய்துவருகிறார்கள். இத்தகையோரை பீஜே, அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிக்கிறார். உண்மையில் இவ்வாறு விமர்சிக்கும் அருகதை பீஜே அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் சேலம் நகரில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக பீஜே, இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தரிடம் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் பெற்று அதை அந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு வழங்கினார். இந்த தொகையை வழங்கிய அந்த இலங்கை தனவந்தருக்கு பீஜே நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார். இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

வெளிநாடுகளில் நிதியை வாங்கி, பையில் பணத்தைப் போட்டுக்கொண்டு 'பள்ளிவாசல் வேண்டுமா? என்று ஜாக்கினர் அலைவதாகவும், அதில் அவர்களுக்கு 'பாயிதா'[வருமானம்] கிடைப்பதாகவும், ஜாக்கை விமர்சிக்கும் பீஜே, தனது கொள்கைக்கு மாற்றமாக, இலங்கை தனவந்தரிடம் பள்ளிவாசல் கட்ட பணம் வாங்கியது முரணில்லையா? இல்லையென்றால், அரபுநாட்டு சல்லி அடிக்க மாட்டோம். ஆனால் அண்டை நாட்டு சல்லி அடிப்போம் என்பதுதான் கொள்கையா? தமிழத்தில் இவர் அமைப்பின் சார்பாக எழுப்பப்படுள்ள மர்கஸ்கள், இவரது ஜமாஅத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல்கள், முழுக்க முழுக்க பிழைக்கப் போனவர்களிடம் மட்டுமே வசூலித்து கட்டப்பட்டது என்று காட்டும் வகையில் ஒரு வெள்ளையறிக்கை வெளிடுவாரா பீஜே?

சரி., இலங்கையில் மட்டும் தான் இவர் பணம் வாங்கினாரா என்றால் அரபு நாட்டிலும் வாங்கினார். எந்த வெளிநாட்டிடமிருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெறமாட்டோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் பீஜே, துபையை சேர்ந்த ஒரு சகோதரர் [பெயர் தேவைப்பட்டால் வெளியிடுவோம்] முயற்சியின் பெயரில் ஒரு அரபியிடமிருந்து இப்தார் செலவுக்காக கடந்த 2005 அல்லது 2006 ஆம் ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய்கள் ஜமாஅத் பெறவில்லையா? இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

இதில் இன்னொரு துரோகமும் உள்ளது. அதாவது ஒரு நாள் இப்தார் செலவு 5000 வீதம் ஒரு மாத இப்தார் செலவுக்கான 1 ,50 ,000 ரூபாய்களை அந்த அரபி வழங்கிய பின்னும், அதை மறைத்து நோன்புக் கஞ்சி இன்னும் முழுமையடையவில்லை. எனவே காசு குடுங்கம்மா என்று பாக்கர் மூலமாக ஒவ்வொரு ரமலான் சிறப்பு பயானுக்குப் பின்னும் அறிவிப்புச் செய்ய வைத்தார் பீஜே. இதுபற்றி ஒரு பிரச்சினையில் பீஜே பேசும்போது, ''இப்ப வசூலாகுற காசை வச்சுத்தான் நான் ஒரு வருஷம் ஜமாஅத்தை ஓட்டனும்'ன்னு சொன்னாரே! மறுக்கமுடியுமா? இப்தார் நோக்கத்திற்காக அரபி தந்த தொகையை இப்தாருக்கு செலவு செய்து விட்டு, உள்ளூரில் இப்தார் என்ற பெயரில் வசூலித்த பணத்தைக் கொண்டு ஜமாஅத் நடத்தினார் என்றால், ''நாங்கள் எந்த வகைக்கு என்று வசூலித்தோமா அந்த வகைக்கு மட்டுமே செலவு செய்வோம்'' என்று சொல்லிக் கொள்வது பொய்யில்லையா? நோன்புக்கஞ்சிக்காக தந்த பணத்தை ஜமாஅத் செலவிற்கு பயன்படுத்துவது துரோகமில்லையா?

அடுத்து, இன்னொரு அரபுநாட்டு அரபியிடம் பணம் பெற்ற பீஜே, அந்த பணத்தில் ஒரு தொகையை தர்மபுரியில் உள்ள ததஜ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் போர் [ஆழ்துளைக் கிணறு] அமைக்க பணம் தந்தார். அவ்வாறு போர் அமைத்து அந்த தர்மபுரி நிர்வாகிகள் போட்டோ எடுத்து அனுப்பினார்கள். அந்த போட்டோ சரியில்லை என்று அரபியிடம் பணம் வாங்கித்தந்த வளைகுடா நிர்வாகிகள் சொன்னதையடுத்து, அன்றைய துணைப்பொதுச்செயலர் இக்பால் அவர்களை நேரடியாக தர்மபுரிக்கு அனுப்பி, ''பிர் அஹ்மத்' என்ற என்ற பதாகை வைக்கப்பட்டு, அந்த நீர்நிலை படம்பிடிக்கப்பட்டு, பணம் தந்த அரபிக்கு அனுப்பினார் பீஜே. இதை மறுக்க முடியுமா? அடுத்த இயக்கம் அரபியிடம் முறையாக பணம் பெற்று நலப்பணிகள் செய்தால், அவனை சல்லிக்கு மாரடிப்பவன் என்று விமரிக்கும் பீஜே, இந்த அரபியை தொண்டியிலிருந்து பிழைக்கப் போனவன் என்று சொல்லப்போகிறாரா? 

இதுபோன்று அரபிகளுடன் த த ஜமாத்திற்கு உள்ள தொடர்பு பற்றிய விபரங்கள் ஒரு பட்டியலே உண்டு. விரிவஞ்சி தவிர்க்கிறோம்.

அடுத்து வருவது;
வழிகெட்ட கொள்கை என்று பீஜெயால் வர்ணிக்கப்படும் சலபிக் கொள்கை, அரபு நாட்டு சல்லிக்காக புனிதமான கொள்கையாக பரிணாமம் பெற்ற அதிசயம்.
அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

கருத்துகள் இல்லை: